- Advertisement -
பொது பலன்

ஜோதிடம் : இன்று எந்த ராசிக்காரர்கள் சிவனை எப்படி வழிபட்டால் அதிக பலன் உண்டு தெரியுமா

எல்லாம் சிவமயம் என்பது சிவனை முழுமுதல் தெய்வமாக வழிபடுபவர்களின் தத்துவம் ஆகும். அப்படியான சிவபெருமானை வழிபட்டு அவரின் அருளை பெறுவதற்கான ஒரு சிறப்பான தினம் தான் மகா சிவராத்திரி தினம். இத்தினத்தில் 12 ராசியினரும் சிவனை எப்படி வழிபடுவதால் சிறந்த பலன்களை பெறலாம் என இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்:

- Advertisement -

மேஷ ராசிக்காரர்கள் சிவ ராத்திரி சிவனை வழிபடுவதோடு தினத்தன்று பசும்பால் மற்றும் தயிரை சிவலிங்க அபிஷேகத்திற்கு தானம் தந்து, ஊமத்தை பூக்களை சிவனுக்கு சமர்ப்பித்து, கற்பூரம் ஏற்றி சிவனை வழிபடுவதால் சிவனின் முழுமையான அருளை பெற்று நல்வாழ்க்கை வாழ்வார்கள்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்கள் சிவராத்திரி தினத்தன்று சிவனை வழிபடுவதோடு எந்த ஒரு சிவன் கோயிலுக்கும் சென்று சிவபெருமானுக்கு கரும்பு சாறு அபிஷேகம் மற்றும் மல்லிகை பூ அத்தர் வாசனை திரவியம் செய்து வழிபட வேண்டும். மேலும் சிவனுக்கு ஆரத்தி பூஜை செய்து வழிபடுவதால் நன்மைகள் பல உண்டாகும்.

- Advertisement -

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்கள் சிவராத்திரி தினத்தில் சிவனின் முழுமையான அருளை பெறுவதற்கு, அன்று ஸ்படிகம் கல்லில் செய்யப்பட்ட சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு. மேலும் சிவனுக்கு சந்தனம், குங்குமம் மற்றும் வாசனை திரவியம் போன்றவற்றால் அபிஷேகம் செய்து வழிபடுவதால் நீங்கள் எண்ணிய காரியங்கள் ஈடேறும்.

கடகம்:

சந்திரனை தனது தலையில் சூடியிருக்கும் சந்திரசேகரனான சிவபெருமானை கடக ராசியினர் சிவராத்திரி தினத்தன்று வழிபடுவது மிகுந்த நன்மை பயக்கும். இந்த ராசியினர் சிவபெருமானுக்கு அஷ்டகந்த பொடி மற்றும் சந்தனம் சாற்றி, சப்பாத்தி மற்றும் இலந்தை பழங்களை சிவனுக்கு நைவேத்தியம் வைத்து வழிபட வேண்டும்.

- Advertisement -

சிம்மம்:

சூரியனின் வீடான சிம்ம ராசிக்காரர்கள் சிவராத்திரி அன்று சிவலிங்கத்திற்கு பல சாறுகள் மற்றும் சர்க்கரை கலந்த பானங்கள் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும். வாசமிக்க பூக்களை மாலையாக கோர்த்து சிவலிங்கத்திற்கு அணிவித்து, இனிப்புகளை நைவேத்தியம் வைத்து சிவ பெருமானை வழிபட வேண்டும்.

கன்னி:

சிவராத்திரி தினத்தில் சிவனின் அருளை பெற கன்னி ராசியினர் வில்வ இலைகளை கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். மேலும் ஊமத்தை பூக்கள், வாசமிக்க மலர்களின் மாலை சாற்றி, இனிப்புகள் மற்றும் இலந்தை பழங்களை நைவேத்தியம் செய்து, கற்பூரம் ஏற்றி சிவபெருமானை வழிபட வேண்டும்.

துலாம்:

சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த வீடான துலாம் ராசியினர் சிவராத்திரி தினத்தன்று சிவனுக்கு மல்லிகை ரோஜா மலர்கள் சமர்ப்பித்து, வில்வ இலைகளால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து, சந்தனம் சாற்றி, சமைத்த அரிசியை நைவேத்தியம் வைத்து சிவனை வழிபடுவதால் சிவனின் முழுமையான அருளை பெறலாம்.

விருச்சிகம்:

விருச்சிக ராசியினர் சிவராத்திரி அன்று சிவலிங்கத்திற்கு முதலில் சுத்தமான தண்ணீரை ஊற்றி சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும். பிறகு சுத்தமான பசு மாட்டு வெண்ணை மற்றும் தேன் ஊற்றி அபிஷேகம் செய்து, தீபாராதனை காட்டி வழிபடுவதால் சிவனின் முழுமையான அருளை பெறலாம்.

தனுசு:

குரு பகவானின் ஆதிக்கம் மிகுந்த தனுசு ராசியினர் சிவராத்திரி தினத்தன்று சிவலிங்கத்திற்கு வில்வ இலைகளை கொண்டு சிவலிங்கத்திற்கு அர்ச்சனை செய்து, வாசமிக்க மலர்களை சாற்றி, காய்ந்த பழங்களை நைவேத்தியம் செய்து சிவபெருமானை வழிபடுவதால் சிறந்த பலன்களை பெறலாம்.

மகரம்:

செவ்வாய் பகவான் உச்சமடையும் மகர ராசியில் பிறந்தவர்கள் சிவராத்திரி தினத்தன்று சிவனுக்கு கோதுமை தானியங்களை கொண்டு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். சிவ பூஜை முடிந்த பிறகு, அபிஷேகம் செய்த அந்த தானியங்களை யாருக்காவது தானம் அளித்து விடுவதால் உங்களின் தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.

கும்பம்:

ஈஸ்வர பட்டம் பெற்ற நவகிரக நாயகனாகிய சனி பகவானின் ஆதிக்கம் நிறைந்த கும்ப ராசியினர் சிவராத்திரி தினத்தன்று கூட்டம் அதிகமில்லாத சிவன் கோயிலில் சிவலிங்கத்திற்கு தூய்மையான நீரை ஊற்றி அபிஷேகம் செய்து, கருப்பு மற்றும் வெள்ளை எள் கொண்டு சிவபெருமானை அபிஷேகம் செய்து வழிபடுவதால் உங்களின் தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.

மீனம்:

குரு பகவானுக்குரிய மீன ராசியில் பிறந்தவர்கள் சிவராத்திரி தினத்தன்று அரசமரத்தடியில் இருக்கின்ற சிவலிங்கத்திற்கு “ஓம் நமசிவாய” என்கிற மந்திரத்தை துதித்தவாறு வில்வ இலைகள் கொண்டு அர்ச்சனை செய்து, லிங்கத்திற்கு ஆரத்தி காட்டி வழிபடுவதால் சிவனின் அருளை பெறலாம்.

இதையும் படிக்கலாமே:
12 ராசியினருக்கான தொழில்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Sivarathri 12 rasi in Tamil. It is also called as 12 rasi in Tamil or Shivaratri valipadu in Tamil or Maha shivaratri in Tamil or 12 rasi siva valipadu in Tamil.

- Advertisement -