- Advertisement -

எவ்வளவு வயதானாலும் இளமையாக இருக்க வேண்டும். நல்ல நிறத்துடன் இருக்க வேண்டும். பார்ப்பவர்கள் அனைவரும் வாயை பிளக்கும் அளவிற்கு அழகாக திகழ வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள். கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்தாமல் வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களை வைத்து எப்படி ஃபேஸ் பேக் செய்வது என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

இன்றைய காலத்தில் சிறு வயதிலேயே முகச்சுருக்கம் ஏற்படுகிறது. வெயிலில் சென்று வருவதால் முகம், கை, கால்கள் கருத்து விடுகின்றன. முகத்தில் சுருக்கங்களும் கரும்புள்ளிகளும் மங்கு போன்றவையும் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இதற்கு சுற்றுச்சூழல் ஒரு காரணமாக இருந்தாலும், நம்முடைய ஊட்டச்சத்து ஒருவித காரணமாக இருந்தாலும், நம்முடைய முகத்தை நாம் ஒழுங்காக பராமரிப்பது இல்லை என்பதும் ஒரு காரணமாக திகழ்கிறது. இவை அனைத்தையும் சரி செய்வதற்கும் எந்த சருமத்தை கொண்டவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு ஏற்றார் போல ஒரு பேஸ் பேக்கை தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த ஃபேஸ் பேக்கிற்கு நமக்கு மூன்று பொருட்கள் தேவைப்படும். அதில் மிகவும் முக்கியமான ஒரு பொருளாக திகழ்வதுதான் பால் ஏடு. நாம் தினமும் வீட்டில் பால் காய்ச்சும் பொழுது அதற்கு மேல் ஆடை படியும் அல்லவா? அதை தனியாக எடுத்து சேகரித்து வைத்து ஒரு குறிப்பிட்ட அளவு வந்த பிறகு மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்க வேண்டும். இப்படி அரைக்கும் பொழுது அது கிரீம் பதத்திற்கு வரும். கிரீம் பதத்திற்கு வந்த பிறகு அதை அப்படியே எடுத்து ஒரு டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நமக்கு தேவைப்படும் பொழுதெல்லாம் அதை எடுத்து உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இதை பயன்படுத்துவதன் மூலம் பல அற்புதமான பலன்களை நம்மால் பெற முடியும். முகம் நிறமாவதோடு மட்டுமல்லாமல் முகத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் நீங்கும். பளிங்கு போன்ற சருமத்தை நம்மால் பெற முடியும். சரி இப்பொழுது பேஸ்பேக் தயார் செய்வது பற்றி பார்ப்போம்.

- Advertisement -

ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் அளவு கடலை மாவை சேர்க்க வேண்டும். கடலை மாவு ஒரு இயற்கையான பீச்சிங் ஏஜெண்டாக செயல்படுவதால் நம் முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள் தேமல் போன்ற அனைத்தையும் சரி செய்ய உதவுகிறது. இதனுடன் இரண்டு ஸ்பூன் அளவிற்கு கற்றாழை ஜெல்லை பயன்படுத்த வேண்டும். கற்றாழை ஜெல்லை தினமும் பயன்படுத்துபவர்கள் என்றும் இளமையாக வாழ்வார்கள் என்று கூறப்படுகிறது.

அடுத்ததாக ஒரு ஸ்பூன் அளவிற்கு கிரீமாக தயார் செய்து வைத்திருக்கும் பாலாடை சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை மூன்றையும் நன்றாக கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் அப்படியே விட்டு விட வேண்டும். 20 நிமிடம் கழித்து வறண்ட சருமம் இருப்பவர்களாக இருந்தால் குளிர்ந்த நீரிலும் எண்ணெய் சருமம் இருப்பவர்களாக இருந்தால் வெதுவெதுப்பான நீரிலும் முகத்தை கழுவிக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த ஃபேஸ் பேக்கை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் உபயோகப்படுத்தலாம். ஆண், பெண் என்ற எந்த வேறுபாடும் கிடையாது. இந்த ஃபேஸ் பேக்கை நாம் உபயோகப்படுத்துவதன் மூலம் நம் முகத்தில் இருக்கக்கூடிய அழுக்குகள், கரும்புள்ளிகள், பருக்கள், பருக்களால் ஏற்பட்ட வடுக்கள், சூரிய ஒளியால் ஏற்பட்ட கருமை, சுருக்கம் என்று அனைத்தும் நீங்கி முகத்திற்கு நல்ல நிறத்தையும், பொலிவையும், இளமையும் தரக்கூடியதாக திகழ்கிறது.

இதையும் படிக்கலாமே: 10 நிமிடத்தில் பளிச் முகம்

இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய இந்த அற்புதமான பொருட்களை நாமும் பயன்படுத்தி நம்முடைய முகத்தை பளிங்கு போல பராமரித்து கொள்வோம்.

- Advertisement -