- Advertisement -

தொழிலில் வெற்றிகள் பெருக அஷ்டமி வழிபாடு

- Advertisement -

சொந்தக்காலில் நின்று வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கக்கூடிய ஒவ்வொரு நபரும் சொந்தமாக தொழில் செய்வார்கள். அப்படி தொழில் செய்யும்பொழுது அந்த தொழிலில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் அனைத்தையும் சமாளித்து அந்த தொழிலை அடுத்த கட்ட நிலைக்கு முன்னேற்றி செல்வதற்கும், லாபம் பெறுவதற்கும் தொழிலை வெற்றிகரமாக நடத்துவதற்கும் விடாமுயற்சி எந்த அளவிற்கு முக்கியமோ அதை அளவிற்கு தெய்வ வழிபாடும் முக்கியம். அப்படி தொழிலில் வெற்றிகள் உண்டாவதற்கு நாம் வழிபட வேண்டிய முக்கியமான தெய்வங்களுள் ஒருவராக திகழ்பவர் தான் காலபைரவர். கால பைரவரை அஷ்டமி தினத்தன்று எப்படி வழிபட்டால் தொழிலில் வெற்றி கிடைக்கும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

வெற்றிகள் பெருக அஷ்டமி வழிபாடு

கால பைரவரை பற்றி கூறுவதற்கு வார்த்தைகளே இல்லை. நம்முடைய வாழ்க்கையில் எப்படிப்பட்ட கஷ்டங்களை நாம் அனுபவித்தாலும் காலபைரவரை வணங்க ஆரம்பித்து விட்டோம் என்றால் அந்த கஷ்டங்கள் அனைத்தும் சிறிது சிறிதாக நம்மை விட்டு விலக ஆரம்பிக்கும். நம்முடைய வாழ்க்கையில் ஒரு நல்ல முன்னேற்றம் உண்டாகும். அப்படிப்பட்ட காலபைரவரை நாம் செய்யும் தொழிலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும் வழிபாடு செய்யலாம்.

- Advertisement -

கால பைரவருக்கு உகந்த திதியாக கருதப்படுவது அஷ்டமி திதி. இது வளர்பிறை தேய்பிறை என்று இரண்டு முறை மாதத்தில் வரும். இதில் எந்த அஷ்டமியை பயன்படுத்தி வேண்டுமானாலும் நாம் இந்த வழிப்பாட்டை செய்யலாம். இந்த முறை பங்குனி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி என்பது மார்ச் மாதம் 22 ஆம் தேதி வருகிறது. அன்றைய தினம் சனிக்கிழமை என்பதால் அந்த அஷ்டமிக்கு அதிக பலன் இருக்கிறது. அதனால் தொழிலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளும் வழிபாட்டை இன்றைய நாளில் ஆரம்பிப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவே திகழும்.

இதற்கு நமக்கு தேவைப்படக்கூடியது ஏலக்காய் தான். 21 எண்ணிக்கையில் ஏலக்காயை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த ஏலக்காயில் எந்தவித வெடிப்பும் இருக்கக் கூடாது. நல்ல நிலையில் இருக்கக்கூடிய ஏலக்காயாக பார்த்து தான் எடுக்க வேண்டும். இந்த ஏலக்காயை சிவப்பு நிற நூலில் மாலையாக கோர்த்துக் கொள்ளுங்கள். பிறகு அருகில் இருக்கக்கூடிய கால பைரவரின் சன்னதிக்கு சென்று அங்கு கால பைரவருக்கு சாற்றச் சொல்லித் தர வேண்டும். இதோடு கால பைரவருக்கு சிவப்பு நிற மலர்களையும் வாங்கித் தர வேண்டும்.

- Advertisement -

கால பைரவருக்கு அபிஷேகத்திற்காக வாசனை மிகுந்த புனுகு, ஜவ்வாது, பன்னீர் போன்றவற்றை வாங்கித் தந்து காலபைரவரின் அபிஷேகத்தில் கலந்துகொண்டு அவரை முழுமனதோடு வழிபாடு செய்ய வேண்டும். பிறகு “ஓம் ஸ்ரீம் ஸ்வர்ண ஆகர்சனாய பைரவாய நம” என்னும் மந்திரத்தை 108 முறை அங்கேயே அமர்ந்து பைரவரை பார்த்தவாறு கூற வேண்டும். இப்படி பைரவருக்கு உகந்த அஷ்டமி திதி அன்று காலபைரவரை வழிபாடு செய்ய நாம் செய்யக்கூடிய தொழிலில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தையும் நீக்கி வெற்றிகளை தருவதோடு பணவரவையும் உண்டாக்கி தருவார்.

இதையும் படிக்கலாமே:பங்குனி தேய்பிறை அஷ்டமி வழிபாடு

முழுமனதோடு கால பைரவரை இந்த முறையில் அஷ்டமி தினத்தன்று வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் செய்யும் தொழிலில் வெற்றிகள் உண்டாவதோடு பண வரவும் அதிகரிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -