- Advertisement -

தடைகளை நீக்கும் கங்கா ஸ்நான குளியல்

- Advertisement -

தீபாவளி என்றதும் பலருக்கும் புத்தாடைகளும், பட்டாசுகளும், பலகாரங்களும், அசைவங்களும் ஞாபகத்திற்கு வரும். ஆனால் இதில் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது தான் காலையில் எழுந்ததும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் நாம் செய்யக்கூடிய கங்கா ஸ்நானம். ஒவ்வொரு தீபாவளி நாளிலும் காலையில் எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கத்தை நம்முடைய முன்னோர்கள் வைத்திருக்கிறார்கள். இப்படி செய்வதன் மூலம் நம்மிடம் இருக்கக்கூடிய அனைத்து விதமான தீமைகளும் விலகும் என்று பொருள்படுகிறது. அப்படிப்பட்ட கங்கா ஸ்நானம் செய்யும் பொழுது குளிக்கின்ற தண்ணீரில் சேர்க்க வேண்டிய முக்கியமான பொருட்களை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தடைகளை நீக்க குளியல்

தீபாவளி அன்று பிரம்ம முகூர்த்த நேரத்தில் குறிப்பாக மூன்று முப்பது மணியில் இருந்து ஐந்து முப்பது மணிக்குள் தலைக்கு நல்லெண்ணெய் வைத்து குளிப்பதன் மூலம் கங்கையில் குளித்ததற்குரிய பலனை பெற முடியும். அதன் மூலம் நம்முடைய பாவங்கள் தீரும் என்று கூறப்படுகிறது. அப்படி நாம் குளிக்கின்ற தண்ணீரில் ஒரு சில தெய்வீகமான பொருட்களை கலந்து குளிப்பதன் மூலம் இனிமையான, மங்களகரமான, செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழ முடியும்.

- Advertisement -

கங்கா ஸ்நானத்தை தீபாவளி அன்று செய்வதாக இருந்தாலும் அதற்கு முதல் நாளே ஒரு சொம்பில் சுத்தமான தண்ணீரை பிடித்து அதில் இரண்டு மூன்று துண்டுகள் கற்கண்டையும், இரண்டு மூன்று துண்டுகள் நுணுக்கிய பச்சை கற்பூரத்தையும், ஒரு ஸ்பூன் அளவு மஞ்சள் தூளையும் கலந்து பூஜை அறையில் வைத்து விட வேண்டும். மறுநாள் காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து பெரியவர்கள் தங்கள் வீட்டில் இருக்கக்கூடிய அனைவருக்கும் எண்ணையை தலையில் வைத்து விட வேண்டும். குறைந்தது 5 நிமிடத்தில் இருந்து அரை மணி நேரம் வரை எண்ணெய் தலையில் இருந்த பிறகு குளிக்கச் செல்ல வேண்டும்.

அவ்வாறு குளிக்க செல்லும் பொழுது நாம் பூஜை அறையில் வைத்திருந்த இந்த தெய்வீக தண்ணீரை சிறிதளவு மட்டும் குளிக்கின்ற தண்ணீரில் கலந்து கொள்ள வேண்டும். கிழக்கு திசை பார்த்தவாறு அமர்ந்து கொண்டு முதல் தண்ணீரை ஊற்றும் பொழுது வாழ்க வளமுடன் என்று மனதார நினைத்துக் கொண்டு ஊற்ற வேண்டும். இப்படி குடும்பத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு நபர்களும் தாங்கள் குளிக்கின்ற தண்ணீரில் சொம்பில் இருக்கக்கூடிய தண்ணீரை கலந்து குளிக்க வேண்டும். இதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய தடைகளும் தாமதங்களும் எதிர்மறை ஆற்றல்களும் விலகும் என்று கூறப்படுகிறது. கற்கண்டும், பச்சை கற்பூரமும், மஞ்சளும் மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியதாக கருதப்படுவதால் நம்மிடம் இருக்கக்கூடிய வறுமையும், கஷ்டங்களும் நீங்கி லட்சுமி கடாட்சத்துடன் வாழ்வதற்குரிய யோகம் நம்மை வந்து சேரும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: குரு பெயர்ச்சி பலன்கள்

எளிதில் கிடைக்கக்கூடிய மகாலட்சுமி அம்சம் பொருந்திய இந்த பொருட்களை தீபாவளி அன்று கங்கா ஸ்நானம் செய்யும்பொழுது கலந்து குளிப்பதனால் லட்சுமி கடாட்சத்தை பெற முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -