- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalயுகாதி அன்று செய்ய வேண்டிய விநாயகர் வழிபாடு

யுகாதி அன்று செய்ய வேண்டிய விநாயகர் வழிபாடு

- Advertisement -

தமிழர்கள் கொண்டாடப்படக்கூடிய வருடப்பிறப்பு சித்திரை 1, தமிழ் வருட பிறப்பு. தெலுங்கு கன்னடம் பேசுபவர்கள், இதுபோல வட்டாரத்தில் இருப்பவர்கள், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் கொண்டாடப்படக்கூடிய புது வருட பிறப்பு பண்டிகை யுகாதி என்று, நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அப்படி கிடையாது.

இந்த யுகாதி பண்டிகையை நாம் அனைவரும் கொண்டாடலாம். இந்த பண்டிகை அனைவருக்கும் பொதுவானதுதான். சித்திரை வருடப்பிறப்பிற்க்கும், இந்த யுகாதி வருட பிறப்பிற்கும் பெருசாக எந்த வித்தியாசமும் கிடையாது. இரண்டு வழிபாடுகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருக்கும். கலியுகத்தால் வரும் கஷ்டங்களில் இருந்து விடுபட வேண்டும் என்றால், யுகாதி பண்டிகையின் போது நம் வீட்டிலும் என்ன வழிபாடு செய்வது ஆன்மீகம் சார்ந்த ஒரு தகவலைத்தான் இன்றைய பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

கலியுகத்தில் கஷ்டங்களை கொடுக்கக்கூடிய அரக்கன் என்றால் அது இந்த மோகாசுரன் தான். மோகாசுரன் என்று சொல்லக்கூடிய இந்த பெயர், “மோகம்” எனும் வார்த்தையை குறிக்கிறது. கலியுகத்தில் வாழக்கூடிய மக்களுக்கு பணத்தின் மீது மோகம், நகையின் மீதும் மோகம், ஆடம்பர வாழ்க்கையின் மீது மோகம், அடுத்தவர்களை ஏமாற்றி பிடுங்கி, எப்படியாவது இந்த கலியுகத்தில் செல்வந்தர்களாக மாற வேண்டும் என்று மோகம்.

மோகம் என்ற வலையில் சிக்கிக் கொண்டு பெரிய தவறுகளை செய்கின்றோம். மனிதாபிமானம் இல்லாமல் வாழ்கின்றோம். ஒவ்வொருவர் மனதிலிருந்தும் இந்த மோகம் என்ற அசுரனை விரட்டி அடிக்க வேண்டும் என்றால், தெலுங்கு வருடப்பிறப்பான நாளைய தினம், யுகாதி தினத்தில் கட்டாயம் இந்த வழிபாட்டை செய்யுங்கள். நீங்கள் இந்த கலியுகத்தில் மோகம் என்னும் பிடியிலிருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்க்கையை பெறுவீர்கள். உங்களுக்கு தேவையான செல்வம் நியாயப்படி உங்கள் கையை வந்து சேரும்.

- Advertisement -

யுகாதி வழிபாடு

யுகாதி அன்று 5 மணிக்கு அதிகாலை வேளையிலேயே எழுந்து சுத்த பத்தமாக குளித்து விட வேண்டும். பிறகு யுகாதி பண்டிகைக்கு அறுசுவை சேர்த்த பச்சடி ஒன்று தயார் செய்ய வேண்டும். இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு மற்றும் துவர்ப்பு இவைகள் எல்லாம் அறுசுவை என்பது நமக்குத் தெரியும்.

ஒரு பாத்திரத்தில் புளிக்கரைசல் கொஞ்சம், வெல்லம் கொஞ்சம், உப்பு, மிளகு தூள், நறுக்கிய மாங்காய், வேப்பம்பூ, இந்த 6 பொருட்களையும் சேர்த்தால் போதும். அறுசுவை நிறைந்த பச்சடி தயாராகிவிடும். இதை இறைவனுக்கு நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். உங்களால் முடிந்த ஒரு இனிப்பு பிரசாதம் நெய்வேத்தியம் வைத்து விநாயகரை மனதார நினைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

தும்பிக்கை நாயகனே விநாயகா! வாழ்க்கைக்கு எனக்கான நம்பிக்கையை கொடு. காமம், குரோதம், லோபம், மோகம், அகங்காரம், மதஸர்யம் என்ற இந்த ஆறு குணங்களும் என்னை விட்டு அகல வேண்டும் என்று மனதார விநாயகனே பிரார்த்தனை செய்து கொள்ளவும். யுகாதி அன்று விநாயகர் பாதங்களை பற்றிக் கொண்டால், இந்த கலியுகத்தால் வரும் கஷ்டங்கள் உங்களை விட்டு விலகும் என்பது நம்பிக்கை. யுகாதி அன்று காலையில் விநாயகரை உங்கள் குடும்ப நன்மைக்காக வேண்டி அழைத்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். எலியின் மீது விநாயகர் குடுகுடுவென ஓடி வந்து உங்களுடைய குடும்பத்தை காத்திடுவார். இது முதல் வழிபாடு.

அதன் பிறகு யுகாதி அன்று பஞ்சாங்கத்தை ஒரு முறை வாசிக்க வேண்டும் என்பது நியதி. உங்களுடைய கைபேசியிலையே, கூகுளில் இன்றைய பஞ்சாங்கம் என்று போட்டால், இன்றைக்கான பஞ்சாங்கம் வந்துவிடும். அந்த பஞ்சாங்கத்தை ஒரு முறை வாசித்து விட்டு அன்றாட வேலைகளை நீங்கள் செய்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்திற்கு வழிபாடு

யுகாதி இரவு தூங்கச் செல்லும் போது “சிவ சிவ” என்று அந்த எம்பெருமானின் பெயரைச் சொல்லிவிட்டு தூங்கச் செல்லலாம். நாராயணனை வழிபாடு செய்பவர்களாக இருந்தால், பெருமாளே நாராயணா என்று சொல்லிவிட்டு நீங்கள் இந்த நாளை நிறைவு செய்து கொண்டு தூங்கச் செல்லலாம். மேல் சொன்ன இந்த யுகாதி வழிபாட்டை நாம் அனைவருமே செய்யலாம். நமக்கு வாழ்க்கையில் நல்லது நடக்கும். அடுத்த வருடம் முழுவதும் வாழ்க்கையில் முன்னேற்றப் பாதையில் நம்மை நகர்த்திச் செல்ல இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவு நிச்சயம் பயனுள்ளதாக அமையும் என்ற தகவலுடன் இந்த பதிவினை நிறைவு செய்து.

சற்று முன்