- Advertisement -
- Advertisement -

இந்த வருடத்தின் முதல் சூரிய கிரகணம் ஆனது இன்று நிகழ்வு இருக்கிறது. இந்திய நேரப்படி 29-03-2025 இன்று மதியம் 2:20 மணிக்குத் தொடங்கும் சூரிய கிரகணம், மாலை 6:00 வரை நிகழ இருக்கிறது. மொத்தமாக இந்த சூரிய கிரகணம் 4 மணி நேரம் நீடிக்கும். இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது என்றும் விஞ்ஞானிகளால் சொல்லப்பட்டுள்ளது. இருப்பினும் சூரிய கிரகணம் ஏற்படக்கூடிய நேரத்தில் பூமி முழுவதும் ஒரு நேர்மறை ஆற்றல் இருக்கும்.

அந்த நேர்மறை ஆற்றலை சரியாக பயன்படுத்தினால், வேண்டிய வரங்களை இந்த பிரபஞ்சத்திடம் இருந்து சுலபமாக பெற்றுக் கொள்ளலாம். அந்த வகையில் இந்த சூரிய கிரகணம் நேரத்தில் உங்கள் மனதிற்கு பிடித்த இஷ்ட தெய்வத்தை வேண்டி வழிபாடு செய்யலாம். மந்திரம் சித்தியாகும். பணத்தேவையில் சிக்கி இருப்பவர்கள், கடன் சுமையிலிருந்து வெளிவர வேண்டும் என்று, நினைப்பவர்களும் இந்த 4 மணி நேரத்தில், தியான நிலையில் அமர்ந்து முதுகு தண்டுவடத்தை நேராக வைத்து, இறைவனிடம் என்ன வரம் கேட்டாலும் அது சுலபமாக கிடைக்கும்.

- Advertisement -

இதன் அடிப்படையில் பணத் தேவையை பூர்த்தி செய்து கொள்ள இந்த சூரிய கிரகண நேரத்தில் நாம் செய்யக்கூடிய ஒரு எளிமையான தாந்திரீக பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

சூரிய கிரகண பரிகாரம்

வரவேற்புரையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் இஷ்ட தெய்வத்தை மனதார நினைத்துக் கொள்ளுங்கள். குலதெய்வத்தையும் வேண்டிக் கொள்ளலாம். எந்த வழிபாடாக இருந்தாலும் அதில் நம்பிக்கை ரொம்ப ரொம்ப முக்கியம். நம்பிக்கையோடு இதை செய்யுங்கள். உங்கள் பண தேவை, கடன் சுமை நிச்சயம் குறையும். ஒரு டம்ளரில் சீரக தண்ணீர் கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள். தண்ணீரில் கொஞ்சம் சீரகம் போட்டு சூடு செய்தால் சீரகத் தண்ணீர் தயாராகிவிடும்.

- Advertisement -

அதை வடிகட்டி உங்கள் முன்பு வைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் சுத்தமான சந்தனத்தை குறைத்து நெற்றியில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த சந்தனத்தை இரண்டு உள்ளம் கைகளிலும் லேசாக பூசிக்கொள்ளுங்கள். இந்த சீரகத் தண்ணீரை குடித்துவிட்டு ஏற்றி வைத்திருக்கும் விளக்குக்கு முன்பு முதுகு தண்டுவடம் நீராக இருக்கும் படி அமர்ந்து கொள்ளவும். பின்பு மகாலட்சுமியை மனதில் பிரார்த்தனை செய்து “ஸ்ரீம்” என்ற மந்திர வார்த்தையை சொல்லுங்கள். இது, மகாலட்சுமியின் பீஜ மந்திரம். பணத்தைக் கொண்டு வந்து உங்கள் கையில் கொடுக்கக்கூடிய மந்திரம்.

உங்களுக்கு என்ன பண பிரச்சனை இருக்கிறதோ, அந்த பண பிரச்சனை தீர வேண்டும் எவ்வளவு பணம் தேவை, அந்த பணத்தை, இந்த பிரபஞ்சன் உங்களுக்கு கொடுக்கப் போவதாக மனதார எண்ணி சந்தோஷத்தோடு இந்த பீஜ மந்திரத்தை சொல்லி பிரார்த்தனை செய்தால், நிச்சயமாக உங்களுடைய பண பிரச்சினை தீரும்.

- Advertisement -

இந்த பிரார்த்தனையை மேலே குறிப்பிடப்பட்டுள்ள அந்த சூரிய கிரகணம் நேரத்தில் நீங்கள் செய்ய வேண்டும். மொத்தமாக 4 மணி நேரமும் உங்களால் இந்த வழிபாட்டை செய்ய முடியாது என்றால் கூட, கிரகண நேரத்தில் 15 லிருந்து 20 நிமிடம் இதற்காக நேரத்தை ஒதுக்கி வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். பிரார்த்தனை செய்யுங்கள். நிச்சயமாக உங்களுடைய வேண்டுதல் நிறைவேறும். பண பிரச்சினை தீரும்.

இதையும் படிக்கலாமே: யுகாதி அன்று செய்ய வேண்டிய விநாயகர் வழிபாடு

இந்த 4 மணி நேரமும் உங்களால் தியான நிலையில் அமர முடியும் என்றால் “ஓம்” என்ற பிரணவ மந்திரத்தை சொல்லி இறைவனை பிரார்த்தனை செய்வது உச்சகட்ட பலனை உங்களுக்கு கொடுக்கும். வாழ்நாள் பிரச்சனைகளை அனைத்தையும் தீர்த்து வைக்க இந்த ஒரு மந்திரம் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -