கடல் நீரை இனிப்பாக மாற்றும் முருகன் கோவில் கிணறு – ஆச்சர்யத்தில் ஆய்வாளர்கள்

murugan-4

முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்றாக திகழ்கிறது திருச்செந்தூர் முருகன் கோவில். பெரும்பாலான முருகன் கோவில்கள் குன்றின் மீதும் மலைமீதும் அமைந்துள்ள நிலையில் இந்த கோவில் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது. பல சிறப்புக்கள் பெற்ற இந்த கோவிலில் பலரையும் அதிசயத்தில் ஆழ்த்தும் ஒரு கிணறு உள்ளது. அது தான் நாழிக்கிணறு.

nazhikinaru

கடற்கரைக்கு மிக அருகாமையில் இந்த கிணறு இருந்தாலும் இதில் சுரக்கும் நீரில் உப்பு கரிப்பதில்லை மாறாக இந்த நீர் இனிக்கிறது. இதன் பின் அறிவியல் உண்டு என்று பலரும் பலவிதமான காரணங்களை கூறினாலும் அவை ஏற்புடையதாக இல்லை. இதில் பெரும்பாலானோர் கூறும் காரணம் யாதெனில் கடல் மண்ணினால் நீர் வடிகட்டப்பட்டு உப்பு தன்மை நீக்கப்பட்டு இந்த நீர் கிணற்றை அடைகிறது என்பதே.

ஒரு வேலை அது தான் காரணம் என்றால் அந்த புகுதில் உள்ள அனைத்து கிணறுகளில் உள்ள நீரும் இனிக்கவேண்டும் ஆனால் உண்மை என்னவென்றால் நாழிக்கிணறு தவிர மற்ற கிணறுகளில் உள்ள நீரில் உப்பு தன்மை கடுமையாக உள்ளது.

nazhikinaru

அந்த கடற்பகுதியின் சுற்று வட்டாரத்தில் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் வரை உள்ள அனைத்து கிணறுகளிலும் உப்பு நீரே கிடைக்கிறது என்று கூறப்படுகிறது. ஆனால் கடலில் இருந்து வெறும் 100 முதல் 200 அடி தொலைவில் அமைந்துள்ள இந்த கிணறில் மட்டும் எப்படி சுவை மிக்க நீர் கிடைக்கிறது என்பதை அறிய புராணங்களை புரட்டிப்பார்த்தால் அதில் ஒரு அறிய தகவல் உள்ளது.

- Advertisement -

nazhikinaru

முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்தது இங்கு தான் என்பது நாம் அறிந்ததே. அந்த போரின்போது முருகப்பெருமான் தன் படையில் உள்ள வீரர்களின் தாகத்தை தீர்ப்பதற்காக தன் வேலின் மூலம் உருவாக்கிய கிணறே நாழிக்கிணறு என்கிறது புராணங்கள். அப்படி பார்த்தால், கடவுள் உருவாக்கிய கிணறில் சுவையான நீர் வராமல் இருந்ததால் தான் அதிசயம்.

இதையும் படிக்கலாமே:
இறைவனை தன் முன் வரவைத்த மனிதன் – உண்மை சம்பவம்

அறிவியலில் நாம் எவ்வளவு வளர்ச்சி கண்டிருந்தாலும் கடலோரத்தில் அந்த கிணற்றில் மட்டும் எப்படி இன்றுவரை சுவையான நீர் வற்றாமல் கிடைக்கிறது என்பதை யாராலும் கண்டறிய இயலவில்லை என்பதே உண்மை.