
ஒரு காரியத்தில் வெற்றி அடைய வேண்டும் என்று பலமுறை முயற்சி செய்வோம். பல நாட்கள் முயற்சி செய்து வந்திருப்போம். நம் முயற்சிக்கும் வெற்றி கிடைக்காது. நம்முடைய உழைப்புக்கும் ஒரு பிரயோஜனமும் இருக்காது. இப்படி பலமுறை முயற்சி செய்து தோற்றுவர்களுக்கு இந்த பரிகாரம் உதவியாக இருக்கும். கவலையே படாதீங்க.
உங்களுடைய முயற்சிகள் முதல் முறையிலேயே, வெற்றி அடைய வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு, இந்த கயிறை உங்களுடைய கையில் கட்டிப்பாருங்கள். நிச்சயமாக முதல் முயற்சியே உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். உதாரணத்திற்கு ஒருவேளை கிடைக்க வேண்டும் என்று போராடி இருப்பீர்கள். ஒரு வீடு வாங்க வேண்டும் என்று போராடி இருப்பீர்கள். ஒரு காண்ட்ராக்ட் ஒப்பந்தமாக வேண்டும் என்று போராடி இருப்பீர்கள்.
கடன் தொல்லையில் இருந்து வெளிவர போராடி இருப்பீர்கள். இந்த பொருளை வாங்க வேண்டும் என்று போராடி இருப்பீர்கள். இப்படி போராடி போராடி தோற்றுப் போன ஒரு விஷயம். அதில் வெற்றி அடைய இந்த பரிகாரத்தை செய்து பார்ப்போமா. ஈசனையும் நம்பி பரிகாரத்திற்குள் பயணிப்போம். நிச்சயம் இந்த பரிகாரம் உங்களுக்கு எதிர்பாராத வகையில் வெற்றியைத் தேடித் தரும்.
பூஜையறையில் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். சுவாமிக்கு வெற்றிலை பாக்கு பூ பழம் வாங்கி வைத்து விடுங்கள். இந்த வெற்றிலை பாக்கு பழத்திற்கும் மேல் ஒரு மஞ்சள் நிற நூலை வைத்து விடுங்கள். கையில் கட்டும் சரடு. வெள்ளை நூலில் மஞ்சளை கலந்து சரடு தயார் செய்து கொள்ள வேண்டும். உங்களில் கையில் இந்த நூலை கட்டுவதற்கு எவ்வளவு வேண்டும். அந்த அளவுக்கு மட்டும் நூலை வைத்தால் போதும்.
கொஞ்சம் விபூதியை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த நூலை உங்கள் கையில் வைத்துக்கொண்டு நூலின் கீழ் பக்கத்தில் இருந்து மேல் பக்கமாக அந்த விபூதியை தடவி விட வேண்டும். ஈசனை நினைத்து “ஓம் நமசிவாய” மந்திரத்தை சொல்லி விபூதியை நன்றாக நூலில் தடவி பூஜை அறையில் வெற்றிலையின் மேலே இந்த நூலை வைத்து, கற்பூர ஆரத்தி காண்பித்து நீங்கள் எடுத்த காரியம் வெற்றி அடைய வேண்டும் என்று பிரார்த்தனை வைத்துக் கொள்ள வேண்டும்.
நீங்கள் எந்த முயற்சியில் அடிக்கடி தோற்றுக் கொண்டே இருக்கிறீர்கள், அந்த விஷயத்தை இறைவனிடம் சொல்லி இந்த பூஜையை செய்து, அந்த முயற்சி வெற்றி அடைய பிரார்த்தனை வைத்துக் கொள்ளுங்கள். பிறகு இந்த நூலை எடுத்து உங்களுடைய வலது கையில் கட்டிக்கொண்டு, குறிப்பிட்ட ஒரு முயற்சியில் ஈடுபட்டால் முதல் முயற்சியிலேயே உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே: அவசர பண தேவையை பூர்த்தி செய்யும் விளக்கு
பலமுறை போராடிவிட்டேன். இந்த கம்பெனியில் வேலையே கிடைக்கவில்லை என்று நீங்கள் நினைத்திருக்கலாம், பத்து முறை இன்டர்வியூக்கு போய் ஃபெயில் ஆகி இருக்கலாம். 11 வது முறை இந்த பரிகாரத்தை செய்துவிட்டு அந்த கம்பெனிக்கு இண்டர்வியூக்கு போங்க. நிச்சயம் அந்த வேலை உங்களுக்கு கிடைப்பது உறுதி. வேலை கிடைத்த பிறகு கையில் இருக்கும் கயிறைக் கழட்டி செடி கொடிகளுக்கு மேலே கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். இவ்வளவுதான் ஆன்மீகம் பரிகாரம்.