- Advertisement -
- Advertisement -

வாழ்க்கைக்கு தேவைப்படும் ஒவ்வொரு பொருளும் தினமும் நமக்கு கிடைக்க வேண்டிய பொருட்களாகவே திகழ்கின்றன. அப்படிப்பட்ட பொருட்களாக நாம் கருதுவது உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம், இவை அனைத்தையும் வாங்குவதற்கு தேவையான பணம், நகை போன்றவை தான். இவை அனைத்தும் ஒருவருடைய வாழ்க்கையில் நிரந்தரமாக கிடைத்துவிட்டால் அவரே பணக்காரராக திகழ்கிறார்.

அப்படி ஒருவர் பணக்காரராக திகழ வேண்டும் என்றால் அவர் சம்பாரித்த பணமோ, நகையோ அவரிடம் நிரந்தரமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ஒரு ரூபாய்க்கு பத்து ரூபாயாக பெருக வேண்டும். இப்படி தங்களிடம் இருக்கக்கூடிய செல்வம் பெருக வேண்டும் என்று நினைப்பவர்கள் எந்த இடத்தில் அந்த செல்வத்தை வைத்து வழிபட வேண்டும் என்பது பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

நினைத்த பொருளை வாங்க வழிபடு

எந்த செல்வமாக இருந்தாலும் அந்த செல்வம் நமக்கு கிடைக்க வேண்டும் என்றாலோ, கிடைத்த செல்வம் நம்முடனே இருக்க வேண்டும் என்றாலோ, நம்மிடம் இருக்கும் செல்வம் பல்கி பெருக வேண்டும் என்றாலோ அதற்கு மகாலட்சுமி தாயாரின் அருள் என்பது பரிபூரணமாக வேண்டும். அப்படி மகாலட்சுமி தாயாரின் அருளை பெறுவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான வழிபாட்டை பற்றி பார்ப்போம்.

மகாலட்சுமி தாயார் நீக்கமர நிறைந்திருக்கும் பொருட்கள் என்று சில பொருட்கள் இருக்கின்றன. அந்த பொருட்கள் இருக்கும் இடத்தில் கண்டிப்பான முறையில் மகாலட்சுமி தாயாரும் இருப்பாள் என்பது புராணங்களில் கூறப்பட்டுள்ள ஒரு உண்மை. அந்த பொருட்களிடம் நாம் சம்பாதிக்கும் பொருட்களை வைத்து வழிபடும் பொழுது மகாலட்சுமி தாயாரின் அருள் அந்த பொருளுக்கு கிடைத்து அது பல மடங்கு பெருகும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.

- Advertisement -

அப்படிப்பட்ட பொருட்களுள் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது தான் துளசி செடி. அனைத்து மதத்தவரும் வீட்டில் வளர்க்கக் கூடிய ஒரு செடியாக தான் துளசி செடி திகழ்கிறது. காரணம் இதில் மகத்துவம் அதிகம் இருந்தாலும் மருத்துவர் ரீதியாகவும் இது பயன்படுகிறது என்பதால் தான். அப்படிப்பட்ட துளசிச் செடியில் மகாவிஷ்ணுவும், மகாலட்சுமி தாயாரும் வீற்றிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

யாரொருவர் வீட்டில் துளசிச் செடியை வைத்து தினமும் அதற்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்கிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையில் வறுமை என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்ற கூற்றும் நிலவி வருகிறது. அப்படிப்பட்ட துளசி செடி இருக்கும் அந்த இடத்தில் அதாவது வேர் உள் செல்லும் அந்த மண்ணில் நாம் சம்பாதித்த பணமோ, நகையோ, வீடோ, வண்டியோ, வாகனமோ எதை வைத்தாலும் அது பல மடங்கு பெருகும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

மாத சம்பளம் வாங்கியதும் அந்த சம்பளத்தை பூஜை அறையில் வைப்பதற்கு பதிலாக துளசி செடியின் வேர் செல்லும் மண்ணில் வைத்து தீபம் ஏற்றி வழிபாடு செய்துவிட்டு பிறகு அந்த பணத்தை எடுத்து செலவு செய்ய அந்த பணம் பல மடங்கு பெருகும் என்று கூறப்படுகிறது. இதே போல் தான் புதிதாக வாங்கிய நகைகளையும் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

வீடு, வண்டி, வாகனத்தை கொண்டு வந்து வைக்க முடியாது என்று குதர்க்கமாக பேசுபவர்களும் இருப்பார்கள். இதற்கு வீட்டு பத்திரத்தையும், வண்டிகளின் சாவியையும் அல்லது அதற்குரிய ஆவணங்களை வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: தடை மற்றும் தாமதம் நீங்க வழிபாடு

மிகவும் எளிமையான இந்த வழி வழிபாட்டு முறையை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு மகாலட்சுமி தாயாரின் அருள் பரிபூரணமாக கிடைத்து செல்வ செழிப்புடன் வாழ்வார்கள்.

- Advertisement -