- Advertisement -

சிவபெருமான் வசிய விபூதி தயார் செய்யும் முறை

- Advertisement -

இந்த உலகத்தில் எல்லாம், உங்கள் வசமாக வேண்டும் என்றால், நீங்கள் சிவமயமாக வேண்டும். சிவனை மனம் உருகி வழிபாடு செய்பவர்களுக்கு நிச்சயம் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். சிவபெருமானின் பரிபூரண ஆசி உங்களுக்கு கிடைக்க, வசிய திலகத்தை எப்படி தயார் செய்வது என்பதை பற்றித்தான் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

இந்த விபூதியை பின் சொல்லக்கூடிய மந்திரத்தை சொல்லி, உரு ஏற்றி தயார் செய்து வைத்துக் கொண்டால், இந்த வசிய விபூதியை இட்டுக் கொண்டு நீங்கள் எந்த காரியத்தை தொடங்கினாலும் அதன் மூலம் உங்களுக்கு வெற்றி மட்டுமே கிடைக்கும்.

- Advertisement -

சிவபெருமான் வசிய விபூதி

சிவபெருமானுக்கு உரிய திங்கட்கிழமை அன்று இந்த விபூதியை வீட்டில் இருந்தபடியே தயார் செய்யலாம், அல்லது பிரதோஷ நாளில், பிரதோஷ நேரத்தில், இந்த விபூதிக்கு சக்தி கொடுத்து தயார் செய்து வீட்டில் வைக்கலாம். அது உங்களுடைய சௌகரியத்தை பொறுத்தது. இந்த விபூதி தயார் செய்ய முதலில் உங்களுக்கு தேவையான பொருள் பசுஞ்சாண விபூதி. நாட்டு மருந்து கடைகளில் சொல்லி வைத்து ஒரிஜினல் பசும் சாணத்தால் செய்யப்பட்ட விபூதியை வாங்கிக் கொள்ளுங்கள். அப்போதுதான் இந்த திலகத்தின் மூலம் நீங்கள் முழு பலனையும் பெற முடியும்.

பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு சிவபெருமானை மனதார நினைத்துக் கொள்ளுங்கள். பசு சான விபூதியை ஒரு தாம்பூல தட்டில் பரப்பி கொட்டி வையுங்கள். ஒரு வெற்றிலை காம்பு அல்லது ஏதாவது பூக்களின் காம்பை கொண்டு அந்த விபூதியில் ‘ஓம் நமசிவாய’ என்ற நாமத்தை எழுதி விடுங்கள். அந்த தட்டு அப்படியே பூஜை அறையில் இருக்கட்டும். இந்த விபூதிக்கு முன்பாக அமர்ந்து பின் சொல்லக்கூடிய இந்த மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். மனதை ஒருநிலைப்படுத்தி அந்த சிவபெருமானை மட்டும் நினைத்து இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.

- Advertisement -

வசிய சக்தியை தரும் சிவ மந்திரம்

ஓம் நமசிவாய நம
சர்வ சக்தி ஓங்காரசக்தி
பிரணவ பொருளே பஞ்சாக்ஷரமே
பிரபஞ்ச சக்தியே
சர்வ காரிய சித்தி சக்தியே
சர்வ ஜெய சக்தியே
ஓம் மசிநசி
அங் மங் சங்
ஆதார சக்தியே சுவாஹா

இந்த மந்திரத்தை 108 முறை சொல்லிவிட்டு கற்பூர ஆரத்தி காண்பித்து சிவபெருமானை வழிபாடு செய்து கொள்ளுங்கள். ஒரு நாள் முழுவதும் இந்த விபூதி பூஜை அறையில் இருக்கட்டும். மறுநாள் இந்த விபூதியை சேகரித்து ஒரு டப்பாவில் கொட்டி வைத்துக் கொள்ளுங்கள். வெளியில் செல்லும்போது, முக்கியமான வேலைகளுக்காக செல்லும்போது, நமசிவாய மந்திரத்தை ஒருமுறை சொல்லி இந்த விபூதியை நெற்றியில் இட்டுக் கொண்டால் சிவபெருமான் உங்களுடன் துணையாக வருவார்.

இதையும் படிக்கலாமே: பணத்திற்கு ஏற்பட்ட கண் திருஷ்டி நீங்க பரிகாரம்

நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றிக்கொடுப்பார். வாழ்க்கையில் சீக்கிரம் முன்னேறிவிடலாம். நம்பிக்கையுடன் இந்த வழிபாட்டை செய்து பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு ஈசனின் ஆசிர்வாதம் கிடைக்கும் நல்லது நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -