- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகார்த்திகை மாத கிருத்திகை வழிபாடு

கார்த்திகை மாத கிருத்திகை வழிபாடு

- Advertisement -

நாளைய தினம் கார்த்திகை மாதத்தில் வந்திருக்கும் கிருத்திகை. அது மட்டுமில்லாமல் நாளைய தினம் தான் அண்ணாமலையாருக்கு உகந்த கார்த்திகை தீபத் திருநாளும் வரவிருக்கிறது. முருகனை வளர்த்த, கார்த்திகை பெண்களை நினைத்து வழிபாடு செய்ய வேண்டிய நாளும் நாளைய தினம் தான். நாளை மகாலட்சுமி உகந்த வெள்ளிக்கிழமை.

இந்த நாளில் நாம் முருகப்பெருமானையும் சிவபெருமானையும் வழிபாடு செய்யும்போது, நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய பெரிய பெரிய பிரச்சனைகளுக்கு கூட சுலபமாக தீர்வு கிடைத்து விடும். திருமணம் நடக்காதவர்கள், வேலை கிடைக்காதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், கடன் சுமையில் கஷ்டப்படுபவர்கள், நோய்வாயில் அவதிப்படுபவர்கள் என்று எல்லோருமே நாளைய தினம் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

- Advertisement -

கார்த்திகை மாத கிருத்திகை வழிபாடு

கார்த்திகை தீபத்திற்கு வீடு முழுவதும் மண் அகல் விளக்கில், அலங்கரிக்கலாம் செய்வோம். அண்ணாமலையானை வணங்குவோம். நாளை முருகனுக்கு உகந்த கிருத்திகை வழிபாட்டை பூஜை அறையில் சுலபமாக எப்படி மேற்கொள்வது. நாளை மாலை 6:00 மணிக்கு முன்பாக பூஜை அறையை அலங்காரம் செய்து முடித்து விடுங்கள். 6 மணிக்கு இந்த வழிபாட்டை துவங்கி விட வேண்டும்.

பூஜை அறையில் ஸ்டார் கோலம் போடுங்கள். அதில் ‘ஓம் சரவணபவ’ என்று எழுதி 6 அகல் விளக்குகளை வைத்து நெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றி வைத்து, ‘ஓம் முருகா! ஓம் முருகா! ஓம் முருகா!’ என்ற மந்திரத்தை 27 முறை சொல்லி, உங்களுடைய பிரச்சனைகளை முருகனின் பாதத்தில் இறக்கி வைத்து, மனம் உருகி வழிபாட்டை மேற்கொண்டால், நிச்சயம் உங்களுடைய வேண்டுதலுக்கு உண்டான பலன் கூடிய விரைவில் கிடைக்கும்.

- Advertisement -

கார்த்திகை தீபத்திற்கும், இந்த கிருத்திகை நட்சத்திரத்திற்கும் சேர்த்து நாளைய தினம் விரதம் மேற்கொள்பவர்கள், விரதம் இருக்கலாம். விரதம் இருக்க முடியாதவர்கள் ஒரு பொழுது இருந்தும், இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். விரதம் இருக்க முடியாதவர்கள் மூன்று வேளை உணவு சாப்பிடும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

உங்கள் வீட்டில் வேல் வைத்திருந்தால் அந்த வேலைக்கு உங்களால் முடிந்த அபிஷேகம் செய்து, சந்தன குங்குமப்பொட்டு வைத்து, அதற்கு ஒரு நெய்வேத்தியம் வைத்து, முருகர் வழிபாட்டை செய்ய வேண்டும். நாளை எல்லோரும் வாயில் இருந்து உச்சரிக்கப்பட வேண்டிய மிக மிக முக்கியமான மந்திரம், இந்த ஒரு வார்த்தை மந்திரம். ‘அரோஹரா’.

- Advertisement -

இந்த அரோஹரா என்ற மந்திரம் நாளை அண்ணாமலையாருக்கு உகந்த மந்திரம். முருகப்பெருமானுக்கு உகந்த மந்திரம். ஆக வீட்டில் தீபம் ஏற்றும் போது ‘அண்ணாமலையாருக்கு அரோஹரா’, என்ற கோஷத்தை அனைவரும் சொல்ல வேண்டும். ‘அண்ணாமலையாருக்கு அரோஹரா’ என்ற கோஷத்தை குடும்பத்தோடு சொல்லி நாளை கார்த்திகை விளக்குகளை பூஜையறையிலும், வீட்டில் மற்ற இடங்களிலும் ஏற்றபவர்கள் வாழ்வில் வெளிச்சம் பிரகாசமாக இருக்கும்.

அண்ணாமலையனுக்கு அரோஹரா சொன்னால் போதுமா. முருகப்பெருமானுக்கு சொல்ல வேண்டாமா. முருகனை நினைத்தும் அரோகரா சொல்லுவோம்.

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !
வீரவேல் முருகனுக்கு அரோகரா !

இதையும் படிக்கலாமே: கார்த்திகை தீபத்தன்று ஏற்ற வேண்டிய முக்கியமான தீபம்

என்ற மந்திர வார்த்தைகளையும் சொல்லி உங்களுடைய வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். அந்த ஈசனும் முருகனும் வேறு வேறு அல்ல. இருவரும் ஒன்றுதான். இருவருக்கும் உகந்த நாளாக இந்த கார்த்திகை தீபத்திருநாள் திகழ்கிறது. நாளைய தினம் அனைவருக்கும் அண்ணாமலையாரின் அருள் ஆசையும், முருகப்பெருமானின் அருள் ஆசியும் பரிபூரணமாக கிடைக்க வேண்டுதல் வைத்து இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்