ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னியின் ருசிக்கு இதுதான் காரணமா? அடடே இவ்வளவு நாள் இது கூட தெரியாம போச்சே!

white-coconut-chutney
- Advertisement -

ஹோட்டலில் கொடுக்கும் தேங்காய் சட்னி கெட்டியாக, டேஸ்டியாக இருக்கும். ஆனால் நம் வீட்டில் என்னதான் தேங்காய் சட்னி விதவிதமான முறைகளில் அரைத்து பார்த்தாலும், அந்த டேஸ்ட்டில் மட்டும் கண்டிப்பாக வந்து இருக்காது. அடிக்கடி செய்யும் சட்னி வகைகளில் தேங்காய் சட்னியும் ஒன்று. அந்த வகையில் ஹோட்டல் ஸ்டைலில் கொடுக்கக்கூடிய இந்த தேங்காய் சட்னியின் ரகசியத்தை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டாமா? அருமையான ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி எப்படி வீட்டிலும் அரைக்க போகிறோம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
துருவிய தேங்காய் – அரை மூடி, பச்சை மிளகாய் – இரண்டு, இஞ்சி – நாலு துண்டு, பூண்டு பல் – ஒன்று, கொத்தமல்லி தழை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு. தாளிக்க: நல்லெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – 1/4 ஸ்பூன், உளுந்து – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு இணுக்கு, பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன், குண்டு மிளகாய் – ஒன்று.

- Advertisement -

ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி செய்முறை விளக்கம்:
ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி செய்ய முதலில் அரை மூடி அளவிற்கு தேங்காயை துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். தேங்காயை நீங்கள் பின்பக்க ஓடுடன் போடும் பொழுது இந்த நிறத்திலும், சுவையிலும் கிடைக்காது. எனவே தேங்காயை உள்புறம் இருக்கும் வெள்ளை பகுதியை மட்டும் துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு மிக்ஸி ஜாரில் இதனை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் பொட்டுக்கடலை, வேர்க்கடலை எதுவும் நாம் சேர்க்கப் போவது கிடையாது. இதெல்லாம் சேர்ப்பதால் சுவை மாறிவிடுகிறது. ஹோட்டல் ஸ்டைலில் தேங்காயின் சுவை மட்டுமே அதிகமாக இருப்பதை பார்த்து இருக்கிறீர்களா? அதன் சுவையே அலாதியாக இருக்கும்.

காரத்திற்கு ரெண்டு பச்சை மிளகாய்களை காம்பு நீக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் ரெண்டு இன்ச் அளவிற்கு இஞ்சியை சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கி சேருங்கள். ஒரே ஒரு பூண்டு பல்லை தோல் உரித்து சேர்த்து, தேவையான அளவிற்கு உப்பு போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் நான்கைந்து கொத்தமல்லி தழைகளை எடுத்து நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி சேருங்கள். பின்னர் தண்ணீர் எதுவும் சேர்க்காமல் தேங்காய் சட்னியை கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்த இந்த சட்னிக்கு ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டும்.

- Advertisement -

தாளிப்பு கரண்டி ஒன்றை அடுப்பில் வைத்து பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். பின் ஒரு கொத்து கருவேப்பிலையை கழுவி உருவி சேருங்கள். இதனுடன் கால் ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
இந்த தீபாவளிக்கு, இந்த முறுக்கு தாங்க உங்க வீட்ல. இட்லி அரிசியில், கையே வலிக்காமல் இப்படியும் முறுக்கு சுடலாம்.

வர மிளகாய் அல்லது குண்டு மிளகாய் ஏதாவது ஒன்றை காம்பு நீக்கி கடைசியாக போட்டு ஒரு முறை வதக்கி அடுப்பை அணைத்து விடுங்கள். பின்னர் சட்னியில் இதை சேர்த்து ஒரு முறை நன்கு கலந்து விட்டுக் கொள்ளுங்கள். அவ்வளவுதான், ரொம்ப ரொம்ப அருமையான சுவையில் இருக்கக்கூடிய இந்த ஹோட்டல் ஸ்டைல் கெட்டி தேங்காய் சட்னி ரெசிபி நம் வீட்டிலும் எளிதாக தயார்! இதே மாதிரி நீங்களும் செய்து பார்த்து அசத்திடுங்க.

- Advertisement -