- Advertisement -

தெய்வ நடமாட்டத்தை உணர்த்தும் அறிகுறிகள்

- Advertisement -

நம்முடைய வீட்டில் தொடர்ச்சியாக ஏதாவது ஒரு கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கிறது, ஒவ்வொரு செயலை செய்யும் பொழுதும் அதில் ஏதாவது ஒரு தடைகள் வந்து கொண்டே இருக்கிறது, என்னதான் வீட்டில் விளக்கேற்றி பூஜை செய்தாலும் தெய்வத்தின் அருள் கிடைக்க வில்லை என்று புலம்புபவர்கள் பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்கள் வீட்டில் தெய்வ நடமாட்டம் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வதற்கு சில அறிகுறிகள் இருக்கின்றன. அந்த அறிகுறிகளை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவு நாம் பார்க்க போகிறோம்.

தெய்வ நடமாட்டத்தை உணர்த்தும் அறிகுறிகள்

ஒவ்வொரு வீட்டிலும் நேர்மறை ஆற்றல்களும் இருக்கும். எதிர்மறை ஆற்றல்களும் இருக்கும். எதிர்மறை ஆற்றல்களை நீக்கி நேர்மறை ஆற்றல்களை வளர்த்துக் கொள்வதன் மூலமே வீட்டில் நல்ல செயல்கள் நடைபெறும். நம்மாளும் நல்ல செயல்களை செய்ய முடியும். அந்த அளவிற்கு அபரிவிதமான சக்தி கொண்டதாக தான் நேர்மறை ஆற்றல்கள் திகழ்கின்றன. இந்த நேர்மறை ஆற்றல்கள் வீட்டில் இருந்தால்தான் வீட்டில் நல்ல நிகழ்வுகள் என்பது ஏற்படும்.

- Advertisement -

அப்படி ஏற்படுவதற்கு நேர்மறை ஆற்றல்கள் வீட்டில் இருக்கிறதா? என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் அதை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். இல்லாத பட்சத்தில் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களை நீக்கிவிட்டு நேர்மறை ஆற்றல்களை வீட்டிற்குள் கொண்டு வர வேண்டும். அப்படி என்றால் முதலில் நாம் நம் வீட்டில் எந்த ஆற்றல் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா? அப்படி நேர்மறை ஆற்றல்கள் நம்முடைய வீட்டில் இருக்கிறதா? என்பதை தெரிந்து கொள்வதற்குரிய சில அறிகுறிகளை பற்றி தான் பார்க்க போகிறோம்.

பொதுவாக எந்த ஒரு வீட்டில் துர்நாற்றம் வீசாமல் இருக்கிறதோ அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல் இருக்கிறது என்று அர்த்தம். இதை பலரும் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். அதனால்தான் நம்முடைய முன்னோர்கள் சாம்பிராணி தூபம் போட வேண்டும், ஊதுபத்தி காட்ட வேண்டும் என்றெல்லாம் கூறியிருக்கிறார்கள். இதேபோல் நேர்மறை ஆற்றல் வீட்டில் இருக்கிறது என்றால் அதற்கும் சில வாசனை வரும். விபூதியின் வாசனை வரும் வீட்டில் தெய்வ நடமாட்டம் இருக்கும். மேலும் எலுமிச்சம் பழத்தின் வாசனை, வேப்பிலையின் வாசனை, அதோடு வாசனை மிகுந்த மலர்களின் வாசனை. இந்த வாசனைகளில் ஏதாவது ஒரு வாசனை நம்முடைய வீட்டில் இருந்தால் தெய்வ நடமாட்டம் அங்கு இருக்கிறது என்று அர்த்தம்.

- Advertisement -

இவை எதையும் உணர முடியவில்லை என்று நினைப்பவர்கள் வெள்ளிக்கிழமை அன்று அருகில் இருக்கக்கூடிய அம்மன ஆலயத்திற்கு சென்று ஒரு எலுமிச்சம் பழத்தை அம்மனின் பாதத்தில் வைத்து வாங்கி வர வேண்டும். இந்த எலுமிச்சம் பழத்தை வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். எலுமிச்சம்பழம் காய்ந்து விட்டால் வீட்டில் தெய்வ நடமாட்டம் இருக்கிறது என்று அர்த்தம். அழுகி விட்டால் எதிர்மறை ஆற்றல் இருப்பதாக உணர்ந்து கொள்ளலாம்.

மேலும் நம்முடைய நடவடிக்கையிலும் இந்த தெய்வ நடமாட்டம் இருக்கக்கூடிய சமயத்தில் நேர்மறையான எண்ணங்களே அதிக அளவில் தோன்றும். பிறருக்கு நன்மைகள் செய்ய வேண்டும் என்ற எண்ணமே மனதிற்குள் ஏற்படும். இதே எதிர்மறை ஆற்றல்கள் இருக்கும் பட்சத்தில் நாம் மட்டுமே முன்னேற வேண்டும் என்று சுயநலமாகவோ அல்லது பிறரை கெடுக்க வேண்டும் என்ற எண்ணமோ நம்மை அறியாமலேயே நம் மனதிற்கு தோன்றும். இந்த அறிகுறிகளை வைத்து நம் வீட்டில் தெய்வ நடமாட்டம் இருக்கிறதா இல்லையா என்பதை எளிதில் கண்டுபிடித்துவிட முடியும்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர கஜலட்சுமி பூஜை

மிகவும் எளிமையான இந்த அறிகுறிகளை பயன்படுத்தி தெய்வ நடமாட்டம் நம் வீட்டில் இருப்பதை உறுதி செய்து கொள்ள முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -