- Advertisement -
வீட்டு குறிப்புகள்

இந்த டிப்ஸ் எல்லாம் தெரிஞ்சா போதுங்க இந்த கோடை காலத்தை ஈசியா சமாளிச்சிடலாம். அப்படி என்னன்னு தெரிஞ்சிக்கலாமா?

- Advertisement -

வீட்டு வேலைகளை பொருத்தவரை ஒவ்வொரு காலத்திற்கும் ஒவ்வொரு மாதிரியான பிரச்சனைகள் இருக்கத் தான் செய்யும். மழை, குளிர் காலங்களில் ஒரு விதமான பிரச்சனைகள் என்றால் வெயில் காலங்களில் வேறு சில பிரச்சனைகளை சமாளிக்க வேண்டியது இருக்கும். அதிலும் இந்த நேரத்தில் வெப்பத்தை சமாளிப்பது தான் இருப்பதிலேயே முக்கியமான பிரச்சனையாக இருக்கும். இப்போது இந்த வீட்டு குறிப்பு பதிவில் கோடை காலத்தின் வெப்பத்தை சமாளிக்க நாம் வேலைகளை இன்னும் எளிமையாக்க சில பயனுள்ள குறிப்புகளை தெரிந்து கொள்ளலாம்.

கோடை காலத்தில் முதல் பிரச்சனையே வெளியில் சென்று வந்ததும் ஜில்லுனு ஏதாவது குடிக்க வேண்டும் என தோன்றுவது தான். அந்த நேரத்தில் பிரிட்ஜில் தண்ணீர் இல்லை என்றால் பெரிய கலாபரமே நடந்து விடும். இது போன்ற சமயத்தில் ஒரு கண்ணாடி பாட்டில் அல்லது பிளாஸ்டிக் பாட்டில் உங்களிடம் எந்த பாட்டில் இருந்தாலும் அதில் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். ஒரு காட்டன் துணியை தண்ணீரில் முக்கி ஈரப்படுத்திய பிறகு அதை பாட்டிலில் சுற்றி ஃப்ரீசர் பாக்ஸ்ல் போட்டு விடுங்கள். நிமிடத்தில் சில்லுனு தண்ணீர் தயார்.

- Advertisement -

அதே போல் இந்த நேரத்தில் நாம் பிரிட்ஜில் எவ்வளவு ஐஸ்கட்டிகள் சேமித்து வைத்தாலும் போதாது. அதற்கு ஃப்ரிட்ஜில் ஐஸ் கியூப் டிரேவில் தண்ணீர் சுற்றி வைத்து ஆன பிறகு அதை ஒரு சில்வர் அல்லது பிளாஸ்டிக் டப்பாவில் சேகரித்து ஃப்ரீசர் உள்ளே வைத்து விடுங்கள். உங்களுக்கு தேவைப்படும் போது பாக்ஸில் இருக்கும் ஐஸ் கியூப்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இது போன்று அடிக்கடி எடுத்து வைத்துக் கொண்டால் நிறைய ஐஸ் க்யூப் இந்த கோடை நேரத்தில் சமாளிக்க பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போது உள்ள பிரிஜ்ஜில் ஐஸ் கியூப் சேமிக்க இடம் உள்ளது இல்லாதவர்கள் இந்த குறிப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

அதே போல் இந்த ஐஸ் கியூப்கள் விரைவில் உங்களுக்கு தேவைப்பட்டால் வெறும் தண்ணீர் ஊற்றுவதற்கு பதிலாக கொஞ்சம் வெதுவெதுப்பான நீரை அதில் ஊற்றி வைத்து பாருங்கள். உடனே ஐஸ் கியூப் தயாராகி விடும். இதே ஐஸ் கியூபை அப்படியே வெறும் தண்ணீராக ஊற்றி வைக்காமல் தண்ணீர் ஊற்றும் முன்பு அதில் கொஞ்சம் புதினா இலைகளை சேர்த்து அதன் பிறகு ஊற்றி வைத்தால் ஜூஸ் போடும் போது இந்த புதினா ஐஸ்க்யூபுகளை கலந்து குடிக்கலாம். இதனால் உடலுக்கும் நல்லது.

- Advertisement -

இதே போன்று ஜூஸ் போடுவதற்கு நாம் சர்க்கரையை அந்த நேரத்தில் கலந்தால் தண்ணீரில் இருக்கும் குளுமை தன்மை காரணமாக சர்க்கரை கரைய லேட் ஆகும். சர்க்கரையை மிக்ஸியில் நல்ல பவுடராக அரைத்து ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். ஜூஸ் போடும் போது அந்த சர்க்கரை பவுடரை பயன்படுத்துங்கள் உடனே ஜூஸ் போட்டு விடலாம்.

அதே போல் இந்த கோடை காலத்தில் குளிர்பானங்களை அதிக அளவில் எடுத்துக் கொள்வார்கள். அப்படி செய்வதால் உடல் நலத்திற்கும் தீங்கு ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே நீங்கள் வீட்டில் ஒரு துண்டு இஞ்சி, ஒரு பச்சை மிளகாய் கொஞ்சம் பெரிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் சேர்த்து ஒன்றும் பாதியுமாக அரைத்து ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். உங்களுக்கு குளிர்பானம் குடிக்க வேண்டும் என தோன்றும் பொழுது மோர் அடித்து அதில் அரைத்து வைத்த இந்த விழுதை கால் டீஸ்பூன் சேர்த்து கால் டீஸ்பூன் சீரகமும் சேர்த்து பருகிப் பாருங்கள். நல்ல ஒரு பானம் அருந்திய திருப்தி கிடைக்கும். அது மட்டும் இன்றி இது உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.

இதையும் படிக்கலாமே: வெயில் காலத்திலும் மாவு, தயிர் அதிக நாட்கள் புளிக்காமல் இருக்க இந்த சூப்பர் ஐடியாவை தெரிஞ்சுக்கோங்க. அப்புறம் பாருங்க உங்க வீட்ல மட்டும் எப்படி இந்த அதிசயம் நடக்குது எல்லாரும் கேட்பாங்க.

இந்த பதிவில் கோடை காலத்திற்கு தேவையான சில குறிப்புகளை எப்படி சுலபமாகவும் விரைவாகவும் செய்வது என்பது தெரிந்து கொண்டிருப்பீர்கள் நீங்களும் இதை முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் உங்கள் நேரமும் வேலையும் குறைந்து விடும்.

- Advertisement -