வெள்ளரிக்காய் கண்களுக்கு மட்டுமல்ல ஃபேஸ் பேக் போட்டாலும் முகம் பளிச்சென்று இளமையாக மாறும் தெரியுமா? வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக் போடுவது எப்படி?

vellarikkai-face
- Advertisement -

பொதுவாக பார்லருக்கு சென்றாலே கண்களில் ஒரு வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கி வைத்து விடுவார்கள். இது கண்களுக்கு நல்ல ஒரு குளிர்ச்சியை ஏற்படுத்தி கருவளையங்களை மறைய செய்யும் ஆற்றல் கொண்டது. வெள்ளரிக்காய் கண்களுக்கு மட்டுமல்ல, நம்முடைய சரும ஆரோக்கியத்திற்கும் சிறந்த ஒரு பொருளாக இருக்கிறது. அதை எப்படி ஃபேஸ் பேக் போட்டு பயனடையலாம்? என்பதைத் தான் இந்த அழகு குறிப்பு சார்ந்த ரகசியங்களின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

வெள்ளரிக்காய் சாறு சிறந்த ஒரு டோனராக செயல்படுகிறது. இது சருமத்தில் இருக்கும் அழுக்குகளையும், கிருமிகளையும் நீக்கி சுத்தப்படுத்துகிறது. முதலில் வெள்ளரிக்காயுடன் சிறிதளவு கற்றாழை ஜெல்லை சேர்த்து நைசாக பேஸ்ட் போல அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதை முகம் முழுவதும் தடவி மசாஜ் செய்து முகத்தில் இருக்கும் அழுக்குகளை வெளியில் அகற்றுங்கள்.

- Advertisement -

பின்னர் குளிர்ந்த நீரினால் கழுவினால் முகத்தில் இருக்கக் கூடிய இறந்த செல்கள், அழுக்குகள் அனைத்தும் நீங்கி முகம் சுத்தமாகிவிடும். பிறகு நான்கைந்து வெள்ளரிக்காய் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள். 6 லிருந்து 7 நிமிடங்கள் நன்கு கொதித்த பின்பு ஆற வைத்துக் கொள்ளுங்கள். ஆறியதும் அதை ஒரு ஸ்பிரே பாட்டில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள் அல்லது ஏதாவது ஒரு கண்டெய்னரில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

இதனுடன் கொஞ்சம் பன்னீரையும் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் முகத்திற்கு இது போல மசாஜ் செய்த பின்பு இந்த தண்ணீரால் முகத்தை டோன் செய்ய வேண்டும். முகத்தில் இதை ஸ்பிரே செய்து ஒரு ஐந்து நிமிடம் அப்படியே விட்டுவிட்டு பின்பு துடைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதனால் முகம் மேலும் மென்மையாகவும், மிருதுவாகவும், ஈரப்பதத்துடன் இருக்கும். இந்த வெள்ளரிக்காய் நீரை மூன்று நாட்களுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது.

- Advertisement -

அதன் பிறகு வெள்ளரிக்காய் துண்டுகளை மிக்ஸியில் போட்டு, அதனுடன் நான்கைந்து சொட்டுக்கள் பாதாம் எண்ணெய் விட்டு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்து இந்த விழுதை முகம், கழுத்து, கை, கால் போன்ற பகுதிகளில் தடவி நன்கு உலர விட்டுவிடலாம். ஒரு 20 நிமிடம் உலர விட்டு விட்டால் காய்ந்து விடும். அதன் பிறகு நீங்கள் ஈரத் துணியை வைத்து துடைத்து எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் முகத்திற்கு நல்ல ஒரு பொலிவு கிடைக்கும். சரும பிரச்சனைகள் யாவும் நீங்கும்.

இதையும் படிக்கலாமே:
முக சுருக்கம், முகக் கருமை, முகப்பரு இந்த 3 பிரச்சனையையும் சரி செய்ய 3 தக்காளி இருந்தால் போதும். நீங்களே ஆச்சர்யப்படும் அளவிற்கு உங்கள் முகத்தில் நல்ல மாற்றம் இருக்கும்.

வெள்ளரிக்காய் துண்டுகளை மைய அரைத்து அதனுடன் கொஞ்சம் கடலை மாவை சேர்த்து பேஸ்ட் போல கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அதை முகத்தில் தடவி நன்கு உலர விட்டு கழுவினால், கருப்பான சருமமும் நல்ல ஒரு நிறத்தை கொடுக்கக் கூடியதாக மாறும். சருமத்தில் இருக்கும் முகப்பருக்கள் நீங்கவும் இது போல செய்து வரலாம். முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள் நீங்க வாரம் இரு முறை இதை செய்து பாருங்கள், நல்ல ஒரு ரிசல்ட் கிடைக்கும். இனி வெள்ளரிக்காயை கண்களுக்கு மட்டுமல்ல, முகத்திற்கும் இது போல பயன்படுத்தி பயனடையலாமே!

- Advertisement -