
ஒருவருடைய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் அவருக்கு நடக்க வேண்டிய சுப காரியங்கள் அனைத்தும் எந்தவித தடையும் இல்லாமல் நடைபெற வேண்டும். அப்படி நடைபெறாத பட்சத்தில் அவருடைய வாழ்க்கை மகிழ்ச்சிகரமான வாழ்க்கையாக அமையாது. இந்த சுபகாரிய தடைகளை நீக்குவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான தீப வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம
என்னதான் நாம் செல்வ செழிப்புடன் வாழ்ந்தாலும் நமக்கு நடக்க வேண்டிய சுப காரியங்கள் அதற்குரிய நேரத்தில் நடைபெற வேண்டும். காலதாமதமாக நடைபெற்றாலும் சுபகாரிய பேச்சை எடுக்கும் பொழுதெல்லாம் ஏதாவது ஒரு பிரச்சினைகள் ஏற்பட்டு அது தடைப்பட்டு நின்றாலும் அந்த வாழ்க்கை மகிழ்ச்சிகரமான வாழ்க்கையாக அமையாது. இப்படி பலரும் பல விதங்களில் தடைகளை சந்தித்து நிம்மதியற்ற நிலையில் வாழ்கிறார்கள்.
ஒருவருடைய வாழ்க்கையில் சுபகாரியம் என்பது அவர்கள் நினைக்கும் படிப்பை படிப்பது, நினைத்த வேலையில் சேர்வது, வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவது, நினைத்த தொழிலை ஆரம்பிப்பது தொழில் சிறப்பாக நடைபெறுவது, திருமணம் நடைபெறுவது, குழந்தை பாக்கியம் கிடைப்பது, குழந்தைகளுக்கு மொட்டை அடித்து காது குத்துவது, குழந்தைகளுக்கு நல்ல விஷயங்கள் நடப்பது என்று பல சுப காரியங்கள் ஏற்படும்.
இப்படி சுபகாரியம் நடைபெறும் பொழுது ஏதாவது ஒரு தடைகள் வந்து அந்த காரியம் அப்படியே நின்றுவிடும். அதோடு மட்டுமல்லாமல் ஒரு சிலரின் வாழ்க்கையில் சுபகாரியம் செய்ய வேண்டும் என்று பேசினாலே ஏதாவது ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டு அது அப்படியே தள்ளிக் கொண்டே போகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருப்பவர்கள் குலதெய்வத்தை நினைத்து செய்யக்கூடிய ஒரு எளிமையான வழிபாட்டை பற்றி தெரிந்து கொள்வோம்.
வெள்ளிக்கிழமை அன்று காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு பிரம்ம முகூர்த்த வேளையில் வீட்டு பூஜை அறையில் ஒரு சிறிய தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் மஞ்சளை கொட்டி சிறிது பன்னீர் ஊற்றி கெட்டியாக பிணைந்து அப்படியே வடை போல தட்டிக் கொள்ள வேண்டும். அதற்கு மேலே ஒரு அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபமேற்றி குலதெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும்.
இப்படி வெள்ளிக்கிழமை தோறும் வழிபாடு செய்ய அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய சுபகாரிய தடைகள் அனைத்தும் விலகி விடும். எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாது. நல்ல விதத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். எந்த ஒரு சுப காரியத்தை செய்ய வேண்டும் என்று நினைக்கிறோமோ அப்பொழுதில் இருந்து குலதெய்வத்தை மனதார நினைத்துக் கொண்டு இந்த முறையில் தீபமேற்றி வழிபட வேண்டும். இயன்றவர்கள் குலதெய்வத்தின் நாமத்தை 108 முறை உச்சரிக்கலாம்.
இதையும் படிக்கலாமே: பணம் சேர சஷ்டி வழிபாடு
மிகவும் எளிமையான இந்த தீப வழிபாட்டில் நம்பிக்கை இருப்பவர்கள் குலதெய்வத்தை மனதார நினைத்துக் கொண்டு இந்த தீபத்தை ஏற்றி வழிபட அவர்கள் வாழ்க்கையில் இருக்க கூடிய சுபகாரிய தடைகள் அனைத்தும் நீங்கும்