எல்லோருக்கும் இருக்கக்கூடிய ஆசைதான் இது. கடன் தொல்லை இருக்கவே கூடாது. வருமானம் மட்டும் பல மடங்கு உயர வேண்டும் என்று நினைப்போம். நம்முடைய இந்த ஆசை நிறைவேற வேண்டும் என்றால், பணத்தை சம்பாதிக்க நிச்சயம் கஷ்டப்பட்டு அயராது உழைக்க வேண்டும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.
இருந்தாலும் உங்க கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றி, பண வரவை அதிகரிக்க உதவக்கூடிய இது போன்ற தாந்திரீக பரிகாரங்களும் ஏதாவது ஒரு வகையில் உங்களுக்கு உதவியை செய்யும். அந்த வகையில் உங்கள் வீட்டு பீரோவில் பணம் சேருவதற்கு தடையாக இருக்கும் கண் திருஷ்டியை நீக்குவதற்கு, உண்டான ஒரு எளிமையான ஆன்மீகம் சொல்லும் தாந்திரீக பரிகாரத்தை இப்போது பார்த்து விடுவோமா.
பணத்தில் இருக்கும் கண் திருஷ்டி விலக
இந்த பரிகாரத்தை நீங்கள் எந்த ஞாயிற்றுக்கிழமை செய்தாலும் சிறப்பு. இருந்தாலும் இன்று ஆடி மாதம் வந்திருக்கக்கூடிய கடைசி ஞாயிற்றுக்கிழமை. அம்பாளை மனதார நினைத்துக் கொண்டு இந்த பரிகாரத்தை செய்யும் போது பலன் அதிவிரைவாக கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இன்று இந்த பரிகாரத்தை செய்ய தவற விட்டவர்கள் அடுத்த ஞாயிற்றுக்கிழமையும் செய்யலாம் தவறு கிடையாது. இந்த பரிகாரத்திற்கு உங்களுக்கு தேவை ஒரே ஒரு எலுமிச்சம் பழம் தான்.
அந்த எலுமிச்சம் பழத்தை வாங்கிக் கொள்ளுங்கள். பேரம் பேசாமல் மஞ்சள் நிறத்தில் இருக்கும் எலுமிச்சம் பழத்தை வாங்கி, வீட்டிற்கு கொண்டு வரவும். இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு இந்த எலுமிச்சம் பழத்தை உள்ளங்கைகளில் வைத்துக் கொள்ளுங்கள்.
உங்களுடைய தலையை மூன்று முறை வலது பக்கமாக சுற்றுங்கள். எலுமிச்சம் பழத்தை கையில் வைத்துக் கொண்டே ‘எனக்கு நிறைய பணம் வருமானமாக வருகிறது, ஒரு ரூபாய் கூட கடன் இல்லை, செல்வ செழிப்பில் நான் பெரிய குபேரராக மாறிவிட்டேன், இன்னும் மேலும் மேலும் வருமானம் பெருகிக்கொண்டே செல்ல நிறைய வாய்ப்புகள் இருக்கிறது’ என்று நேர்மறையான இந்த வார்த்தைகளை சொல்லி, அந்த எலுமிச்சம் பழத்தை பீரோவில் வைத்து விடுங்கள்.
ஞாயிற்றுக்கிழமை இந்த எலுமிச்சம்பழத்தை பீரோவில் வைப்பதன் மூலம் உங்களுடைய பண வரவில் இருக்கக்கூடிய கண் திருஷ்டி நீங்கும் என்பது நம்பிக்கை. குலதெய்வத்திடமும் ஆசீர்வாதம் பெற்று இந்த பரிகாரத்தை செய்யவும்.
அடுத்தவர்கள் உங்களை பார்த்து கட்டாயம் கேட்டிருப்பார்கள். ‘உங்களுக்கு என்ன. நீங்க எல்லாம் பணக்காரங்க, நிம்மதியா இருப்கீங்க’ அப்படின்னு நிச்சயமா யாராவது ஒருத்தர் நிச்சயம் உங்களை பார்த்து சொல்வார்கள். அந்த கண் திருஷ்டியை நீக்குவதற்கு இந்த எளிமையான பரிகாரம் பயன்படும்.
உங்களுடைய சம்பளத்தை பார்த்தோ அல்லது வியாபாரத்தில் வரும் லாபத்தை பார்த்தோ யாராவது பெருமூச்சு விட்டிருந்தால் அந்த பணத்தை கொண்டு வந்து நீங்கள் பீரோவில் வைக்கும் போது, அந்த பணம் வீண் விரைய செலவு ஆகும். பீரோவில் தங்காது. அது மட்டும் இல்லாமல் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையையும் உங்களுக்கு உண்டாக்கி விடும். அப்பேற்பட்ட கொடிய கண் திருஷ்டியை இந்த ஒரு எலுமிச்சம் பழம் நீக்கிவிடும். நம் கையில் வைத்துக் கொண்டு என்ன வேண்டுகின்றோமோ, அதை தரக்கூடிய சக்தி இந்த எலுமிச்சம் பழத்திற்கு இருக்கிறது.
இதையும் படிக்கலாமே: வீட்டில் பணம் பெருக பரிகாரம்
இதுபோல நேர்மறையாக மேல் சொன்ன விஷயங்களை சொல்லி, எலுமிச்சம் பழத்தை பீரோவில் வைத்தால் பீரோ முழுவதும் நேர்மறை ஆற்றல் நிறைந்துவிடும். எதிர்மறை ஆற்றலை இந்த எலுமிச்சம் பழமே வெளியேற்றி விடும். இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த எலுமிச்சம் பழத்தை பீரோவுக்குள் வைத்துவிட்டு சரியாக மூன்று நாள் கழித்து அந்த எலுமிச்சம் பழத்தை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விடவும். இதற்கு இடையே அந்த எலுமிச்சம் பழம் காய்ந்து போகாமல், அழுகிவிட்டால் அதை எடுத்து உடனே தூர போட்டு விடலாம்.