Age calculator in Tamil | ஏஜ் கால்குலேட்டர் தமிழில்

Age calculator in Tamil
- Advertisement -

Age calculator in Tamil: ஒரு மனிதன் பிறந்தது முதல் தற்போது வரை எத்தனை நாட்கள், எத்தனை மாதங்கள், எத்தனை வருடங்கள் ஆகி உள்ளது என்பதை கணக்கிட பயன்படுத்தும் விதிமுறையே ஏஜ் கால்குலேட்டர் என்பதாகும். பொதுவாகவே மனிதனின் வயது என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும். ஆனால் வயதை அறிந்து கொள்வது என்பது மிக மிக அவசியமான ஒன்று. ஏனென்றால் வயதை கணக்கில் கொண்டு பல்வேறு விடயங்கள் மனித வாழ்வில் நடைபெறுகின்றன. அந்த வகையில் உங்கள் வயதை சரியாக தெரிந்து கொள்ள உங்கள் பிறந்த தேதியை குறிப்பிட்டால் போதும் கீழே உள்ள ஏஜ் கால்குலேட்டர் உங்கள் வயதை சரியாக கனித்துக் கூறும்.

Age calculator in Tamil

பிறந்த தேதி


Numerology calculator Rasi Nakshatra calculator

- Advertisement -

ஏஜ் கால்குலேட்டரை பயன்படுத்தும் முறை – How to use Age calculator online Tamil

நீங்கள் பிறந்த மாதம், பிறந்த வருடம், பிறந்தநாள் இவை அனைத்தையும் சரியாக பதிவு செய்தால் போதும் உங்களுக்கான ரிசல்ட் சரியாக கிடைக்கும். இது முழுக்க முழுக்க ஆங்கில மாதங்களை கணக்கில் கொண்டு இயங்க கூடிய ஒரு கால்குலேட்டர் ஆகும்.

அளவீடு என்பது பலவற்றுக்கு இருக்கிறது. உதாரணத்திற்கு தூரத்தை அளக்க கிலோமீட்டர் என்ற அளவீடை பயன்படுத்துகிறோம், ஒரு பொருளின் எடையை அளக்க கிலோ கிராம் என்று அளவிட்டை பயன்படுத்துகிறோம். அது போன்று தான் மனிதனின் வளர்ச்சியை அளக்க வயது என்ற சொல்லை நாம் பயன்படுத்துகிறோம்.

- Advertisement -

Age calculator in Tamil

ஏஜ் கால்குலேட்டர் பயன்பாடு

மனித வாழ்க்கையில் சில செயல்கள் அந்தந்த வயதில் நடைபெறுவது தான் சரி என்று ஆன்றோர்கள் கூறுவது உண்டு. இந்த குறிப்பிட்ட வயதில் குழந்தையை பள்ளியில் சேர்க்க வேண்டும், இந்த வயதில் திருமணம் நடக்க வேண்டும், இந்த வயதில் குழந்தை பிறக்க வேண்டும், இப்படி வயதின் அளவீடு என்பது எல்லா காலகட்டங்களிலும் மனிதனுக்கு மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் மேலே உள்ள வயது கால்குலேட்டர் (Age calculator by date of birth in Tamil) பயன்படுத்தி நமக்கான வயதை அறிந்து அதற்கு ஏற்ப நாம் செயல்படலாம்.

வயது என்பது அனைத்து நாடுகளிலும் ஒரே விதமாக கணக்கிடப்படுவது கிடையாது. இந்தியாவைப் பொறுத்தவரையில் குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆன பிறகு தான் நாம் அதற்கு ஒரு வயது ஆகிறது என்று கூறுவோம். இதுவே சீனாவை எடுத்துக் கொண்டால் குழந்தை பிறந்த உடனே அதற்கு ஒரு வயது என்று கூறுவார்கள். பிறகு சீன வருட பிறப்பு வந்ததும் குழந்தைக்கு அடுத்த வயது ஆரம்பித்து விடும்.

- Advertisement -

vayathu calculator

இதில் விடயம் என்னவென்றால் சீனா வருடப் பிறப்பிற்கு ஒரு நாளுக்கு முன்பு குழந்தை பிறந்தது என்று வைத்துக் கொள்வோம் அப்போது குழந்தைக்கு ஒரு வயது. ஆனால் ஒரு நாளுக்கு பிறகு, அதாவது வருடப்பிறப்பு துவங்கியதும் குழந்தைக்கு இரண்டு வயது ஆரம்பித்து விடும். ஆக குழந்தை பிறந்து இரண்டே நாட்களில் அதற்கு இரண்டு வயது ஆகிவிடும். இதுவே சீனாவில் பின்பற்றப்படும் வழக்கம்.

இதுபோன்று உலகின் பல்வேறு நாடுகளில் பல்வேறு விதமான வழக்கங்கள் உள்ளன. ஆனால் பெரும்பாலான நாடுகளில் குழந்தை பிறந்த மாதம் மற்றும் தேதியை கொண்டே அதற்கான வயது கணக்கிடப்படுகிறது.

வயதை கணக்கிடும் கணித முறை – How we calculated age in Tamil Nadu

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நம் முன்னோர்களின் காலத்தில் வயது என்பது தமிழ் மாதங்கள் மற்றும் தேதிகளை வைத்தே கணக்கிடப்பட்டது. ஆனால் ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பிறகு இந்த வழக்கம் படிப்படியாக மாறி தற்போது ஆங்கில தேதி மற்றும் மாதத்தை கணக்கில் கொண்டு வயது கணிக்கப்பட்டு வருகிறது.

Age calculator Tamil

சில மாதங்கள் 30 நாட்களைக் கொண்டிருக்கும் சில மாதங்கள் 31 நாட்களைக் கொண்டிருக்கும். பிப்ரவரி மாதத்தை பொறுத்தவரை 28 நாட்கள் 29 நாட்கள் இப்படி இருக்கும். இந்த ஏஜ் கால்குலேட்டர் (Age calculator in Tamil) இதையெல்லாம் சரியாக கணக்கிட்டு கூறுமா என்று சிலருக்கு சந்தேகம் இருக்கலாம். ஆனால் நிச்சயமாக இவற்றையெல்லாம் கணிக்கும் திறன் இந்த ஏஜ் கால்குலேட்டருக்கு உண்டு.

கர்ப்பகால கால்குலேட்டர்

உதாரணத்திற்கு நீங்கள் உங்கள் பிறந்த தேதியை பிப்ரவரி 30 என்று பதிவிட்டால் அது உங்களை சரியான தேதியை பதிவிடும்படி கேட்கும். அதேபோல இன்று மார்ச் 1 என்று வைத்துக் கொள்வோம் உங்கள் பிறந்த தேதி இதே வருடத்தின் பிப்ரவரி 28 என்றால் இந்த கால்குலேட்டர் (Age calculator online in Tamil) நீங்கள் பிறந்து ஒரு நாட்கள் தான் ஆகிறது என்பதையும் சரியாக கூறும்.

- Advertisement -