- Advertisement -
அழகு குறிப்புகள் | Beauty tips in Tamil

இது மாதிரி ஒரு பெஸ்ட் ஷாம்புவை நீங்க எங்கு தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது. ஷாம்புவை தலைமுடிக்கு இப்படி போட்டால் முடி வளர்வதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

- Advertisement -

எந்த பிராண்ட் ஷாம்புவை பற்றியும் இன்று நாம் பார்க்கப் போவது கிடையாது. எந்த பிராண்ட் ஷாம்புவாக இருந்தாலும் சரி, அது செயற்கை முறையில் சில செயற்கையான பொருட்களை போட்டு தயாரிக்க கூடியது. நீங்கள் எந்த ஷாம்புவை பயன்படுத்தினாலும் சரி, அதில் இருக்கும் கெமிக்கல் உங்களுடைய தலை முடியை நேரடியாக பாதிக்கக் கூடாது என்றால், அந்த ஷாம்புவை வேறு எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பதைப் பற்றிய சில ஐடியாவை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

ஷாம்புவை நேரடியாக அப்படியே தலையில் போடுவதன் மூலமாகத்தான் நம்முடைய ஸ்கால்ப்பில் சில பிரச்சனைகள் வந்து தலைமுடி உதிர்வு ஏற்படுகிறது. பின் சொல்லக் கூடிய ஐடியாக்களை ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமாக உங்களுடைய ஷாம்பும் முடி வளர்ச்சியை அள்ளிக் கொடுக்கும். வாங்க நேரத்தை கடத்தாமல் அழகான முடியை தரும் அழகு குறிப்பு நாமும் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

குறிப்பு 1:
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பெரிய டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். அந்த தண்ணீரில் நறுக்கிய பீட்ரூட் துண்டுகள் சிறிதளவு, ஒரு இன்ச் தோல் சீவி நறுக்கிய இஞ்சி, போட்டு அந்த தண்ணீரை கொதிக்க வையுங்கள். 5 லிருந்து 6 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட்டு, தண்ணீரை வடிகட்டிக் கொள்ளுங்கள். பீட்ரூட் சிவப்பு நிற தண்ணீரில், எலுமிச்சம் பழச்சாறு 1/2 ஸ்பூன், நீங்கள் தலைக்கு தேய்த்து பயன்படுத்தும் ஷாம்பு தேவையான அளவு ஊற்றி, நன்றாக கலந்தால் சூப்பரான பீட்ரூட் சத்து நிறைந்த ஷாம்பு தயார். இந்த ஷாம்புவை தலைக்கு போட்டு குளிங்க. முடி சூப்பரா கரு கருன்னு வளரும்.

குறிப்பு 2:
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 1 பெரிய டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி, 2 கொத்து கருவேப்பிலை, அரிசி 1 டேபிள் ஸ்பூன், போட்டு இந்த தண்ணீரை 10 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வையுங்கள். அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு, கொதிக்க வைக்கவும். பிறகு இதை வடிகட்டி தண்ணீரை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரில் உங்களுடைய தலைக்கு போடும் ஷாம்பு, எந்த பிராண்ட் ஷாம்புவாக இருந்தாலும் 1 ஸ்பூன் அளவு ஊற்றி, நன்றாக கலந்தால் சூப்பரான ஊட்டச்சத்து நிறைந்த ஷாப்பு தயார். இதை தலைக்கு போட்டு குளிக்கலாம்.

- Advertisement -

குறிப்பு 3:
ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரவு முழுவதும் ஊற வைத்த வெந்தயம், தண்ணீரோடு போட்டுக் கொள்ளவும். ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து போட்டுக்கோங்க. கருவேப்பிலை 2 கொத்து, ஆலுவேரா ஜெல் 2 டேபிள் ஸ்பூன் போட்டு இதை நன்றாக அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். இதை ரொம்பவும் திக்காக அரைக்க வேண்டாம். வடிகட்டும் பக்குவத்தில் தண்ணீராக அரைத்துக் கொள்ளுங்கள்.

பச்சை நிறத்தில் ஒரு சாறு நமக்கு கிடைத்திருக்கும் அல்லவா. அதில் ஆலிவ் ஆயில் 1 ஸ்பூன், நீங்கள் தலைக்கு பயன்படுத்தும் ஷாம்பு 1 டேபிள் ஸ்பூன், ஊற்றி நன்றாக கலந்தால் சூப்பரான ஷாம்பு தயார். இதை தலைக்கு போட்டு குளித்தால் உங்களுடைய தலைமுடி இன்ஸ்டன்டாக சில்க்கியாக சூப்பராக மாறும். அதே சமயம் முடிக்கு தேவையான ஊட்டச்சத்தும் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: வெள்ளரிக்காய் கண்களுக்கு மட்டுமல்ல ஃபேஸ் பேக் போட்டாலும் முகம் பளிச்சென்று இளமையாக மாறும் தெரியுமா? வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக் போடுவது எப்படி?

குறிப்பு 4:
இதற்கெல்லாம் எங்களுக்கு நேரமே கிடைக்கவில்லை என்று சொல்பவர்கள், நீங்கள் வெறும் அரிசி வடித்த கஞ்சி, இல்லையென்றால் அரிசி கழுவிய தண்ணீரில், ஷாம்புவை ஊற்றி நன்றாக கலந்து தலைக்கு போட்டு தேய்த்துக் குளித்து கொள்ளுங்கள் போதும். தலைமுடி கடகடவென வளரும். ஷாம்பூவை நேரடியாக தலைக்கு போடுவதை விட, மேலே சொன்ன குறிப்புகளை ஒவ்வொன்றாக முயற்சி செய்து பாருங்கள். எல்லாமே இயற்கையாக நாம் கண்டுபிடித்து உள்ள ஐடியாக்கள். பிடித்திருந்தால் முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -