- Advertisement -
சுவாரஸ்ய தகவல்கள்

அமெரிக்காவில் தோன்றிய பிரமாண்ட ஸ்ரீசக்ரம் – அலறும் விஞ்ஞானிகள்

இந்து மதத்தில் உள்ளவர்கள் ஸ்ரீசக்ரத்தை வழிபடுவது நாம் அறிந்ததே. ஆனால் அமெரிக்காவில் ஆள் நடமாட்டமே இல்லாத ஒரு பகுதியில் சுமார் 13.3 மைல் சதுர அளவிற்கு மிக பெரிய பிரமாண்டமான ஸ்ரீசக்கரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வாருங்கள் இது குறித்து விரிவாக பார்ப்போம்.

அமெரிக்காவில் உள்ள ஒரெகன் என்னும் மாநிலத்தில் உள்ளது ஸ்டீன்ஸ் என்னும் மலை பகுதி. இந்த மலை பகுதியின் தென்கிழக்கில் கடுமையான சூரிய அனல் கொண்ட ஒரு பாலைவனம் இருக்கிறது. பில் மில்லர் என்னும் ராணுவ அதிகாரி ஒரு குட்டி விமானம் மூலம் இந்த இடத்தை கடந்து செல்கயில் அவர் கண்களுக்கு வரிவரியாக ஏதோ தெரிந்திருக்கிறது.

- Advertisement -

ஆள் நடமாட்டமே இல்லாத இந்த பகுதியில் என்ன இது ஏதோ வரையப்பட்டிருக்கிறது என்று விமானத்தில் வட்டமிட்டபடியே அவர் அதை கூர்ந்து கவனித்துள்ளார். முதலில் அது ஏதோ ஒரு நாட்டின் வரைபடமாக இருக்கக்கூடும் என்று நினைத்து ஆராய தொடங்கிய அவர் ஒரு கட்டத்தில் அதிர்ந்து போனார். காரணம் அது ஸ்ரீசக்கரம். கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் தொடர்ந்து விமானத்தில் வட்டமிட்ட பிறகே அவரால் அந்த ஸ்ரீசக்கரத்தை முழுமையாக பார்க்க முடிந்தது.

9000 அடி உயரத்தில் இருந்து எடுக்கப்பட்ட அந்த பிரமாண்ட ஸ்ரீசக்ரத்தின் படம் இதோ

இதனை அடுத்து அந்த பகுதியில் யார் இதை வரைந்திருப்பார்கள் என்று ஆராய தொடங்கினர். ஆனால் பல நூறு ஆண்டுகளாக அந்த பகுதியில் மனித நடமாட்டம் இருந்ததற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை. அதோபோல் எந்த ஒரு வாகனம் வந்ததற்கான அடையாளமும் இல்லை. இந்த ஆய்வின் முடிவுகள் அனைத்தும் அவர்களுக்கு விசித்திரமாகவே இருந்தன. அதை யார் வரைந்திருப்பார்கள்? எப்போது அதை வரைந்திருக்க கூடும்? இப்படி பல கேள்விகளுக்கான பதில்களை அவர்களால் அறிய முடியவில்லை.

- Advertisement -

ஆய்வை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்வதற்காக அதே போல் மற்றொரு ஸ்ரீசக்கரத்தை அவர்கள் வரைய முடிவு செய்து அதை வரையவும் ஆரமித்தனர். ஆனால் பல வருடங்கள் கடந்தும் அவர்களால் அதே போல் ஒரு ஸ்ரீசக்ரத்தை இன்றுவரை முழுமையாக வரையமுடியவில்லை.

இதையும் படிக்கலாமே:
கடல் நீரை இனிப்பாக மாற்றும் முருகன் கோவில் கிணறு – ஆச்சர்யத்தில் ஆய்வாளர்கள்

இந்த ஆய்வு குறித்து ஒரு வீடியோ பதிவும் வெளியிடப்பட்டுள்ளது.

- Advertisement -