
வாஸ்து பகவான் கண்விழிக்கக்கூடிய நாளை தான் வாஸ்து நாள் என்று நாம் கூறுகிறோம். அப்படிப்பட்ட வாஸ்து நாளில் நாம் செய்யக்கூடிய வழிபாடு வாஸ்து பகவானின் அருளை பெற உதவும். வாஸ்து பகவானின் அருளை நாம் பெற்று விட்டோம் என்றால் நம் வீட்டில் இருக்கக்கூடிய எப்பேர்பட்ட வாஸ்து தோஷமாக இருந்தாலும் அது நீங்கிவிடும். புதிதாக வீடு கட்ட வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கு அந்த வீடு நல்லபடியாக கட்டி கிரகப்பிரவேசம் செய்யும் அளவிற்கு வாஸ்து பகவான் அருள் புரிவார். அப்படிப்பட்ட வாஸ்து நாள் அன்று சிவபெருமானை வழிபாடு செய்யும் முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
வாஸ்து பகவான் என்பவர் வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்படும் ஒரு கடவுள். இவர் வீடு, தொழிற்சாலை போன்ற கட்டிடங்களை கட்டுவதற்கு முன் வழிபட வேண்டியவர். ஒரு வருடத்தில் குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே அவர் விழிப்பனுபவிப்பதாக சொல்லப்படுகிறது. அப்படி அவர் விழித்திருக்கக் கூடிய நாளை தான் நம் வாஸ்து நாள் என்று கூறுகிறோம். வாஸ்து நாள் அன்று நாம் வீடு கட்டுவதற்கோ தொழிற்சாலை கட்டுவதற்கோ பூஜை போடுவதன் மூலம் அந்த வீடும் தொழிற்சாலையும் சிறப்பான முறையில் கட்டி முடிக்கப்படும் என்பது ஐதீகமாக கருதப்படுகிறது. அன்றைய நாளில் நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய வாஸ்து தோஷம் மற்றும் சொந்த வீடு கட்டுவதற்குரிய யோகத்தை பெறுவதற்கு சிவபெருமானை வழிபாடு செய்யும் முறை.
வாஸ்து நாள் என்பது ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி சித்திரை மாதம் பத்தாம் நாள் புதன்கிழமை அன்று வருகிறது. அன்றைய நாளில் வாஸ்து நேரம் என்பது காலை 8:54 மணியிலிருந்து 9:30 மணி வரை இருக்கிறது. அந்த நேரத்தில் நாம் நம்முடைய வீட்டில் எளிமையான முறையில் பூஜை செய்யலாம். இந்த பூஜை செய்வதற்கு வீட்டில் வேல், ஓம், முருகன் சிலை, ஸ்படிக லிங்கம் போன்ற எது இருந்தாலும் அதற்கு முன்பாக இந்த வழிபாட்டை நாம் மேற்கொள்ள வேண்டும். உருவ வழிபாடு செய்வதற்கு எதுவும் இல்லை என்னும் பட்சத்தில் வீட்டு பூஜையறையில் இருக்கக்கூடிய முருகன் அல்லது சிவனின் படத்திற்கு முன்பாகவும் இந்த வழிபாட்டை நாம் செய்யலாம்.
முதலில் வழிபாடு செய்யக்கூடிய இடத்தை பன்னீரை தெளித்து சுத்தம் செய்து கொள்ளுங்கள். பிறகு பச்சரிசி மாவினால் ஏதாவது ஒரு கோலத்தை போட்டுக் கொள்ளுங்கள். அந்தக் கோலத்தின் நான்கு மூலைகளிலும் நான்கு அகல் விளக்குகளை வைத்து அந்த அகல் விளக்குகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையை பார்த்தவாறு இருக்கும்படி வைக்க வேண்டும். பிறகு அதில் நெய் ஊற்றி பஞ்ச திரி போட்டு தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள். அந்த தீபத்திற்கு நடுவில் ஏதாவது வாசனை மிகுந்த மலர்களை வைத்து நெய்வேத்தியமாக ஏதாவது ஒரு இனிப்பு பொருளை வைக்க வேண்டும்.
இப்படி வைத்து முடித்த பிறகு சிவபெருமானின் இந்த ஒரு மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். சிவபெருமானின் மந்திரத்தை வாஸ்து நாளில் வாஸ்து நேரத்தில் நாம் உச்சரிப்பதன் மூலம் நம் வீட்டில் இருக்கக்கூடிய வாஸ்து தோஷம் முற்றிலும் நீங்கும். ஒருவேளை நாம் தொழில் செய்யக்கூடிய இலத்தில் வாஸ்து கோளாறுகள் ஏதாவது இருக்கும் பட்சத்தில் இதே வழிபாட்டை அங்கேயும் நாம் செய்யலாம். அப்படி செய்வதன் மூலமும் நமக்கு தொழில் செய்யும் இடத்தில் இருக்கக்கூடிய வாஸ்து தோஷங்கள் நீங்கும். சொந்தமாக வீடு இல்லை என்று நினைப்பவர்களும் இந்த வழிபாட்டை செய்வதன் மூலம் சொந்த வீடு கிடைப்பதற்குரிய யோகம் உண்டாகும்.
“ஓம் சிவ சிவ சிவாய நம ஓம்”
இதையும் படிக்கலாமே:புண்ணியம் சேர்க்கும் ஏகாதசி
எளிமையான இந்த சிவ வழிபாட்டை முழுமனதோடு வாஸ்து நாள் அன்று வாஸ்து நேரத்தில் கூறுவதன் மூலம் சிவபெருமானின் அருளோடு வாஸ்து பகவானின் அருளையும் பரிபூரணமாக பெற்று சொந்த வீடு கட்டுவதற்குரிய யோகத்தையும் பெற முடியும். வாஸ்து தோஷத்தையும் முற்றிலும் நீக்க முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.