நம் வீட்டில் தெய்வசக்தி இருப்பதாக இருந்தால், இந்த அறிகுறிகள் எல்லாம் தோன்றும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. வீட்டில் தெய்வ சக்தி இருக்கிறதா? இல்லையா? என்பதை எளிதாக நாம் தெரிந்து கொள்ளக்கூடிய நல்ல வழிகளாக இவற்றைப் பார்க்கலாம். வீட்டில் தெய்வீக ஆற்றல் நிறைந்திருப்பதை உணர்த்துவதாக நம்பப்படும் சில அறிகுறிகள் என்னன்ன? என்பதை இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் பகிர்ந்து கொள்கிறோம்.
உங்கள் வீட்டில் பல்லிகளின் சத்தம் வழக்கத்தை விட அதிகமாகவும், குறிப்பாக நல்ல காரியங்கள் நடக்கும் சமயங்களிலும் கேட்டால், அது சுப சகுணமாகக் கருதப்படுகிறது. சில சமயங்களில் பல்லியின் சத்தம் தெய்வ சக்தியின் இருப்பை உணர்த்துவதாக நம்பப்படுகிறது. பல்லி வீட்டில் இருந்தாலே அது நல்ல சகுனம் தான். குறிப்பாக பூஜை அறையில் இருப்பது அதிர்ஷ்டம் தரும்.
பொதுவாக காகங்கள் நாம் கூப்பிடாமலேயே வீட்டிற்கு வருவது அல்லது அடிக்கடி வந்து கரைவது நல்ல சகுனமாகப் பார்க்கப்படுகிறது. கதவு அல்லது ஜன்னல்களில் வந்து அமர்வது, முற்றத்தில் வந்து கரைவது போன்றவை முன்னோர்களின் ஆசிர்வாதத்தையும், வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிப்பதையும் குறிப்பதாகப் பலரும் நம்புகின்றனர்.
நீங்கள் வீட்டில் தீபம் ஏற்றும் போது, அதன் சுடர் வழக்கத்தை விட பெரிதாகவும், பிரகாசமாகவும், அசைவின்றியும் எரியுமானால், அது வீட்டில் தெய்வ சக்தி நிறைந்திருப்பதற்கான ஒரு முக்கிய அறிகுறியாகக் கருதப்படுகிறது. இது தெய்வங்களின் அருள் அந்த வீட்டில் நிலைத்திருப்பதை உணர்த்தும். தீபம் பெரிதாக சுடர் விட்டு நின்று எரிய வேண்டும். பூஜையில் இப்போது சிறு கண்ணாடி ஒன்றை வைத்திருப்பது நல்லது. இந்த கண்ணாடியில் முன்னோர்களும், குலதெய்வம் வந்து வாசம் செய்வார்கள் என்பது ஐதீகம்.
பூஜை அறையிலோ அல்லது வீட்டின் மற்ற பகுதிகளிலோ பன்னீர், கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, ஜவ்வாது, குங்குமம், மஞ்சள், விபூதி, சந்தனம், மல்லிப்பூ போன்ற தெய்வீகப் பொருட்களின் நறுமணம் நீங்கள் பயன்படுத்தாமலேயே திடீரென வீசுமானால், அது வீட்டில் தெய்வ சக்தி நிறைந்திருப்பதற்கான முக்கியமான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. இது தெய்வீக சக்தியின் பிரசன்னத்தை நமக்கு உணர்த்துகிறது.
உங்கள் வீட்டில் எப்போதும் ஒருவித அமைதியும், நிம்மதியும் நிலவுவதோடு, வீட்டில் இருப்பவர்கள் நேர்மறை சிந்தனைகளுடனும், அன்பாகவும் பழகினால், அது தெய்வீக ஆற்றல் அந்த வீட்டில் நிறைந்திருப்பதைக் குறிக்கும். சிறிய விஷயங்களுக்கும் சண்டைகள் வராமல், ஒரு சுமுகமான சூழல் நிலவுவது தெய்வ சக்தியின் இருப்பை உறுதிப்படுத்தும். இது வீட்டில் உள்ளவர்களின் மன அமைதியையும், ஆன்மீக வளர்ச்சியையும் மேம்படுத்தும்.
இதையும் படிக்கலாமே:
மருதாணி செடி யோகம்
இந்த அறிகுறிகள் யாவும் நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்தவை. உங்கள் வீட்டில் இந்த அறிகுறிகள் தென்பட்டால், அது உங்களுக்கு ஒருவித மன அமைதியையும், நேர்மறை எண்ணங்களையும் ஏற்படுத்தும். தெய்வீக சக்தி நம்முடன் எப்போதும் அருள்பாளிப்பாக நம்பிக்கை உண்டாகும். ஆன்மீக ரீதியாக இவை மேலும் உங்களை ஊக்குவிக்கும். இந்த அறிகுறிகள் உங்களுக்குப் புதிய நம்பிக்கையை அளித்து, தெய்வீக ஆற்றலை ஈர்த்து, குடும்பத்தில் சுபீட்சத்தையும், தனிமனித ஒழுக்கத்தையும், சாதிக்க முனைப்பையும் கொடுக்கும். தெய்வீக சக்தி எல்லார் வீட்டிலும் இருப்பதில்லை, எனவே இந்த அறிகுறிகள் இருந்தால், தவறாமல் இறை வழிபாட்டை தொடந்து மேற்கொண்டு வாருங்கள்.