- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபரணி நட்சத்திர அதிர்ஷ்ட பலன்

பரணி நட்சத்திர அதிர்ஷ்ட பலன்

- Advertisement -

“பரணியில் பிறந்தால் தரணி ஆளலாம்” என்று ஒரு ஜோதிட பழமொழி உண்டு. பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த உலகத்தையே ஆளக்கூடிய யோகம் உடையவர்கள் என்று சொல்லுவார்கள். அதிகார பதவி வகிப்பதிலும், ஆளுமை செய்வதிலும் இவர்கள் திறமை உடையவர்களாக இருப்பார்கள். இந்த பரணி நட்சத்திர நாளில் நம் வீட்டில் இந்த விஷயத்தை செய்தால் பிதுர் தோஷங்கள் நீங்கும், வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும் என்பது நம்பிக்கை. அதைப் பற்றிய சுவாரஸ்யமான ஆன்மீகம் சார்ந்த தகவல்களை இப்பதிவில் தொடர்ந்து காணலாம் வாருங்கள்.

சுக்கிர பகவானின் அருளும், செவ்வாய் பகவானின் அருளும் ஒரு சேர இணைந்து இவர்களை பராக்கிரமசாலியாகவும், வீரமிக்கவர்களாகவும் இருக்க செய்கிறது. இந்த பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நம் வீட்டிற்கு வருகை தந்தால் அவர்களை மனம் மகிழும் படியாக விருந்து உபசாரம் செய்து வழி அனுப்ப வேண்டும். விருந்தோம்பல் செய்யும் பொழுது பரணி நட்சத்திரக்காரர்களின் மகிழ்ச்சி நம் வீட்டில் சுபகாரியங்களை நிகழ்த்தி கொடுக்கும் அளவிற்கு அவர்கள் அதிர்ஷ்டக்காரர்கள் என்று ஜோதிடம் கூறுகிறது.

- Advertisement -

பரணி நட்சத்திரக்காரர்கள் மட்டும் அல்லாமல் பரணி நட்சத்திரம் வரும் நாள் அன்று நம் வீட்டிற்கு யாராவது விருந்தாளியாக வந்தால், அவர்களையும் சாப்பிடாமல் வெளியில் அனுப்பக் கூடாது. வயிறு நிரம்ப அன்றைய தினம் வருபவர்களுக்கு உணவு அளித்து வழி அனுப்பினால் தோஷங்கள் நீங்கி, சந்தோஷம் வீட்டில் நிலைக்கும் என்பது நம்பிக்கை.

சாதுவாக இருந்தாலும், சாமர்த்தியசாலியாக இருக்கக் கூடிய இவர்கள் நட்பு கிடைத்தால், அவர்கள் பெரும் பாக்கியசாலிகளாக இருப்பார்கள். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுடன் நட்புறவாடுவது மிகவும் நல்லது. அவர்கள் அவர்களை மட்டும் அல்லாமல் உடன் இருப்பவர்களையும் மேம்படுத்துவார்கள். கேள்வி அறிவு மட்டுமல்லாமல், சுய அறிவும் இவர்களிடம் அதிகமாக இருக்கும்.

- Advertisement -

பரணி நட்சத்திர நாளில் பொன் வாங்குவது சிறப்பான பலன்களை கொடுக்கும். பரணி நட்சத்திரம் வரக் கூடிய நாளில் நகை கடைக்கு சென்று நகை வாங்குவதை நீங்கள் வாடிக்கையாக வைத்துக் கொண்டால் பொன் நகைகள் அதிகம் சேரும். சிறுக சிறுக நகை சேர்க்க வேண்டும் என்பவர்கள் இந்த நட்சத்திரத்தை பயன்படுத்தலாம். நகை வாங்குவது என்பது இக்காலத்தில் ரொம்பவும் சிரமமான ஒன்று. குறிப்பிட்ட நல்ல நட்சத்திரத்தில் வாங்கும் பொழுது வாங்கிய நகை வீண் போகாமல் மென்மேலும் நகை சேர்வதற்கு வழிவகை செய்யும்.

இதையும் படிக்கலாமே:
10-1-2025 வைகுண்ட ஏகாதசி வழிபாடு

பரணி நட்சத்திரம் அன்று மூலிகைச் செடிகளை நடுவதும் அதிர்ஷ்டம் தரக் கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது. மூலிகை செடிகளை வீட்டில் நடுபவர்கள் பரணி நட்சத்திரம் அன்று நடுவது நல்லது. அது மட்டுமல்லாமல் அன்றைய நாளில் காஞ்சி காமாட்சி அம்மனை தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு, திருமண தடைகள் முழுமையாக நீங்கும். திருமண தோஷம் உள்ளவர்கள், திருமண தடைகள் இருப்பவர்கள் மூன்று மாதம் தொடர்ந்து காஞ்சி காமாட்சி அம்மனை பரணி நட்சத்திர நாளில் சென்று வழிபட வேண்டும். இப்படி செய்து வருவதன் மூலம் தடைகள் அகன்று, விரைவிலேயே சுபகாரியங்களும், திருமண யோகங்களும் கைகூடிவரும். சுக்கிரன் அம்சம் இருப்பதால் இவர்கள் சுகபோகமான வாழ்க்கையை அதிகம் விரும்புவார்கள்.

சற்று முன்