- Advertisement -

செல்வம் நிலைக்க செந்தூர பரிகாரம்

- Advertisement -

கஷ்டப்பட்டு உழைத்து அரும்பாடு பட்டாலும், ஈட்டிய செல்வத்தை தக்க வைப்பது தான் சிரமமாக இருக்கும். மகாலட்சுமி எல்லோரிடமும் அருளுடன் நடந்து கொள்வது கிடையாது. அதற்கு நாம் செய்யும் சிறு சிறு விஷயங்களும் காரணமாக அமைந்துவிடும். வீட்டில் செல்வம் நிலைக்காமல் இருக்க காரணம் என்ன? அதற்கு செய்ய வேண்டிய பரிகாரம் என்ன? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவலை தான் தொடர்ந்து பார்க்க இருக்கிறோம்.

மகாலட்சுமி எல்லோரிடமும் நிலைக்காமல் இருப்பதற்கு அவர்களுடைய செயல்களும் ஒரு காரணமாக இருக்கிறது என்கிறது வேத சாஸ்திரங்கள். எந்த வீட்டில் அருவருக்கத்தக்க செயல்களையும், சொற்களையும் அதிகம் உபயோகிக்கிறார்களோ, அந்த இடத்தில் எவ்வளவு முயற்சித்தாலும், செல்வம் நிலைப்பது இல்லை. வீடு அதிரும்படி பேசுவது, கத்துவது, கோபப்படுவது என்று எப்போதும் இருந்தால், அந்த வீட்டில் எவ்வளவு முயற்சித்தாலும் செல்வம் நிலைக்காது.

- Advertisement -

எல்லோரையும் போல் பெரிய நிலைக்கு வர வேண்டும் என்று நினைப்பவர்கள், இந்த செயல்களை எல்லாம் தவிர்த்து பாருங்கள். அமங்கலமான சொற்களை பயன்படுத்துவது, இல்லாதவர்களுக்கு இல்லை என்று முகத்தில் அரித்தார் போல் சொல்லுவது, மற்றவர்களுக்கு கொடுக்கும் மனம் இல்லாமல் இருப்பவர்களுக்கு செல்வம் நிலைப்பதில்லை. கொடுத்துப் பாருங்கள் வந்து சேரும் என்கிறது பிரபஞ்சம்.

தாய் ,தந்தை, மனைவி ஆகிய இம்மூவரையும் ஒரு ஆண்மகன் மதிக்காமல் நடந்து கொண்டால் அல்லது அவமானப்படுத்தி துன்பப்படுத்தினால் அந்த வீட்டில் அவன் எவ்வளவு முயற்சி செய்தாலும், செல்வமானது அவனிடம் நிலைக்காது. உழைப்பிற்கு உரிய பலனையும், அவன் அனுபவிக்க வாய்ப்பில்லை. வீட்டில் பெண்கள் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். அழுது கொண்டும், புலம்பிக் கொண்டும் இருந்தால் ஆண் மகனுக்கு தோல்வி தான் கிடைக்கும். அடுத்தவர்களை பற்றி புறம் பேசுபவர்கள் இல்லத்திலும் செல்வம் நிலைப்பதில்லை! இவையெல்லாம் அன்னை மகாலட்சுமிக்கு பிடிக்காத விஷயங்கள் ஆகும்.

- Advertisement -

மேலும் வீட்டை துர்நாற்றம் வீசும் படியாக வைத்துக் கொள்வது, துருப்பிடித்த இரும்பு பொருட்களை பாதுகாப்பது, விஷச் செடிகளை வளர்ப்பது, வீட்டில் விளக்கு ஏற்றாமல் இருப்பது போன்றவற்றை செய்தாலும் அவ்வீட்டில் செல்வங்கள் நிலைப்பதில்லை. இதற்கு பரிகாரமாக செவ்வாய்க்கிழமையில் இதனை செய்யலாம். செல்வங்கள் வீட்டில் நிலைத்து இருக்க, மகாலட்சுமியின் அருள் கிடைக்க செவ்வாய்க்கிழமையில் காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை இப்பரிகாரத்தை செய்யலாம்.

இதையும் படிக்கலாமே:

சிறிதளவு செந்தூரத்தை கையில் வைத்துக் கொண்டு செல்வம் நிலைத்து இருக்க, மகாலட்சுமியை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பின் கையில் இருக்கும் செந்தூரத்தை கடல் நீரில் கரைத்து விட வேண்டும். கடல் நீர் தேடி போக முடியாதவர்கள், வீட்டிலேயே உப்பு கலந்த நீரில் கரைத்து அதனை யாருடைய காலிலும் படாத படி ஊற்றி விடுங்கள். இதனால் நீங்கள் செய்த தவறான வினைகளால் உண்டாக கூடிய தரித்திரங்கள் நீங்கி செல்வமானது நிலைக்கும். உங்களுடைய உழைப்பு அங்கீகரிக்கப்படும். சொத்துக்களும், பணமும் மென்மேலும் அதிகரிக்கும். மகாலட்சுமியும் நிலையாக வீட்டில் தங்குவாள். மேலும் வீட்டை எப்பொழுதும் நறுமணம் வீசும் படி தூபம், சாம்பிராணி போன்றவற்றை காண்பியுங்கள். வீட்டில் துளசி, மாதுளை, பாரிஜாதம், மருதாணி, வேப்பிலை போன்ற மரங்களையும், செடி வகைகளையும் வளர்த்து வாருங்கள். விஷச்செடிகளை அகற்றி, மனம் கமலும் பூ செடிகளையும் வளருங்கள்.

- Advertisement -