
Tamil engal : இலக்கண ரீதியாக தமிழ் மொழிக்கென உருவான எண்களே தமிழ் எண்கள். இந்த எண்கள் அனைத்தும் தற்போது நாம் பயன்படுத்தும் எண்கள் போல அல்லாமல் எழுத்து வடிவில் இருக்கும். நமது முன்னோர்களின் கல்வெட்டுகளில் தமிழ் எண்களை நம்மால் காண முடிகிறது. ஆனால் பல்வேறு படையெடுப்புகளின் காரணமாகவும் கலாச்சார மாறுபாடுகளின் காரணமாகவும் பிற மொழி எண்களின் பயன்பாடு அதிகமாகி அதுவே தற்போது நடைமுறையிலும் உள்ளது. எனினும் தமிழ் எண்கள் பற்றி அறிவதும் அதை எப்படி எழுத வேண்டும் என்று தெரிந்து கொள்வதும் தமிழர்களாக நமது கடமையாக உள்ளது. அந்த வகையில் இங்கே நாம் ஒன்று முதல் நூறு வரை உள்ள தமிழ் எண்களை குறிப்பிட்டுள்ளோம்.
| நடைமுறை எண்கள் | தமிழ் எண்கள் | சுருக்கமான தமிழ் எண்கள் |
|---|---|---|
| 1 | ௧ | - |
| 2 | ௨ | - |
| 3 | ௩ | - |
| 4 | ௪ | - |
| 5 | ௫ | - |
| 6 | ௬ | - |
| 7 | ௭ | - |
| 8 | ௮ | - |
| 9 | ௯ | - |
| 10 | ௰ | ௧0 |
| 11 | ௰௧ | ௧௧ |
| 12 | ௰௨ | ௧௨ |
| 13 | ௰௩ | ௧௩ |
| 14 | ௰௪ | ௧௪ |
| 15 | ௰௫ | ௧௫ |
| 16 | ௰௬ | ௧௬ |
| 17 | ௰௭ | ௧௭ |
| 18 | ௰௮ | ௧௮ |
| 19 | ௰௯ | ௧௯ |
| 20 | ௨௰ | ௨0 |
| 21 | ௨௰௧ | ௨௧ |
| 22 | ௨௰௨ | ௨௨ |
| 23 | ௨௰௩ | ௨௩ |
| 24 | ௨௰௪ | ௨௪ |
| 25 | ௨௰௫ | ௨௫ |
| 26 | ௨௰௬ | ௨௬ |
| 27 | ௨௰௭ | ௨௭ |
| 28 | ௨௰௮ | ௨௮ |
| 29 | ௨௰௯ | ௨௯ |
| 30 | ௩௰ | ௩0 |
| 31 | ௩௰௧ | ௩௧ |
| 32 | ௩௰௨ | ௩௨ |
| 33 | ௩௰௩ | ௩௩ |
| 34 | ௩௰௪ | ௩௪ |
| 35 | ௩௰௫ | ௩௫ |
| 36 | ௩௰௬ | ௩௬ |
| 37 | ௩௰௭ | ௩௭ |
| 38 | ௩௰௮ | ௩௮ |
| 39 | ௩௰௯ | ௩௯ |
| 40 | ௪௰ | ௪0 |
| 41 | ௪௰௧ | ௪௧ |
| 42 | ௪௰௨ | ௪௨ |
| 43 | ௪௰௩ | ௪௩ |
| 44 | ௪௰௪ | ௪௪ |
| 45 | ௪௰௫ | ௪௫ |
| 46 | ௪௰௬ | ௪௬ |
| 47 | ௪௰௭ | ௪௭ |
| 48 | ௪௰௮ | ௪௮ |
| 49 | ௪௰௯ | ௪௯ |
| 50 | ௫௰ | ௫0 |
| 51 | ௫௰௧ | ௫௧ |
| 52 | ௫௰௨ | ௫௨ |
| 53 | ௫௰௩ | ௫௩ |
| 54 | ௫௰௪ | ௫௪ |
| 55 | ௫௰௫ | ௫௫ |
| 56 | ௫௰௬ | ௫௬ |
| 57 | ௫௰௭ | ௫௭ |
| 58 | ௫௰௮ | ௫௮ |
| 59 | ௫௰௯ | ௫௯ |
| 60 | ௬௰ | ௬0 |
| 61 | ௬௰௧ | ௬௧ |
| 62 | ௬௰௨ | ௬௨ |
| 63 | ௬௰௩ | ௬௩ |
| 64 | ௬௰௪ | ௬௪ |
| 65 | ௬௰௫ | ௬௫ |
| 66 | ௬௰௬ | ௬௬ |
| 67 | ௬௰௭ | ௬௭ |
| 68 | ௬௰௮ | ௬௮ |
| 69 | ௬௰௯ | ௬௯ |
| 70 | ௭௰ | ௭0 |
| 71 | ௭௰௧ | ௭௧ |
| 72 | ௭௰௨ | ௭௨ |
| 73 | ௭௰௩ | ௭௩ |
| 74 | ௭௰௪ | ௭௪ |
| 75 | ௭௰௫ | ௭௫ |
| 76 | ௭௰௬ | ௭௬ |
| 77 | ௭௰௭ | ௭௭ |
| 78 | ௭௰௮ | ௭௮ |
| 79 | ௭௰௯ | ௭௯ |
| 80 | ௮௰ | ௮0 |
| 81 | ௮௰௧ | ௮௧ |
| 82 | ௮௰௨ | ௮௨ |
| 83 | ௮௰௩ | ௮௩ |
| 84 | ௮௰௪ | ௮௪ |
| 85 | ௮௰௫ | ௮௫ |
| 86 | ௮௰௬ | ௮௬ |
| 87 | ௮௰௭ | ௮௭ |
| 88 | ௮௰௮ | ௮௮ |
| 89 | ௮௰௯ | ௮௯ |
| 90 | ௯௰ | ௯0 |
| 91 | ௯௰௧ | ௯௧ |
| 92 | ௯௰௨ | ௯௨ |
| 93 | ௯௰௩ | ௯௩ |
| 94 | ௯௰௪ | ௯௪ |
| 95 | ௯௰௫ | ௯௫ |
| 96 | ௯௰௬ | ௯௬ |
| 97 | ௯௰௭ | ௯௭ |
| 98 | ௯௰௮ | ௯௮ |
| 99 | ௯௰௯ | ௯௯ |
| 100 | ௱ | ௧00 |
நமது அட்டவணையில் பூஜ்ஜியம் என்று சொல்லக்கூடிய சுழியம் விடுபட்டு இருப்பதை நீங்கள் பார்க்கலாம். உண்மையில் சுழியம் என்பது ஆரம்ப காலத்தில் இல்லை. அதனாலேயே அது விடுபட்டுள்ளது. ஆனால் பிற்காலத்தில் அந்த எண் புழக்கத்திற்கு வர துவங்கியது.
நூற்றுக்கு மேற்பட்ட எண்களை எப்படி எழுதுவது என்று குழப்பம் அடைய வேண்டாம். இதோ பாத்து முதல் பத்து கோடி வரை எப்படி எழுதுவது என்று கீழே கொடுத்துள்ளோம்.
| நடைமுறை எண்கள் | தமிழ் எண்கள் |
|---|---|
| 10 | ௰ |
| 100 | ௱ |
| 1000 | ௲ |
| 10,000 | ௰௲ |
| 1,00,000 | ௱௲ (நூறு ஆயிரம்) |
| 10,00,000 | ௲௲ (ஆயிரம் ஆயிரம்) |
| 1,00,00,000 | ௰௲௲ (பத்து ஆயிரம் ஆயிரம்) |
| 10,00,00,000 | ௱௲௲ (நூறு ஆயிரம் ஆயிரம்) |
தமிழ் எண்களை பார்ப்பதற்கே வித்தியாசமாக உள்ளதே, இதை எப்படி நினைவில் வைத்துக் கொள்வது என்ற எண்ண ஓட்டங்கள் பலரது மனதில் இப்போது இருக்கலாம். ஆனால் கவலை வேண்டாம். தமிழ் எண்களை மிக எளிதாக நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய வகையில் ஒரு வாக்கியம் உருவாக்கப்பட்டுள்ளது.
“கடலை உருண்டையை நுணுக்கி சமைத்து ருசித்து சாப்பிட என்னை அம்மா கூப்பிட்டார்” இதுவே அந்த வாக்கியம். இந்த வாக்கியத்தில் உள்ள ஒவ்வொரு சொல்லின் முதல் எழுத்தையும் தனியாக எடுத்து பிரித்து எடுத்துட்டு அதனுடன் ஒன்று முதல் ஒன்பது வரையிலான தமிழ் எண்களை ஒப்பிட்டு நினைவில் வைத்துக் கொள்ளலாம். அதற்கான விளக்கப்படம் தான் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
நீங்கள் முதல் 9 எண்களை நினைவில் வைத்துக் கொண்டால் போதும் உங்களால் மற்ற தமிழ் எண்கள் (Tamil engal) அனைத்தையும் எளிதாக எழுத முடியும். உதாரணமாக ஒன்று என்பதை “௧” இப்படி எழுதுவோம். அதுவே 11 என்றால் இரண்டு ஒன்று அதாவது “௧௧” இப்படி எழுதலாம். அதேபோல ஐந்து என்பதை “௫” இப்படி எழுதுவோம், ஆறு என்பதை “௬” இப்படி எழுதவும். 56 என்பதை ஐந்தையும் ஆறையும் சேர்த்து எழுதினாலே போதும் ௫௬ (56) வந்துவிடும்.
மேலே குறிப்பிட்ட உதாரணமானது எளிதாக எழுதக்கூடிய வகையில் அமைக்கப்பட்ட தமிழ் எண்கள் (numbers in Tamil), ஆனால் பழங்காலத்தில் தொன்மை வாய்ந்த தமிழ் எண்களை எழுதுவதற்கு நாம் ஒன்று முதல் பத்து வரை நினைவில் வைத்திருக்க வேண்டும். பத்து என்ற எண்ணை நாம் “௰” இப்படி எழுதுவோம். 20 என்ற எண்ணை எழுத இரண்டு பத்து அதாவது “௰௰” இப்படி எழுதுவோம். 30 என்ற எண்ணை எழுத மூன்று பத்து, இப்படி 99 வரை எழுத முடியும். ஆனால் நூறு என்ற எண்ணை குறிப்பிட “௱” இந்த எழுத்து பயன்படுகிறது. அதேபோல ஆயிரம், பத்தாயிரம், ஒரு லட்சம், 10 லட்சம், ஒரு கோடி, 10 கோடி இப்படி பல்வேறு எங்களை தமிழில் எப்படி எழுதுவது போன்ற தகவல்களையும் மேலே நாம் கொடுத்துள்ளோம்.