- Advertisement -

பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறப்பு 2025

- Advertisement -

ஸ்ரீரங்கத்து பெருமாள் கோவிலிருந்து, அந்த திருப்பதி ஏழுமலையான் கோவில் வரை, எல்லா பெருமாள் கோவில்களிலும் நாளைய தினம் சொர்க்கவாசல் திறப்பு மிக விமசையாக நடைபெறும். இதை பரமபத வாசல் திறப்பு என்றும் சொல்லுவார்கள். 10-1-2025 அதிகாலை 4 மணி அளவில் பெரும்பாலும் எல்லா பெருமாள் கோவிலிலும் சொர்க்கவாசல் ஆனது திறக்கப்படும்.

இந்த நேரத்தில் எல்லா பக்தர்களும் கோவிலுக்கு சென்று அந்த சொர்க்கவாசல் திறப்பின் போது, அந்த வழிபாட்டில் கலந்து கொள்ள முடியும் என்று சொல்லிவிட முடியாது. எல்லோருக்கும் பெருமாளின் பின்பு சென்று சொர்க்கவாசல் வழியாக நுழையும் பாக்கியம் கிடைத்து விடாது. அதற்காக சொர்க்கவாசல் திறக்கும் போது பெருமாள் கோவிலில் இல்லாத பக்தர்கள் புண்ணியம் செய்யவில்லை என்பது அர்த்தம் கிடையாது.

- Advertisement -

யார் யாருக்கு என்னென்ன கொடுப்பினை இருக்கிறதோ, அது மட்டும் தான் கிடைக்கும். இந்த வருடம் சொர்க்கவாசல் திறப்பு விழாவில் கலந்து கொள்ள முடியாதவர்கள், அடுத்த வருடம் கூட பெருமாளை சென்று சேவிக்கும் பாக்கியம் கிடைக்கும் கவலைப்படாதீங்க.

சொர்க்கவாசல் திறப்பு 2025

நாளைய தினம் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கும் போது, வீட்டில் இருக்கும் பக்தர்கள் என்ன தவறை செய்யக்கூடாது என்பது தெரியுமா. பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திதி அன்று சொர்க்கவாசல் திறக்கும் போது வீட்டில் நாம் இருந்தாலும், உறங்க கூடாது. பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பதற்கு முன்பாக எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, பூஜை அறையில் விளக்கு ஏற்றி, பெருமாளை வழிபட துவங்கி விட வேண்டும்.

- Advertisement -

சொர்க்கவாசல் திறப்பை இப்போது நாம் எல்லோரும் காண்பதற்கு சௌகரியமாக டிவியிலேயே நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது. ஏதாவது ஒரு சேனலில் சொர்க்கவாசல் திறப்பதை பாருங்கள். சொர்க்கவாசல் திறக்கும் போது கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்தை வீட்டில் இருந்தபடியே சொல்லுங்கள். நாராயணா என்று சொல்லுங்கள். ரங்கநாதா என்று சொல்லுங்கள். இப்படி பெருமாளது எந்த நாமத்தைச் சொல் வேண்டும் என்றாலும் சொல்லலாம். ராமா ராமா என்று சொன்னாலும் தவறு கிடையாது.

சொர்க்கவாசல் திறக்கும் சமயத்தில் நீங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் பெருமாளுக்கு இரண்டு துளசி இலைகளை போட்டு அர்ச்சனை செய்து, என்ன வேண்டுதல் வைத்தாலும் அது நடக்கும். சொர்க்கவாசல் திறப்பின் போது நீங்கள் கோவிலில் இல்லை என்றாலும் சரி, அந்த பெருமாளின் பின்பு நடந்து சென்று, சொர்க்கவாசலுக்குள் நுழைந்து வெளியே வந்த புண்ணியம் உங்களை வந்து சேரும்.

- Advertisement -

இப்போது பெரும்பாலும் நாம் எல்லோருக்கும் இருக்க கூடிய கஷ்டம், பண கஷ்டம். பொருளாதார ரீதியாக நிறைய பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கடன் சுமையால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களெல்லாம் இந்த சொர்க்கவாசல் திறப்பை தொலைக்காட்சி பெட்டியின் மூலம் பார்த்துக்கொண்டே, அந்த நாராயணனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டே, ஒரு பச்சை நிற துணியில், ஒரு துண்டு பச்சை கற்பூரம், ஒரு துண்டு துளசி இலை, இரண்டு ஏலக்காய்களை வைத்து முடிச்சு போட்டு, பெருமாள் பாதத்தில் வைத்து எடுத்து, என்னுடைய பணக்கஷ்டம் எல்லாம் தீர வேண்டும் என்று இந்த முடிச்சை பண பெட்டியல் வைத்தால் உங்கள் கஷ்டங்கள் எல்லாம் தீரும்.

முடிந்தால் நாளை விடிந்த பிறகும் கூட வீட்டு பக்கத்தில் இருக்கும் பெருமாள் கோவிலில், சொர்க்கவாசல் திறந்துதான் இருக்கும். நாளை எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் நீங்கள் அந்த பெருமாள் கோவிலுக்கு சென்று சொர்க்க வாசல் வழியாக நுழைந்து பெருமாளை சேமித்துவிட்டு வரலாம். அந்த சமயத்தில் பெருமாள் பாதத்தில் இருந்து இரண்டு துளசி இலையை வீட்டிற்கு கொண்டு வாருங்கள். முடிந்தால் பெருமாள் தீர்த்தத்தை கொஞ்சம் வாங்கி வாருங்கள்.

இதையும் படிக்கலாமே: பரணி நட்சத்திர அதிர்ஷ்ட பலன்

அதைக் கொண்டு வந்து வீட்டில் நகை வைக்கும் பெட்டியில் லேசாக தெளித்து விடுங்கள். நிறைய தண்ணீர் கொட்டி விட்டால் பீரோ உள்ளே பூசணம் பிடித்து விடும். ஜாக்கிரதை. பெருமாள் கோவில் பிரசாதத்தை, பெருமாள் கோவிலில் இருந்து எடுத்துவரப்பட்ட துளசியை நகை வைக்கும் பெட்டியில் பீரோவில் வையுங்கள். மூன்று நாள் கழித்து அதை எடுத்து வெளியில் போட்டு விடுங்கள். கால் படாத இடத்தில் சேர்த்து விடவும். மேலே சொன்ன இந்த எளிமையான பரிகாரங்கள் நாளை வைகுண்ட ஏகாதேசி தினத்தில் பெருமாளின் அருளை முழுமையாக பெற்றுத்தர உங்களுக்கு உதவும் என்ற நம்பிக்கையில் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -
Published by