- Advertisement -

ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் தந்தூரியுடன் தொட்டுக்க கொடுக்கும் புதினா சட்னி எப்படி நாம் வீட்டிலேயே எளிதாக தயாரிப்பது? மாலை நேர ட்ரெண்டிங் ஸ்நாக்ஸ்க்கு இத அடிச்சுக்க முடியுமா?

- Advertisement -

பெரிய பெரிய ரெஸ்டாரன்ட் முதல் அனைத்து விதமான ஹோட்டல்களிலும் தந்தூரியுடன் கொடுக்கும் மயோனைஸ் எல்லோருக்கும் பிடிக்கும். அதே போல அதனுடன் கொடுக்கும் இந்த புதினா சட்னிக்கும் பெரும்பாலானோர் விசிறிகளாக இருப்பர். நம் வீட்டிலேயே எளிதாக ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் இந்த தந்தூரி புதினா சட்னி ரெசிபி எப்படி எளிதாக தயாரிக்க போகிறோம்? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தந்தூரி புதினா சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
புதினா இலைகள் – ஒரு கைப்பிடி, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி, பச்சை மிளகாய் – 3, உப்பு – தேவையான அளவு, மிளகாய் தூள் – அரை டீஸ்பூன், வறுத்து அரைத்த சீரகத்தூள் – 1/2 ஸ்பூன், சாட் மசாலா – அரை ஸ்பூன், எலுமிச்சை சாறு – ஒரு ஸ்பூன், இஞ்சி – 2 இன்ச், கெட்டி தயிர் – 3 ஸ்பூன்.

- Advertisement -

தந்தூரி புதினா சட்னி செய்முறை விளக்கம்:
தந்தூரி புதினா சட்னி செய்வதற்கு முதலில் ஒரு கைப்பிடி அளவிற்கு சுத்தமான பிரஷ் ஆக இருக்கும் புதினா இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். இதை நன்கு அலசி சுத்தம் செய்து உதறி மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதே போல ஒரு கைப்பிடி அளவிற்கு மல்லி தழையை எடுத்து நன்கு சுத்தம் செய்து மிக்ஸி ஜாரில் சேருங்கள். இந்த இலைகளுடன் மூன்று பச்சை மிளகாய்களை காம்பு நீக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.

வெறும் மிளகாய் தூள் அரை ஸ்பூன், வறுத்து அரைத்த சீரகத்தூள் 1/2 ஸ்பூன், சாட் மசாலா அரை ஸ்பூன் அளவிற்கு சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த சட்னிக்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்க்க வேண்டும். இரண்டு இன்ச் அளவிற்கு இஞ்சியை தோல் நீக்கி சீவி எடுத்துக் கொள்ளுங்கள். அதை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு ஸ்பூன் அளவிற்கு எலுமிச்சை சாறு சேர்த்து மிக்ஸியை மூடி நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அரைத்து எடுத்த இந்த சட்னியுடன் மூன்று ஸ்பூன் அளவிற்கு கெட்டியாக இருக்கும் தயிரை சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைத்து எடுத்து வாருங்கள். அவ்வளவுதாங்க, சூப்பரான இந்த மின்ட் சட்னி காரசாரமாக அருமையாக இருக்கும். மேற்கூறிய அளவுகளின் படி சரியாக நீங்கள் சேர்த்தால் ருசியும் சரியாக இருக்கும். இதை பச்சையாக செய்வதால் கொஞ்சம் அளவுகள் மாறினாலும் ருசி மாறிவிடும். மயோனைஸ் விரும்பிகள், இந்த மின்ட் சட்னியையும் அதிகம் விரும்புவது உண்டு.

இதையும் படிக்கலாமே:
ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னியின் ருசிக்கு இதுதான் காரணமா? அடடே இவ்வளவு நாள் இது கூட தெரியாம போச்சே!

சாட் ஐட்டங்கள் மட்டுமல்லாமல் நம் வீட்டில் மாலையில் பஜ்ஜி, போண்டாவுடன் தொட்டு சாப்பிடவும் இது அவ்வளவு டேஸ்ட்டியாக இருக்கும். சாதாரணமாக பிரட் சாண்ட்விச், பர்கர் செய்யும் போது கூட இந்த சட்னி செய்து கொடுத்தால் தொட்டுக் கொள்ள ருசியாக இருக்கும். மேலும் இதை தந்தூரி, கிரில் சிக்கன், டிக்கா, பிரெஞ்ச் ப்ரை என்று நீங்கள் விரும்பும் சாட் ஐட்டங்களில் விரும்பியபடி தொட்டு சாப்பிடலாம். இதை கடையில் வாங்கி சாப்பிட்டவர்கள், இனி ஒரு முறை வீட்டிலும் செய்து பாருங்கள், நீங்களே ரசித்து ருசித்து சாப்பிடுவீங்க!

- Advertisement -