மகாலட்சுமி தாயாரின் அருளை பெறுபவர்கள் அனைவருமே பாக்கியசாலியாக கருதப்படுகிறார்கள். எவ்வளவுதான் கஷ்டமான சூழ்நிலையில் இருந்தாலும் மகாலட்சுமி தாயாரின் கடைக்கண் பார்வை ஒருவர் மீது விழுந்துவிட்டால் அவருடைய வாழ்க்கையில் அனைத்துமே நன்மையாகவே நடைபெறும். அந்த அளவிற்கு அற்புதமான தெய்வமாக திகழக்கூடியவர் தான் மகாலட்சுமி தாயார். நம்மிடம் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கி செல்வ செழிப்புடன் வாழ வைக்கக்கூடிய அற்புத தெய்வமாக திகழக்கூடிய மகாலட்சுமி தாயாரை யானையை வைத்து எந்த முறையில் வழிபட்டால் கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கடன் தீர கஜலட்சுமி பூஜை
மகாலட்சுமி தாயாருக்கு பல அவதாரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு அவதாரத்திற்கும் ஒவ்வொரு பெயர்கள் இருக்கும். அதிலும் குறிப்பாக நாம் பார்க்கக்கூடிய அவதாரங்கள் தான் அஷ்டலஷ்மி அவதாரம். ஒவ்வொரு லட்சுமியும் ஒவ்வொரு வகையான செல்வத்தை நமக்கு வாரி வழங்குவார்கள் என்பதால் அவர்களை அஷ்டலஷ்மி என்று அழைக்கிறோம். அதில் மிகவும் முக்கியமான அம்சம் கொண்ட லக்ஷ்மியாக திகழ்பவள்தான் கஜலட்சுமி.
யானைகள் இருபுறத்திலும் இருந்து சர்வ காலமும் அம்மனுக்கு அபிஷேகம் செய்வதை தான் கஜலட்சுமி என்று நாம் கூறுகிறோம். யானை முகம் என்பது சுகத்தை தரக்கூடியது என்று கூறப்படுகிறது. அதனால் தான் பல வீடுகளிலும், தொழில் செய்யும் இடத்திலும், அலுவலகத்திலும் யானையின் முகத்தை மாட்டி வைப்பார்கள். அந்த அளவிற்கு சிறப்பு மிகுந்ததாக திகழக்கூடிய யானையை வைத்து நாம் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்யும்பொழுது நமக்கு பணம் ரீதியான அனைத்து பிரச்சனைகளும் தீரும். செல்வ செழிப்பு உயரும்.
இதற்கு நமக்கு இரண்டு யானைகள் வேண்டும்.சிறிய அளவில் இருக்கக்கூடிய யானையாக இருந்தாலும் பரவாயில்லை அது வெள்ளி யானையாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. அப்பொழுது தான் நாம் யானைக்கு அபிஷேகம் செய்ய முடியும். மேலும் வெள்ளி என்பது மகாலட்சுமிக்குரிய உலோகம் என்பதாலும் நமக்கு விரைவிலேயே நல்ல பாலன் கிடைக்கும்.
இந்த பூஜையை தொடர்ந்து 41 நாட்கள் செய்ய வேண்டும். வீட்டில் மகாலட்சுமி தாயாரின் விக்ரகம் இருக்கும் பட்சத்தில் அந்த விக்கிரகத்திற்கு இரண்டு புறங்களிலும் யானையை வைக்க வேண்டும். தினமும் காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு அந்த யானைக்கு முதலில் தண்ணீரை ஊற்றி அபிஷேகம் செய்து கொள்ளுங்கள். பிறகு காய்ச்சாத பசும்பாலை ஊற்றி அபிஷேகம் செய்ய வேண்டும். மறுபடியும் தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்து ஈரம் இல்லாமல் துடித்துக் கொள்ளுங்கள்.
பிறகு அந்த யானைக்கு சந்தனம் குங்குமம் வைத்து மகாலட்சுமி தாயாரின் இரண்டு புறங்களிலும் வைத்து விட வேண்டும். இவ்வாறு வைத்த பிறகு உங்கள் வீட்டில் செய்த எச்சில் படாத பொருளை நெய்வேத்தியமாக வைத்து விடுங்கள். இப்படி தொடர்ந்து 41 நாட்கள் நீங்கள் வழிபாடு செய்ய உங்களுக்கு இருக்கக்கூடிய கடன் ரீதியான அனைத்து பிரச்சனைகளும் தீரும்.
பணம் சம்பாதிக்கும் வழிகள் கிடைக்கும். சம்பாதித்த பணம் நிலையாக நிலைத்திருக்கவும் வீண் விரயம் ஏற்படாமல் இருக்கவும். மருத்துவ செலவுகள் எதுவும் நடைபெறாமல் இருக்கவும். சம்பாதித்த பணம் சேமிப்பாக உயரவும் உங்களுக்கு நல்ல வழி கிடைக்க கஜலட்சுமி தாயார் அருள் புரிவார். மகாலட்சுமி தாயாரின் விக்ரஹம் இல்லாத பட்சத்தில் மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு இரண்டு புறங்களிலும் நாம் வைத்து கூட வழிபாடு செய்யலாம்.
இதையும் படிக்கலாமே: கஷ்டங்களை தீர்க்கும் ஆஞ்சநேயர் வழிபாடு
மிகவும் எளிமையான இந்த யானை வழிபாட்டை செய்து கஜலட்சுமி அருளை பரிபூரணமாக பெற்று கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கையை வாழலாம் என்று தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.