
மாதம்தோறும் அமாவாசை திதி வந்தாலும், வரக்கூடிய இந்த தை அமாவாசை என்பது முன்னோர்கள் வழிபாட்டிற்கு மிக மிக உகந்த நாளாக சொல்லப்பட்டுள்ளது. தை 16ஆம் தேதி, ஆங்கில தேதியில் 29- 1-2025 புதன்கிழமை தை அமாவாசை வரவிருக்கிறது. இந்த நாளில் உங்களுடைய வீட்டில் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன, தவிர்க்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன, ஆன்மீகம் சார்ந்த சில தகவல்களை இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
அமாவாசை வழிபாடு என்பது தாய் தந்தையர்கள் இல்லாதவர்களுக்கு மட்டும்தான். தாய் அல்லது தந்தை யாராவது ஒருவர் இல்லை என்றாலும் நீங்கள் இந்த அமாவாசை விரதத்தை கடைபிடிக்க வேண்டும். தாய் தந்தை உள்ளவர்களுக்கு அமாவாசை நாளில் எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது. கட்டுப்பாடுகள் இல்லை என்றால் திதி தர்ப்பணம் விரதம் இது போன்ற கட்டுப்பாடுகள் தான் கிடையாது.
நீங்களும் அசைவம் சாப்பிடக்கூடாது உங்களுடைய அம்மா அப்பாவிற்கு, அம்மா அப்பா இருப்பார்கள் அல்லவா, உங்களுடைய தாத்தா பாட்டி இல்லை என்றால், உங்களுடைய வீட்டில் அமாவாசை அன்று என்ன சமைக்கிறார்களோ, அதை சாப்பிட்டு உங்களுடைய நாளை கடந்து செல்ல வேண்டும் அவ்வளவுதான்.
தாய் தந்தையர்கள் இல்லாதவர்கள் அமாவாசை அன்று எழுந்து கட்டாயம் தலைக்கு குளித்து விட வேண்டும். திதி தர்ப்பணம் கொடுப்பவர்கள் காலையில் எழுந்து குளித்துவிட்டு, தர்ப்பணம் காரியங்களை முடித்துவிட்டு தான் காபி டீ குடிக்க வேண்டும் என்பது சாஸ்திரம். ரொம்பவும் உடம்பு முடியவில்லை என்பவர்கள் காபி குடித்துவிட்டு, காலை உணவு எடுத்துக் கொள்ளாமல் திதி தர்ப்பணம் காரியங்களை முதலில் முடித்துவிட்டு பிறகு, மறைந்தவர்களுக்கு படையல் போட்டுவிட்டு, அந்த உணவை மட்டும் சாப்பிட்டுக் கொள்ள வேண்டும்.
அமாவாசை திதியில் திதி தர்ப்பணம் கொடுத்தவர்கள், மதிய உணவை மட்டும் தான் சாப்பிட வேண்டும். இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது என்பதும் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கும் சாஸ்திரம். சில பேர் மாதந்தோறும் அமாவாசை வரக்கூடிய நாட்களில் முன்னோர்களை வழிபட மாட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் எல்லாம் கட்டாயமாக இந்த தை அமாவாசையில் ஒரு ஆத்தங்கரைக்கோ, குலத்தங்கரைக்கோ, கடற்கரைகோ, சென்று அங்கு இருக்கும் பிராமணரின் உதவியோடு மறைந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் செய்ய வேண்டும்.
இப்படி ஆத்தங்கரைக்கு சென்று நீர்நிலைகளுக்கு சென்று திதி தர்ப்பணம் கொடுத்துவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் குளித்து விட வேண்டும். குளித்த பிறகு தான் வீட்டு முன்னோர்களுக்கு படையல் போட்டு வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆத்தங்கரைக்குச் சென்று பிராமினர் உதவியோடு உங்களால் திதி தர்ப்பணம் காரியங்களை செய்ய முடியவில்லை என்றால், காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, நேராக கடைக்கு சென்று பச்சரிசி, பருப்பு வகைகள், காய்கறிகள், வெல்லம் வாழை இலை இது போன்ற பொருட்களை எல்லாம் வாங்கி ஒரு பையில் போட்டு சிவன் கோவிலில் இருக்கும் பிராமணருக்கோ, பெருமாள் கோவிலில் இருக்கும் பிராமின்ருக்கோ தானம் கொடுக்க வேண்டும். கட்டாயம் நீங்கள் செய்யக்கூடிய இந்த தானம் முன்னோர்களது ஆசீர்வாதத்தை பெற்றுத்தரும். இப்படி தானம் கொடுத்து விட்டு வீட்டிற்கு வந்து குளித்துவிட்டு தான் முன்னோர்களுக்கு படையல் போட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.
முன்னோர்களுக்கு படையல் போட்டு வழிபாட்டை நிறைவு செய்துவிட்டு காகத்திற்கு சாதம் வைக்க வேண்டும். மொட்டை மாடியில் இரண்டு தர்பையை வைத்து, அதன் மேலே நீங்கள் சமைத்த சாப்பாட்டை வைத்து, கூட கட்டாயம் தண்ணீர் வைக்க வேண்டும்.
சில பேர் நாங்கள் வைத்த சாதத்தை காகம் எடுக்கவில்லை என்று கவலைப்படுவார்கள். கா கா கா! என்று அழைத்துவிட்டு, சாதத்தை வைத்து விட்டு வந்து விடவும். காகம் வந்து எடுக்கவில்லை என்றால் தேவையில்லாமல் மனதை போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம்.
தை அமாவாசை அன்று வாசலில் கோலம் போடக்கூடாது. சமையலில் வெங்காயம் பூண்டு சேர்த்துக் கொள்ளக் கூடாது. அமாவாசை அன்று சமைத்த உணவுகளை உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மட்டும்தான் சாப்பிட வேண்டும். ரத்த சம்பந்தப்பட்டவர்கள் மட்டும்தான் சாப்பிட வேண்டும். மூன்றாவது நபர்களுக்கு அமாவாசை அன்ற சமைத்த சாப்பாட்டை கொடுக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. அமாவாசை அன்று அன்னதானம் செய்வது நல்லது தான்.
முன்னோர்களுக்கு படைத்த அந்த உணவை நீங்கள் மட்டும் சாப்பிட வேண்டும். நீங்களும் அமாவாசை திதியில் உங்களுக்கு சம்பந்தம் இல்லாதவர்களுடைய வீட்டிற்கு சென்று உணவு சாப்பிட்டு விட்டு வராதீர்கள். அவர்களுடைய கர்மாவை நீங்கள் வாங்கிக் கொண்டதாக அர்த்தம் ஆகிவிடும். சாஸ்திரம் அதைத்தான் சொல்லுகிறது கேட்டுக் கொள்ளுங்கள். (அமாவாசைக்கு அடுத்தவர்களுக்கு செய்யக்கூடிய தானம் தனியாக சமைத்த உணவாக இருக்க வேண்டும் அல்லது வெளியிடங்களில் வாங்கிக் கொடுத்த சாப்பாடாக இருக்க வேண்டும் பார்த்துக் கொள்ளுங்கள்).
மேலே சொன்ன விஷயத்தில் எங்களுக்கு நம்பிக்கையே இல்லை இதை எல்லாம் நாங்கள் பின்பற்றவே மாட்டோம் அப்படி என்றால், அல்லது இதையெல்லாம் செய்வதற்கு எங்களுக்கு வாய்ப்பே இல்லை என்றால் உங்களால் முடிந்த இரண்டு வயதானவர்களுக்கு, வயறார உங்கள் கையால் சாப்பாடு வாங்கிக் கொடுங்கள். இவ்வளவுதான்.
இதையும் படிக்கலாமே: தை மாத தேய்பிறை பிரதோஷ பாடல்
எங்களுடைய குடும்பத்தில் ஆண் வாரிசு இல்லை. பெண்கள் மட்டும் தான். எங்களுக்கு தாய் தந்தையர்கள் இல்லை. நாங்கள் என்ன செய்வது. நீங்களும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம். எப்படி தெரியுமா? ஆத்தங்கரைக்குச் செல்லுங்கள். அங்கு இருக்கும் பிராமினர்களிடம் உங்களுடைய பெற்றோர்களின் பெயர் கோத்திரம் எல்லாம் சொன்னால், உங்களுக்கு பதிலாக அந்த பிராமிணர், உங்களுடைய முன்னோர்களுக்கு திதி தர்ப்பண காரியங்களை நிறைவாக செய்து வைப்பார். உங்களுடைய ரூபத்தில் கடமைகளை அந்த பிராமணர் செய்யலாம். இதற்கு சாஸ்திரத்தில் இடம் உண்டு.