12 ராசிக்காரர்கள் என்ன தொழில் செய்தால் நன்மைகள் அதிகம் பெறலாம்

12-rasi
- Advertisement -

உழைப்பு என்பது மனித சமூகத்தின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமாக இருக்கிறது. அத்தகைய உழைப்பு என்பது வெறும் பொருளீட்டும் ஒரு வேலையாக இல்லாமல் உங்களுக்கும், மற்றவர்களுக்கும் நாம் வாழும் சமுதாயத்திற்கும் பயன்தரும் வகையில்இருப்பது அவசியம். அந்த வகையில் 12 ராசிக்காரர்கள் எத்தகைய வேலை, தொழில் செய்தால் அனைவரும் பயன்பெறுவது பற்றி இங்கு காண்போம்.

மேஷம்:
Mesham Rasi

மிகவும் சுறுசுறுப்பு தன்மை கொண்ட நீங்கள் எப்போதும் உடல், மனம் இரண்டும் இணைந்து செயல்படத்தக்க பணிகள், வேலைகளை செய்வதால் உங்களுக்கு மிகுந்த நன்மையளிக்கும். தன்னம்பிக்கை அதிகம் கொண்ட நீங்கள் பிறருக்கு உடற்பயிற்சியாளர், யோகா குரு போன்ற உடல், மனதிற்கு பயிற்சி தரும் பயிற்சியாளர் பணிகளை மேற்கொள்ளலாம்.

- Advertisement -

ரிஷபம்:
Rishabam Rasi

ரிஷபம் ராசியினருக்கு தாங்கள் வசிக்கும் வீடு ஆலயம் போன்றதாகும். கலைத்திறன் அதிகம் கொண்ட ரிஷப ராசியினர் தாங்கள் வசிக்கும் வீட்டை சிறப்பாக அலங்கரிக்கும் திறன் கொண்டவர்களாக இருக்கின்றனர். எனவே வீட்டு கட்டிட வடிவமைப்பு, வீட்டு உள்ளலங்காரம், தோட்டம் வடிவமைப்பு போன்ற தொழில்களில் ஈடுபாடுவதால் ரிஷப ராசியினர் மனநிறைவு பெறுவார்கள்.

மிதுனம்:
midhunam

கல்வியறிவு இயற்கையிலேயே ஒருவருக்கு இருக்கும் அறிவாற்றல் ஆகிவற்றிற்கு புதன் பகவான் காரகனாகிறார். மிதுன ராசிக்கு அதிபதி புதன் என்பதால் அனைத்து விடயங்களையும் கற்று பண்டிதர்களாக இருப்பார்கள். எனவே மிதுன ராசியினர் பிறருக்கு கல்வி, கலைகள், தொழில் போன்றவற்றை கற்று தரும் ஆசிரியர், குரு போன்ற பணிகளை செய்வது சிறந்தது.

- Advertisement -

கடகம்:
Kadagam Rasi

மனிதன் தனித்து அறியப்படுவதற்கு காரணம் அவனது மனம் தான். மனோகரகனாகிய சந்திரனின் ஆதிக்கம் மிகுந்த ராசி கடக ராசியாகும். கடக ராசியினர் பிற மனிதர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தருபவர்கள் ஆவர். பிற எந்த ஒரு ராசியினரும் கடக ராசியினரிடம் தங்களின் மனக்குறைகளை கூறுவதால், கடக ராசிக்காரர்கள் அவர்களுக்கு சிறந்த ஆலோசனை மற்றும் ஆறுதல் தருபவர்களாக இருக்கின்றனர்.

சிம்மம்:
simmam

நேர்மறை குணங்கள் அதிகம் கொண்ட சிம்ம ராசிக்காரர்கள் தங்களை சுற்றியிருக்கும் தீமைகளை களைவதில் பெரும் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். தாங்கள் வசிக்கும் பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு தேவையான காரியங்களை செய்து பொதுநல சேவையும், அரசியல் துறையில் ஈடுபட்டு பெரும்பாலான மக்களுக்கு நன்மைகளை செய்யலாம்.

- Advertisement -

கன்னி:
Kanni Rasi

புதன் பகவான் ஒரு மனிதனின் படிப்பாற்றலுக்கு காரகனாகிறார். கன்னி ராசியில் பிறந்தவர்கள் இயற்கையிலேயே மிகுந்த படைப்பாற்றல் மிகுந்தவர்களாக இருப்பார்கள். பொதுவாக கன்னி ராசியினர் பிறரிடம் கை கட்டி வேலை செய்வதை விட, வேலையற்ற பலருக்கும் வேலை தரும் வகையிலான பணிகள், முயற்சிகள் மேற்கொண்டால் அனைவருக்கும் நன்மை பயக்கும்.

துலாம்:
Thulam Rasi

சுக கிரகமான சுக்கிரனின் ஆட்சி வீடான துலாம் ராசியில் பிறந்த நபர்கள் இயற்கையிலேயே அழகுணர்ச்சி அதிகம் கொண்டவர்களாக இருக்கின்றனர். இவர்கள் பிறரையும் அழகாக்கி காட்டும் திறன் அதிகம் கொண்டவர்கள் எனவே ஆடை வடிவமைப்பு, சிகை அலங்காரம் போன்ற தொழில்கள், கலைத்துறை சார்ந்த திரைப்படம், நாடகம் போன்றவற்றில் ஈடுபடுவது சிறந்தது.

விருச்சிகம்:
virichigam

செவ்வாய் பகவானின் ஆதிக்கம் கொண்ட விருச்சிக ராசியினர் இயற்கையிலேயே பிறரின் கவனத்தை தங்கள் பக்கம் ஈர்க்கும் திறன் கொண்டவர்களாவர். பிறருக்கு ஆலோசனை தருவது, சமுதாயத்திற்கு நன்மை தரும் சேவை மற்றும் தங்கள் பகுதியை சார்ந்த மக்களுக்கு சேவை செய்தல் போன்ற பணிகளை செய்வதால் விருச்சிக ராசியினர் மற்றும் அனைவருக்கும் நன்மை தருவதாக அமையும்.

தனுசு:
Dhanusu Rasi

குரு பகவானின் அருள் கொண்ட தனுசு ராசியில் பிறந்தவர்கள் பல மேன்மையான குணங்களை பெற்றிருப்பார்கள். கனிவான அணுகுமுறை, அனைவரின் மீதும் அன்பு கொண்ட தனுசு ராசியினர் ஆதரவற்றவர்கள், விலங்குகள் நலம் போன்ற விடயங்களில் ஈடுபட்டு தங்களால் இயன்ற சேவைகளை செய்வதால் தங்களுக்கும் மற்றவர்களுக்கும் நன்மை பயக்கும்.

மகரம்:
Magaram rasi

செவ்வாய் பகவானின் உச்ச வீடாக மகரம் இருக்கிறது. எனவே இந்த ராசியினருக்கு இயற்கையிலேயே பிறருக்கு தலைமை தாங்கி வழிநடத்தி செல்லும் திறன் அதிகமிருக்கும் என்பதால் இவர்கள் எந்த துறையில் ஈடுபட்டிருந்தாலும் அதில் தலைமை பணிகளை ஏற்கும் போது அவர்களை சார்ந்தவர்கள் அனைவரும் மிகுந்த நன்மைகள், லாபங்கள் அடையும் சூழல் ஏற்படும்.

கும்பம்:
Kumbam Rasi

சனி பகவானின் சொந்த ராசியாக இருக்கும் கும்ப ராசியில் பிறந்தவர்கள் மிகுந்த பொறுமை மற்றும் நிதானம் கொண்டவர்களாவர். அதே நேரத்தில் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு மனஉறுதியும் அதிகமிருக்கும். எதையும் பிறருக்கு எடுத்து கூறுவதில் ஆர்வம் உள்ள இந்த ராசியினர் பத்திரிகையாளர், ஆவண படம் எடுப்பது, சரித்திர ஆராய்ச்சியாளர் போன்ற பணிகளை செய்வதால் அனைவரும் பயன்பெறுவர்.

மீனம்:
meenam

பிறரின் மனம் மற்றும் எண்ண ஓட்டங்கள் என்னவென்று சுலபத்தில் கணிக்கும் திறன் கொண்டவர்கள் குரு பகவானின் அதிக்கம் கொண்ட மீன ராசியினர். பிறருக்கு எதையும் கற்று தரும் அல்லது உபதேசிக்கும் ஆற்றல் கைவரபெற்ற மீனம் ராசியினர் புத்தகம் எழுதும் எழுத்தாளர் பணியினை செய்யும் போது படிப்பவர்களுக்கு மிகுந்த ஆற்றலை தரும்.

இதையும் படிக்கலாமே:
கிரக தோஷங்களால் ஏற்படும் நோய்கள் நீங்க

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have 12 rasi jobs in Tamil. It is also called as 12 rasi in Tamil or 12 rasi jothidam in Tamil or Rasigal in Tamil.

- Advertisement -