கந்தனை நம்பினோர் கைவிடப்படார் என்பது கந்தனை முழுமனதோடு நம்பி வாழ்க்கையில் முன்னேறியவர்களுக்கு நன்றாக தெரியும் வாழ்க்கையில் முன்னேறியவர்களுக்கு நன்றாக தெரியும். கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து அருள் புரியக்கூடிய கலியுக தெய்வமாக விளங்க கூடியவர் தான் இந்த கந்த பெருமான். இந்த முருகப்பெருமானை வழிபட பல தினங்கள் இருந்தாலும் அவருக்கே உகந்த சில தினங்கள் உண்டு.
அவற்றுள் ஒன்று தான் சஷ்டி இந்த சஷ்டி திதியில் முருகரை நினைத்து வழிபடும் பொழுது நாம் வேண்டுவை எல்லாம் கிடைக்கும் என்பதோடு வாழ்க்கையில் சகல செல்வத்தையும் பெறலாம் என்பதில் சந்தேகம் இல்லை அப்படியான சஷ்டி திதியில் நாம் முருகரை நினைத்து செய்யும் இந்த வழிபாடுகள் நம்முடைய வாழ்க்கையில் பணக்கஷ்டம் வராது தடுக்கும் என்று சொல்லப்படுகிறது அது பற்றிய தகவலை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பணம் சேர முருகன் வழிபாடு
நாளைய தினம் தேய்பிறை சஷ்டி இதில் முருகரை வழிபாடு செய்யும் பொழுது நம்முடைய வாழ்க்கை மென்மேலும் மெருகேறும். அப்படியான நாளில் நாளைய தினம் பிரம்ம முகூர்த்த நேரத்தில் நம் வீட்டு பூஜை அறையில் மூன்று நெய் தீபங்கள் ஏற்ற வேண்டும் இந்த நெய் தீபங்கள் அகல் விளக்காகவும் இருக்கலாம் அல்லது நீங்கள் ஏற்று வேறு எந்த விளக்காகவும் இருக்கலாம்.
அதே போல் நாளைய தினம் வீட்டில் அமர்ந்து கந்த சஷ்டி கவசத்தை முழுவதுமாக படிக்கவோ அல்லது கேட்கவோ செய்ய வேண்டும். இது முருகனின் அருளை நமக்கு பரிபூரணமாக பெற்று தரும். அது போல வேல் வைத்திருப்பவர்கள் வேல் வழிபாடு செய்வது சிறந்தது. வெற்றிலை தீபம் ஏற்றி வழிபடுவதும் குடும்பத்திற்கு நன்மை தரும்.
இத்துடன் முருகருக்கு அபிஷேகத்திற்கு தேன் வாங்கி தருவது நம்முடைய செல்வ வளத்தை அதிகரிக்கும். அதுமட்டுமின்றி நாம் வீட்டில் நம் கையால் தயாரித்த பஞ்சாமிர்தத்தை ஆலயத்தில் உள்ள முருகருக்கு படைத்து கோவிலுக்கு வருபவருக்கு தந்தால் நம்முடைய வாழ்க்கையில் உள்ள பணத்தடைகள் அனைத்தும் நீங்கும் என்று சொல்லப்படுகிறது.
இவை அனைத்திலும் சேர்த்து நாளைய தினத்தில் யாரேனும் மூன்று பேருக்கு அன்னதானம் வழங்க வேண்டும். இது நம்முடைய வாழ்க்கை மட்டுமின்றி நம்முடைய சந்ததியினர் வாழ்க்கைக்கு கந்தன் அருளை பெற்றுத்தர பேருதவியாக இருக்கும். முருகனை நினைப்பதே பெரும் பாக்கியம் எனும் பொழுது முருகனை வழிபடுவது அரும்பெரும் பாக்கியம் என்றே சொல்லலாம்.
இதையும் படிக்கலாமே: சங்கடங்களை தீர்க்கும் விநாயகர் தீபம்
அப்படியான முருகப்பெருமானை அவருக்கே உகந்த நாட்களில் ஒன்றான சஷ்டி தேதியில் இது போல வழிபாடு செய்யும் பொழுது நம்முடைய வாழ்க்கையில் உள்ள பணத்தடை, காரியத்தடை அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழ முடியும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இதை செய்து பலன் அடையலாம்.