
பௌர்ணமி மற்றும் அமாவாசை நிறைவடைய கூடிய நேரத்தில் வரக்கூடிய நேரம் ஆக தான் சோடச கலை நேரம் திகழ்கிறது. இந்த ஷோடச கலை நேரத்தில் நாம் செய்யக்கூடிய எந்த ஒரு நியாயமான வேண்டுதலாக இருந்தாலும் அந்த வேண்டுதல் நிறைவேறும் என்று கூறப்படுகிறது. மேலும் அன்றைய நாளில் அந்த நேரத்தில் நாம் முப்பெரும் தேவர்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரையும் ஒருசேர தத்தாதாரேயராக வழிபாடு செய்யும்பொழுது அவரின் அருளால் நம்முடைய நியாயமான வேண்டுதல் நிறைவேறும். அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஒரு மாதத்தில் 16 திதிகள் வரும் என்றும் 17வது திதியாக வருவது தான் சோடச திதி என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட நேரத்தில் முப்பெரும் தேவர்கள் ஒன்றாக சேர்ந்து இருக்கக்கூடிய தத்தாத்ரேயராக வழிபாடு செய்யும்பொழுது அவர் நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு சதாப்து என்று கூறுவார் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தத்தாத்ரேயரின் மந்திரத்தை சோடச கலை நேரத்தில் கூறுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அந்த வகையில் புரட்டாசி மாதத்தின் பௌர்ணமி என்பது அக்டோபர் மாதம் ஏழாம் தேதி காலை 9:50 மணிக்கு நிறைவடைகிறது. அதனால் பௌர்ணமி திதி நிறைவடைவதற்கு முன்பாக இருக்கக்கூடிய ஒரு மணி நேரமான 8:50 மணியிலிருந்தும் பௌர்ணமி திதி நிறைவடைந்த பிறகு வரக்கூடிய முதல் ஒரு மணி நேரமான 10 50 மணிக்குள் இந்த ஐந்து வினாடிகள் என்பது வரும்.
அதனால் இந்த இரண்டு மணி நேரமும் நாம் நேர்மறையான எண்ணங்களை நினைத்து நம்முடைய வேண்டுதல் முற்றிலும் நிறைவேறி விட்டதாக மனதார நினைத்து சந்தோஷப்பட வேண்டும்வேண்டும். அதோடு சேர்த்து பின்வரும் தத்தாத்ரேயரின் மந்திரத்தை நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் கூறுவதன் மூலம் முப்பெரும் தேவர்களின் அருளை பரிபூரணமாக பெற முடியும்.
” ஓம் ஸ்ரீ தத்தாத்ரேய நமஹ “
இதையும் படிக்கலாமே: நினைத்ததை நிறைவேற்றும் முருகன் மந்திரம்
சிறப்பு மிகுந்த புரட்டாசி பௌர்ணமி நிறைவடையும் பொழுது வரக்கூடிய இந்த சோடசக் கலை நேரத்தை சரியாகவும் முழுமையாகவும் பயன்படுத்துபவர்களுக்கு அவர்களுடைய நியாயமான வேண்டுதல் விரைவில் நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.