
காக்கை குருவிகள் கூட தனக்கென கூடு கட்டி வாழும் போது, மனிதராகிய தமக்கு ஒரு வீடு வேண்டும் என்று நினைப்பது நியாயமான ஆசை தான். ஆனால் அத்தகைய வீடு அனைவருக்கும் எவ்வளவு எளிதில் அமைந்து விடாது. இன்றளவும் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் ஒரு நாளாவது சொந்த வீட்டில் வாழ்ந்து விட மாட்டோமா என்று தினம் தினம் ஏக்கத்துடன் வாழ்பவர்கள் பல்லாயிரம் பேர். அந்த ஏக்கத்திற்கெல்லாம் ஒரு தீர்வை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
ஒருவருக்கு சொந்தமாக வீடும் நிலமும் அமைய வேண்டுமெனில் அவருக்கு செவ்வாய் பகவானின் அனுகிரகம் நிச்சயம் தேவை. அத்தகைய அனுகிரதத்தை தருபவராக இருப்பவரின் அதிபதியான தெய்வம் முருகப்பெருமான். ஆகையால் தான் வீடு நிலம் தொடர்பான வழிபாடு பரிகாரம் அனைத்தையும் செவ்வாய்க்கிழமை அன்று செய்யும் போது அதற்கான பலன் பல மடங்காக உடனே கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்த வழிபாட்டை நீங்கள் செவ்வாய் கிழமை அன்று செய்ய வேண்டும் என்று அவசியம் கிடையாது. பழனியில் உள்ள முருகப்பெருமானை குறிப்பிட்ட நட்சத்திர நாளில் வழிபடுவதன் மூலம் இந்த அனுகிரகத்தை பெற முடியும். அது எந்த நாளில் எப்படி அவரை தரிசிக்க வேண்டும் என்பதை பதிவை தொடர்ந்து பார்க்கலாம்.
இந்தப் பழனி முருகனை கிருத்திகை நட்சத்திரத்தன்று ராஜ அலங்காரத்தில் தரிசிக்க வேண்டும். இப்படி தரிசனம் செய்பவர்கள் நிச்சயம் சொந்த வீடு வாங்கக் கூடிய அனுக்கிரகத்தை பெறுவார்கள் என்று சொல்லப்படுகிறது. முருகருக்கு எப்படி நாட்களில் செவ்வாய் உகந்ததோ, அதே போல நட்சத்திரங்களில் கிருத்திகை மிகவும் உகந்தது.
அந்த நாளில் அவரின் இந்த ராஜ அலங்காரத்தை தரிசித்து பலரும் ராஜபோக வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. வீடு நிலம் போன்ற யோகத்தை பெற நினைப்பவர்கள் மனதார வேண்டிக் கொண்டு முருகனை அன்றைய தினத்தில் ராஜ அலங்காரத்தில் தரிசித்து வந்தால் நிச்சயம் அதற்கான யோகம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: கடன் தீர பால் பரிகாரம்
இத்துடன் வீடு நிலம் வாங்கும் நீங்கள் எடுக்கும் முயற்சியுடன் செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமானுக்கு தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள். உங்களின் சொந்த வீடு கனவு நினைவாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.