- Advertisement -
- Advertisement -

எல்லா கோவில்களுக்குமே நாம போகும்போது, அந்த கோவிலை வழிபாடு செய்வதற்கு என்று ஒரு முறை இருக்கும். உதாரணத்திற்கு பெருமாள் கோவிலுக்கு சென்றால், தாயாரை முதலில் தரிசனம் செய்ய வேண்டும் என்று சொல்லுவார்கள்.

அது போல சிவன் கோவிலுக்கு சென்றால் சிவபெருமானை எப்படி வழிபாடு செய்வது, இதில் உள்ள ஒரு சூட்சமமான ரகசியத்தை தான் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த பதிவில் உங்களுக்கு உடன்பாடு இருந்தால், இதை இனி வரக்கூடிய நாட்களில் நீங்களும் பின்பற்றி பலன் அடையலாம்.

- Advertisement -

சிவன் கோவிலுக்கு சென்றவுடன் முதலில் கோவிலில் இருக்கும் கோபுரத்தை தரிசனம் செய்து கொள்ளுங்கள். பிறகு கொடி மரத்தடியில் நமஸ்காரம் செய்து கொண்டு, பிள்ளையாரையும் முருகரையும் வணங்கி விட்டு, கோவிலுக்குள் நுழையவும். சன்னிதானத்தில் உள்ளே இருக்கும் துர்க்கை அம்மனை வழிபாடு செய்துவிட்டு, பிறகு சனீஸ்வர சன்னிதானத்திற்கு முன்பாக வந்து, சனீஸ்வரருக்கு பக்கவாட்டில் நின்று பணிவோடு வணங்கிக் கொள்ளவும்.

அதன் பிறகு சிவன் கோவிலில் இருக்கும் லிங்கோத்பவர்களை நமஸ்காரம் செய்து கொண்டு, அடுத்து சண்டிகேஸ்வரரை வந்து தரிசனம் செய்து, உங்களுடைய பெயரை மூன்று முறை சொல்லி நீங்கள் சிவன் கோவிலுக்கு வந்திருப்பதாக சண்டிகேஸ்வரனிடம் ஒரு அட்டனன்சை போட்டு விடுங்கள்.

- Advertisement -

பிறகு மூன்று முறை கோவிலை வலம் வரவும். மூன்றாவது முறை கோவிலை வரம் வரும்போது சண்டிகேஸ்வரிடம் சிறிது நேரம் நின்று, சிவன் கோவிலில் இருந்து நான் எதையும் எடுத்துச் செல்லவில்லை என்று இரண்டு கைகளையும் சண்டிகேஸ்வரிடம் காட்டிவிட்டு, சண்டிகேஸ்வரிடம் உங்களுடைய வேண்டுதலை வைத்துவிட்டு, பிறகு நீங்கள் சிவனை தரிசனம் செய்வதற்காக வர வேண்டும்.

சிவபெருமானை நீங்கள் தரிசனம் செய்வதற்கு முன்பாகவே உங்களுடைய கோரிக்கைகளை சண்டிகேஸ்வரர், சிவபெருமானிடம் வைத்துவிடுவார். பிறகு நீங்கள் சிவபெருமானை கண்குளிர பார்த்து வழிபாட்டை மேற்கொண்டு, பிறகு வீட்டிற்கு திரும்பினால் போதும். எதற்காக இந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும். எதற்காக மற்ற இறைவனை எல்லாம் வழிபாடு செய்த பிறகு சிவபெருமானை சரணடைய வேண்டும் என்று பல பேருக்கு சிந்தனை வரலாம்.

- Advertisement -

எத்தனை இறைவன் இருந்தாலும், எதனை வழிபாடு மேற்கொண்டாலும் இறுதியாக நாம் செல்லக்கூடிய இடம் அந்த சிவபெருமானின் பாதங்கள் மட்டும்தான். ஆகவே எல்லா வழிபாட்டையும் முடித்துவிட்டு எல்லா கடமைகளையும் முடித்துவிட்டு இறுதியாக சிவபெருமானை தரிசனம் செய்வது நமக்கு கோடான கோடி புண்ணியத்தை பெற்று தரும். சில சிவனடியார்களுக்கு எல்லாம் கோவிலில் இருக்கும் மற்ற தெய்வங்கள் கண்களுக்கு தெரியவே தெரியாது.

இதையும் படிக்கலாமே: தெய்வ சக்தி 5 அறிகுறிகள்

வந்தவுடன் நேராக ஈசனை சென்று தரிசனம் செய்வார்கள். அது அவரவர் மனதை பொருத்தது. அவனை எப்படி கும்பிட்டால் என்ன பாசத்தோடு சிவசிவா என்று சொன்னாலே நாம் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து விடுவான் அல்லவா. ஈசன் அவன் பாதத்தில் உங்களுக்கான இடத்தை கொடுப்பான். இருப்பினும் மேல சொன்ன வழிபாட்டு முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் இதை பின்பற்றி பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் பெரிய அளவில் நல்ல மாற்றங்கள் நிகழும் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -
Published by