- Advertisement -

யாரிடமும் சொல்லக்கூடாத 6 விஷயங்கள்

- Advertisement -

பொதுவாகவே நம் ரகசியங்களை நம்மால் காக்க முடியாவிட்டால், வேறு யாரால் பாதுகாக்க முடியும்? என்று கேட்பார்கள். நம்மை விட்டு இன்னொருவருக்கு நம் ரகசியங்கள் தெரிந்தாலே அவ்வளவுதான்! பிறகு நீங்கள் என்னதான் யோசித்தாலும் பயன் இல்லாமல் போய்விடும். அது போலவே நம்முடைய மிக முக்கியமான சில விஷயங்களில் இந்த 6 விஷயங்களை அறியாமல் கூட யாரிடமும் சொல்லி விடக் கூடாது. மற்றவரிடம் சொல்லக் கூடாத 6 விஷயங்கள் என்னென்ன? என்பதை தொடர்ந்து இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் அறிந்து கொள்வோம் வாருங்கள்.

விஷயம் 1:
நாம் இறைவனிடம் வைக்கும் வேண்டுதல்களை யாரிடமும் சொல்லக்கூடாது. கடவுளுக்கும் நமக்கும் இருக்கும் இந்த ஒரு பந்தம், கொடுக்கல் வாங்கல் பற்றிய ரகசியங்களை மற்றவர்களுக்கு சொல்லவே கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. உங்கள் மனதில் நினைத்த ஒன்றை இறைவனிடம் வேண்டினால் அது மற்றவர்களிடம் சொல்லிவிட்டால் பலிக்காது என்று நம் முன்னோர்களும் சொல்வார்கள்.

- Advertisement -

விஷயம் 2:
தானம் செய்வதை எல்லோருக்கும் தெரிந்தே செய்யலாம், ஆனால் தர்மம் செய்யும் பொழுது அதை யாரிடமும் சொல்லி செய்யக் கூடாது. யாருக்கும் தெரியாமல் செய்வது தான் தர்மம். தானம் என்பது பலனை எதிர்பார்த்து செய்வது, ஆனால் தர்மம் என்பது ஒருவர் கேட்காமலேயே எந்த பலனும் எதிர்பார்க்காமல் செய்வதாகும்.

விஷயம் 3:
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தான் கருத்தரித்ததை, ஐந்து மாதம் முடியும் வரை யாரிடமும் சொல்லவே கூடாது என்பார்கள். கருத்தரித்த நாள் முதல் ஐந்து மாதங்கள் வரை ஏராளமான திருஷ்டிகள் படும். உடல் அளவிலும் பலவீனமாக இருக்கக்கூடும். இந்நிலையில் நீங்கள் மற்றவர்களிடம் இதை சொல்வது நல்லதல்ல! ஐந்து மாதம் முடித்த பின்னர் எல்லோரிடமும் சொல்லி மகிழலாம்.

- Advertisement -

விஷயம் 4:
முன்கூட்டியே செய்யக் கூடிய எந்த ஒரு விஷயத்தையும் யாரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது. “நன்றே செய் அதை இன்றே செய்” என்பார்கள். எந்த விஷயம் செய்வதாக இருந்தாலும், அதை தாமதப்படுத்தாமல் அந்த நொடியிலேயே செய்வது வெற்றியைத் தரும். அதை காட்டிலும் முன்கூட்டியே திட்டமிட்டு செய்வது அதிர்ஷ்டத்தை தரும் என்பார்கள். எனவே திட்டமிட்டு முன்கூட்டியே செய்து விடக் கூடிய எந்த ஒரு காரியத்தையும் மற்றவர்களிடம் சொல்லக் கூடாது.

விஷயம் 5:
எந்த மதமாக இருந்தாலும், எந்த நன்னெறி நூல்களாக இருந்தாலும் பொய் சொல்லக் கூடாது என்று தான் நமக்குச் சொல்லிக் கொடுத்துள்ளது. எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும், யாரிடமும் பொய் கூறாதீர்கள். இது உங்களுடைய வாழ்க்கையை அழித்துவிடும். பொய் உரைக்காத ஆன்மா நேரடியாக இறைவனை சரணடைகிறது. மேலும் அதற்கு மறுபிறவி என்பதும் கிடையாது, முக்தி பெறும்.

இதையும் படிக்கலாமே:
கார்த்திகை மாத கிருத்திகை வழிபாடு

விஷயம் 6:
நாம் எவ்வளவு சம்பாதித்தாலும் அதை வெளியில் சொல்லக் கூடாது. எவ்வளவு சம்பாதிக்கிறோம்? எப்படி சம்பாதிக்கிறோம்? எவ்வளவு சேமித்து வைத்திருக்கிறோம்? அடுத்த கட்ட முன்னேற்றம் என்ன? என்பது போன்ற தொழில் ரீதியான தகவல்களையும், சொத்து பற்றிய ரகசியங்களையும் வெளியில் சொல்லவே கூடாது. நம்மைப் பார்த்து பொறாமை பட்டு வயிற்றெரிச்சல் படும் மற்றவர்கள் முன்னிலையில் அறிவாளியாக இருப்பதை விட, நாம் கடன்காரனாக தோற்றமளித்துவிட்டு போவது சால சிறந்தது.

- Advertisement -