10 நிமிடத்தில் பளிச் முகம்

glowing face powder
- Advertisement -

நம்முடைய முகம் எந்த அளவுக்கு பளிச்சென்று பிரகாசமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு நமக்கு தன்னம்பிக்கை என்பது அதிகரிக்கும். பொதுவாக ஒருவருடைய தோற்றத்தை வைத்து தான் அவருடைய குண நலன்களை நிர்ணயிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அந்த வகையில் ஒருவருக்கு எந்த அளவிற்கு தன்னம்பிக்கையும் தைரியமும் இருக்கிறதோ அந்த அளவுக்கு அவர்களுடன் அவர்களுடைய முகம் புத்துணர்ச்சியுடன் இருக்கும் என்று கூறுவார்கள். இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பியூட்டி பார்லர் செல்லாமலேயே வீட்டிலேயே பத்தே நிமிடத்தில் எந்த பவுடரை பயன்படுத்தினால் முகம் பளிச்சென்று மாறும் என்று தான் பார்க்க போகிறோம்.

ஏதாவது ஒரு விசேஷத்திற்கு செல்வதாக இருந்தாலும், சுப நிகழ்ச்சிகளுக்கு செல்வதாக இருந்தாலும், நண்பர்களுடன் வெளியில் செல்வதாக இருந்தாலும், நம்முடைய அழகை சிறப்பாக காட்ட வேண்டும் என்பதற்காக சில மணி நேரங்களை நாம் செலவு செய்வோம். இதில் சிலர் தங்கள் வீட்டிலேயே தங்களை அழகுபடுத்திக் கொள்வார்கள். இன்னும் சிலரோ அழகு நிலையத்திற்கு சென்ற அழகு படுத்துவார்கள். நம்முடைய முகத்தின் கருமையை நீக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்தும் பொழுது அது நமக்கு நல்ல பலனை தரும். ஒரு முறை இந்த பவுடரை தயார் செய்து வைத்துக் கொண்டால் போதும். நாம் நினைக்கும் போதெல்லாம் நம்முடைய முகத்திலும் உடம்பிலும் இருக்கக்கூடிய கருமையை நம்மால் நீக்க முடியும். சரி அந்த பவுடரை எப்படி தயார் செய்வது என்று பார்ப்போம்.

- Advertisement -

ஒரு ஈரம் இல்லாத மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கப் அளவிற்கு பச்சரிசியை சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு அதே அளவு கொண்ட வெள்ளை உளுந்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். இது இரண்டையும் நன்றாக நைசான பவுடராக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த இந்த பவுடரை ஒரு பௌலில் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்பொழுது எந்த அளவிற்கு அரிசியும் உளுந்தும் எடுத்தோமோ அதே அளவிற்கு கோதுமை மாவையும் எடுத்து இந்த பொடியுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். அவ்வளவுதான் பவுடர் தயாராகிவிட்டது.

இதில் இருக்கக்கூடிய அரிசி நம்முடைய முகத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்களை நீக்கி நம்முடைய முகத்திற்கு உடனடி வெண்மையை தரக்கூடியதாக திகழ்கிறது. உளுந்து சொல்லவே வேண்டாம் அதில் பல ஊட்டச்சத்துகள் இருப்பதால் நம் முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகளை நீக்கும் ஆற்றல் கொண்டதாக திகழ்கிறது. கோதுமை மாவு சுருக்கங்களை நீக்குவதற்கு உதவுகிறது. இவை மூன்றையும் நாம் சேர்த்து பயன்படுத்துவதன் மூலம் மூன்றின் பலனும் கிடைக்கும். சரி இப்பொழுது இந்த பவுடரை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

- Advertisement -

ஒரு பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த பௌலில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு இந்த பவுடரை சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு தயிரை சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு ஸ்பூன் அளவிற்கு பாலை சேர்க்க வேண்டும். இந்த பால் முடிந்த அளவிற்கு காய்ச்சாத பசும்பாலாக இருப்பது மிகவும் சிறப்பு. இப்பொழுது இதை நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்பொழுது முகத்தை நன்றாக கழுவி விட்டு இந்த விழுதை எடுத்து முகத்தில் அப்படியே தடவி ஐந்து நிமிடம் நன்றாக மசாஜ் செய்யுங்கள்.

பத்து நிமிடம் அப்படியே விட்டுவிடுங்கள். பிறகு சாதாரண தண்ணீரை வைத்து முகத்தை கழுவி விடுங்கள். அவ்வளவுதான் 10 நிமிடத்தில் உங்களுடைய முகக்கருமையை நீக்கி பளிச்சென்று முகத்தை உங்களால் பெற முடியும். இதை முகத்தில் மட்டும் தான் பயன்படுத்த வேண்டுமா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை. நம்முடைய உடல் முழுவதுமே இந்த பவுடரில் நாம் பயன்படுத்தலாம் எந்த இடத்தில் கருமை அதிகமாக இருக்கிறது என்று தோன்றுகிறதோ அந்த இடத்தில் இந்த பவுடரை இதே முறையில் பயன்படுத்தி அந்த கருமையை நம்மால் நீக்க முடியும்.

இதையும் படிக்கலாமே: முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடி வளர உதவும் எண்ணெய்

மிகவும் அற்புத பலன்களை தரக்கூடிய இந்த மூன்று பொருட்களையும் நாம் இந்த முறையில் பயன்படுத்தி நம்முடைய முகம் மற்றும் உடலில் இருக்கக்கூடிய கருமைகளை நீக்க முடியும்.

- Advertisement -