- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபங்குனி தேய்பிறை அஷ்டமி வழிபாடு

பங்குனி தேய்பிறை அஷ்டமி வழிபாடு

- Advertisement -

காலங்களுக்கு அதிபதியாகவும் எட்டுத்திக்குகளுக்கும் உரியவராகவும் திகழ்பவர் தான் கால பைரவர். கால பைரவரை நாம் வழிபாடு செய்வதன் மூலம் பல நன்மைகள் உண்டாகும். மேலும் நம்மை கஷ்டப்படுத்தக் கூடிய யாராக இருந்தாலும் அவர்களின் தொல்லையில் இருந்து விடுபட முடியும். சனீஸ்வர பகவானின் குருவாக திகழக்கூடிய கால பைரவருக்குரிய அஷ்டமி என்பது இந்த பங்குனி மாதத்தில் சனிக்கிழமையோடு சேர்ந்து வருகிறது என்பதால் கால பைரவரை அன்றைய தினத்தில் வழிபாடு செய்யும்பொழுது எண்ணில் அடங்கா பலனை பெற முடியும். அந்த வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

கிரகங்களில் நமக்கு அதிக அளவில் கஷ்டத்தை தரக்கூடியவர் சனிபகவான் என்று நம் அனைவருக்குமே தெரியும். சனிபகவானின் தாக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்றால் சனி பகவானின் குருவான கால பைரவரை நாம் வழிபாடு செய்ய வேண்டும். எப்பேர்ப்பட்ட சனிதோஷமாக இருந்தாலும் அந்த தோஷத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளிலிருந்து விடுபட வேண்டும் என்றால் கண்டிப்பான முறையில் கால பைரவரிடம் நாம் சரணாகதி அடைய வேண்டும். அப்படிப்பட்ட காலபைரவருக்குரிய தேய்பிறை அஷ்டமி என்பது சனிக்கிழமையோடு சேர்ந்து வரும் பொழுது இது இரட்டிப்பு பலனை தரக்கூடியதாக திகழும்.

- Advertisement -

பங்குனி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி என்பது மார்ச் மாதம் 22ஆம் தேதி சனிக்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினத்தில் ராகு காலம், எமகண்ட நேரத்தை தவிர்த்து மீதம் இருக்கக்கூடிய எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த தீபத்தை ஏற்றி வைத்து காலபைரவரை நாம் வழிபாடு செய்யலாம். வீட்டில் காலபைரவரின் படம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த வழிபாட்டை நாம் செய்யலாம். இதற்கு ஒரு தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அது நிரம்ப முழு உளுந்தை பரப்ப வேண்டும். அந்த உளுந்திற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

இந்த தீபம் வடக்கு அல்லது கிழக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். இந்த தீபத்திற்கு முன்பாக ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். முடிந்த அளவிற்கு உளுந்தால் செய்யப்பட்ட பொருட்களை வைப்பது என்பது சிறப்பு. இவ்வாறு வைத்து முடித்துவிட்டு நாம் வடக்குப் பார்த்து நின்று கொண்டு கால பைரவரை மனதார நினைத்துக் கொண்டு கால பைரவரின் இந்த ஒரு மந்திரத்தை சத்தமாக கூற வேண்டும். மனதிற்குள் கூறக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி கூறி முடித்து உங்களுடைய வேண்டுதலை கால பைரவரிடம் முன் வைக்கும் பொழுது கால பைரவரின் அருளால் அந்த வேண்டுதல் விரைவிலேயே நிறைவேறும்.

- Advertisement -

அன்றைய தினத்தில் அருகில் இருக்கக்கூடிய கால பைரவரின் சன்னதிக்கு சென்று வழிபாடு செய்வது என்பது சிறப்பு. அதே போல் அன்றைய தினம் உளுந்து வடையை தங்களால் இயன்ற அளவு பிறருக்கு வாங்கி தானமாக தருவதன் மூலம் தேய்பிறை அஷ்டமி வழிபாட்டின் முழு பலனையும் பெற முடியும்.

மந்திரம்

“ஓம் கால பைரவாய நமோ நம”

இதையும் படிக்கலாமே: நல்ல வேலை கிடைக்க பதிகம்

சிவபெருமானின் மறு அவதாரமும் உக்கிர தெய்வங்களில் முதன்மையான தெய்வமாகவும் திகழக்கூடியவரான கால பைரவரை தேய்பிறை அஷ்டமி நாள் அன்று இந்த முறையில் வழிபாடு செய்ய அவரின் அருளால் நாம் நினைத்தது அனைத்தும் நல்ல விதமாக நடந்தேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்