- Advertisement -

சோமவார விரதத்தில் தீபம் ஏற்றும் முறை

- Advertisement -

கார்த்திகை மாதம் என்றாலே அது வழிபாட்டிற்கும் தீபத்திற்கும் புகழ்பெற்றதாக திகழ்கிறது. கார்த்திகை மாதம் முழுவதுமே வீட்டு நிலை வாசலுக்கு வெளியே தீபம் ஏற்றி வைப்பது என்பது நம் குடும்பத்தில் இருக்கக்கூடிய கஷ்டங்களை நீக்க உதவும் என்று கூறப்படுகிறது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய ஒரு விசேஷமான வழிபாடு என்றால் அது சோமவார வழிபாடு தான். அந்த சோமவார வழிபாட்டில் எந்த முறையில் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்தால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் விலகும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

சோமவார விரதத்தில் தீபம்

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு ரூபத்தில் கஷ்டங்கள் இருக்கும். அதே போல் நீண்ட நாட்களாக ஏதாவது ஒரு பிரச்சினையில் மாட்டி விழித்துக் கொண்டு இருப்போம். மனவேதனை என்பதும் இருக்கும். எவ்வளவு வழிபாடுகள் செய்தாலும், பரிகாரம் செய்தாலும், தோஷங்கள் நீங்கவில்லை என்று நினைப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் அதில் தடைகள் வந்து கொண்டே இருக்கிறது என்று வேதனைப்படுபவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் செய்யக்கூடிய ஒரு அற்புதமான வழிபாடு தான் சோமவார வழிபாடு.

- Advertisement -

பலரும் சோமவாரமான கார்த்திகை மாதம் திங்கட்கிழமை அன்று விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். தங்களுடைய உடல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு இந்த விரதத்தை கடைபிடித்துக் கொள்ளலாம். காலையிலேயே பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய சிவபெருமானின் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொண்டு அவருக்கு முன்பாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்து “சிவாய நம” என்று மூன்று முறை கூறிய பிறகு விரதம் இருக்க ஆரம்பிக்க வேண்டும்.

அன்று மாலை 5:30 மணியில் இருந்து 11 மணிக்குள் இந்த வழிபாட்டை செய்யலாம். இந்த வழிபாட்டை விரதம் இருப்பவர்கள் மட்டும்தான் செய்ய வேண்டும் என்று இல்லை. விரதம் இருக்க இயலாதவர்கள் கூட மேற்கொள்ளலாம். வீட்டில் சிவலிங்கம் இருக்கும் பட்சத்தில் அந்த சிவலிங்கத்திற்கு நம்மால் இயன்ற ஏதாவது ஒரு பொருளை வைத்து அபிஷேகம் செய்ய வேண்டும். வலம்புரி சங்கு வீட்டில் இருந்தால் அந்த வலம்புரி சங்கால் அபிஷேகம் செய்யும்பொழுது அதீத பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. சிவலிங்கம் இல்லாத பட்சத்தில் சிவபெருமானின் படத்தை மட்டும் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

சிவபெருமானின் படத்திற்கு மலர்களால் அலங்காரம் செய்து தங்களால் இயன்ற ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். பிறகு சிவபெருமானுக்கு முன்பாக ஒரு தாம்பாள தட்டை எடுத்து அதில் 5 அகல் விளக்குகளை வைத்து நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி பஞ்சுத் திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபம் கிழக்கு அல்லது வடக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். இவ்வாறு தீபம் ஏற்றி வைத்த பிறகு “சிவாய நம” என்னும் மந்திரத்தை 108 முறை கூறலாம், சிவபுராணத்தை பாராயணம் செய்யலாம், தங்களுக்கு தெரிந்த எந்த ஒரு சிவ மந்திரமாக இருந்தாலும், சிவ பாடலாக இருந்தாலும் அதை முழு மனதோடு சிவபெருமானை நினைத்து அந்த தீபத்தை பார்த்தவாறு கூற வேண்டும்.

இப்படி கூறும் பொழுது கண்டிப்பான முறையில் நம் வீட்டு நிலை வாசலில் இரண்டு தீபங்கள் எரிய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு சாம்பிராணி தூபம் காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே:தம்பதி ஒற்றுமை பெற ஏற்ற வேண்டிய தீபம்

இந்த முறையில் விரதம் இருந்து வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் வாழ்வில் இது வரை அனுபவித்த கஷ்டங்களும் துன்பங்களும் துயரங்களும் காணாமல் போவதோடு என்ன வேண்டும் என்று சிவபெருமானிடம் கேட்டார்களோ அந்த வரம் கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -