வெயில் காலத்திலும் மாவு, தயிர் அதிக நாட்கள் புளிக்காமல் இருக்க இந்த சூப்பர் ஐடியாவை தெரிஞ்சுக்கோங்க. அப்புறம் பாருங்க உங்க வீட்ல மட்டும் எப்படி இந்த அதிசயம் நடக்குது எல்லாரும் கேட்பாங்க.

Curd Batter
- Advertisement -

இந்த வெயில் காலத்தை சமாளிப்பதே பெரிய பிரச்சனை என்றால் இந்த நேரத்தில் நம் வீட்டில் செய்யும் சமையலாகட்டும் அல்லது மாவு, தயிர் எதுவாக இருந்தாலும் வெப்பத்தின் காரணமாக சீக்கிரம் புளித்து பொங்கி வீணாகும் வாய்ப்பு அதிகம். அப்படி இந்த மாவு தயிர் எல்லாம் புளிக்காமல் அதிக நாட்கள் எப்படி பாதுகாப்பது என்பதை இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இட்லி மாவு அதிக நாள் புளிக்காமல் இருக்க:
இப்போதெல்லாம் பெரும்பாலும் இட்லி, தோசை மாவுகளை கடையில் வாங்கி தான் பயன்படுத்துகிறார்கள். இந்த குறிப்பு வீட்டில் அரைத்து பத்திரப்படுத்தி வைப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இட்லி, தோசைக்கு மாவு அரைத்தவுடன் முதலில் மொத்தமாக மாவை கரைத்து விடாமல் அடுத்த நாளுக்கு தேவையான மாவை மட்டும் எடுத்து உப்பு போட்டு கரைத்து மீதி மாவை அப்படியே பிரிட்ஜில் வைத்து விடுங்கள். இந்த வெயில் காலத்தில் நாம் மொத்தமாக உப்பு சேர்த்து கலந்து ஃப்ரிட்ஜில் வைத்தால் கண்டிப்பாக ஒன்று இரண்டு நாட்களுக்குள்ளாகவே மாவு புளித்து விடும்.

- Advertisement -

இப்படி ஃப்ரிட்ஜில் எடுத்து வைக்கும் மாவில் வெற்றிலையை காம்புடன் போட்டு வைத்தால் மாவு சீக்கிரத்தில் புளிக்காது. அப்படி போடும் போது வெற்றிலையின் காம்பு மாவின் உள்ளே அழுத்தி இருக்க வேண்டும். அதை விட கற்பூரவல்லி என்று சொல்லப்படும் ஒமவல்லி செடியின் நான்கு அல்லது ஐந்து இலைகளை பறித்து மாவில் சேர்த்து கரைத்து வைத்து விட்டால், இதில் இருக்கும் காரத் தன்மைக்கு நீண்ட நாட்களுக்கு மாவு புளிக்காமல் இருக்கும். இந்த கற்பூரவள்ளியின் வாடை ஏதும் மாவில் வராது. உடலுக்கும் இந்த இலை மிகவும் நன்மை தரக் கூடியது தான்.

தயிர் அதிகம் புளிக்காமல் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க:
மாவு எப்படி இந்த கோடை காலத்தில் அரைத்து வைத்தால் உடனே புளித்து விடுமோ, அதே போல தான் தயிரும். தயிர் உறையூற்றி வைத்த ஒன்று இரண்டு நாட்களுக்குள்ளாகவே புளித்து நுரைத்து விடும். அதன் பிறகு அதை சாப்பிடவே முடியாது. நிறைய பேருக்கு தயிர் கெட்டியாக அதே நேரத்தில் அதிகம் புளிப்பு இல்லாமல் கடைகளில் கிடைப்பது போல் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படியானவர்கள் இந்த குறிப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

- Advertisement -

இந்த முறையில் பால் உறையூற்ற முதலில் கிணத்தில் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலை ஊற்றிய பிறகு டீ ஆற்றுவது போல இந்த பாலை ஆற்ற வேண்டும். அதன் பிறகு வீட்டில் இருக்கும் பீங்கான் ஜாடி அல்லது மண் குடுவை இரண்டில் ஏதாவது ஒன்றில் இதை ஊற்றி மூடி வைத்து விட்டால் தயிர் அதிக கெட்டியாக ஆவதுடன் அதிக நாட்கள் புளிக்காமல் கடைகளில் கிடைக்கும் தயிர் போலவே இருக்கும்.  ஆனால் பாலை காய்ச்சிய பாத்திரத்திலே உறை ஊற்றக் கூடாது. பால் காய்ச்சிய பிறகு அதை வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதன் பிறகு தான் உறை ஊற்ற வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வெள்ளை துணியில் கறை பட்டுவிட்டால் எதுவும் செய்யாதீங்க, இதை தேச்சா போதுமே! பழைய சட்டை கூட புதுசு போல வெள்ளையா இருக்கணுமா?

இந்த இரண்டு விஷயங்களும் அனைவர் வீட்டிலும் அன்றாடம் கடைபிடிக்க வேண்டியவை தான். உங்களுக்கு இந்த குறிப்புகள் பிடித்திருந்தால் நீங்களும் உங்கள் வீட்டில் இனி மாவு தயிர் புளிக்காமல் இருக்க இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

- Advertisement -