அந்த காலம் தொட்டே மனிதர்களுடைய மனது, கஷ்டமாக இருக்கும்போதும் சரி, அல்லது சந்தோஷமாக இருக்கும் போதும் சரி, ஒரு பாடலை காதால் கேட்டால் அவர்களுடைய கஷ்டங்கள் குறையும். அதேபோல சந்தோஷம் இரட்டிப்பாகும். மனிதர்களுக்கு மட்டுமல்ல. இறைவனுக்கும் இந்த பாடலில் ஒரு ஈர்ப்பு இருக்கிறது. பாடல்களைப் பாடி மனிதர்களுடைய மனதை எப்படி வசப்படுத்துகின்றோமோ, அதே போல பாடல்களை பாடி இறைவனையும் நாம் வசியம் செய்யலாம்.
நம்முடைய வேண்டுதலை இறைவனிடம் சொல்வதற்கு முன்பு அவர்கள் மனதிற்கு பிடித்த பாடலை படித்துவிட்டு, அதன் பின்பு பிரார்த்தனை செய்யும் போது நம்முடைய பிரார்த்தனை கூடிய விரைவில் பலிக்கும். அந்த காலம் தொட்டு இந்த ரகசியம், சிவனடியார்களுக்கு தெரிந்திருக்கிறது. அதனால் தான் சிவபெருமானுக்கு தேவாரம், திருவாசகம், திருப்புகழ், என்று பாடல்களை பாடி பாடி வேண்டிய வரங்களை பெற்று, இன்று இறைவன் திருவடியை சேர்ந்து உள்ளார்கள்.
அவர்கள் பாடியது போல நம்மால் புதுப்புது பாடல்களை சிவபெருமானுக்காக பாட முடியாது என்றாலும், அவர்கள் பாடிய பாடலையே சிவபெருமானுக்காக பாடி, அவன் அருள் பெற்று, அவன் பாதங்களை வணங்குவோம். அந்த வகையில் இன்றும் ஒரு சிறப்பான பாடலை பற்றி தான், ஆன்மீகம் சார்ந்த பதிவு மூலம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
இன்றைய தினம் தை மாதத்தில் வந்திருக்கும் தேய்பிறை பிரதோஷம். சிவபெருமானுக்கு உகந்த சோமவாரம் என்று சொல்லக்கூடிய திங்கட்கிழமை அன்றே இந்த பிரதோஷம் சேர்ந்து வந்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் மாத சிவராத்திரியும் என்று இருக்கிறது. எத்தனை சிறப்பு இந்த நாளில். சிவபெருமானை நினைத்து சிவனுக்கு பிடித்த ஒரு பாடலை பாடினால் அந்த சிவபெருமானின் மனம் குளிர்ந்து நம்முடைய கஷ்டங்களை தீர்த்து வைத்து விடுவான் என்ற சின்ன நம்பிக்கையோடு இந்த பாடலை இன்று படிப்போம்.
சிவ மந்திர பாடல் வரிகள்
நமாமி சங்கர பவாமி சங்கர
உமா மஹேச்வர தவ சரணம்
ஹரஹர ஹரஹர ஹரஹர சம்போ
அர்தனாரீச்வர தவ சரணம்
சிவசிவ சிவசிவ சிவசிவ சம்போ
ஸ்ரீசைலேச்வரா தவ சரணம்.
ஈசனை மனதார நினைத்துக் கொள்ளுங்கள். கஷ்டங்களை ஈசனிடம் சொல்லுங்கள். இந்த பாடலை படியுங்கள். ஈசனின் அருள் உங்களுக்கு கிடைத்துவிடும். இன்ற மாலை சிவன் கோவிலுக்கு செல்லக்கூடிய வாய்ப்பு கிடைத்தால் அந்த சிவன் கோவிலில் ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்து இந்த பாடலை நான்கு முறை படியுங்கள். ஈசனின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும். அல்லது இருந்த இடத்திலிருந்து பிரதோஷ நேரத்தில் இந்த பாடலை படிக்கலாம்.
இந்தப் பாடலைத் தான் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் கூட கிடையாது சிவன் உகந்த எத்தனையோ பாடல்கள் இருக்கிறது அதில் உங்களுக்கு பிடித்த பாடலை படித்தாலும் சரிதான். சந்தோஷம் பெருகும். மனதிற்கு ஒரு நிம்மதி கிடைக்கும் பாருங்க. அதை வார்த்தையால் சொல்லி யாராலும் புரிய வைக்க முடியாது. இந்த பாடலின் பாடி முடித்தவுடன் உங்கள் கண்களில் இருந்து இரண்டு சொட்டு தண்ணீர் வந்து விட்டால் போதும்.
இதையும் படிக்கலாமே: கடனை தீர்க்கும் தை அமாவாசை பரிகாரம்
சிவனின் ஆசிர்வாதம் உங்களுக்கு பரிபூரணமாக கிடைத்தது என்று அர்த்தம். சிவன் உங்களை நெருங்கி விட்டான் என்று அர்த்தம். நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த பாடல், இந்த பதிவு சமர்ப்பணம். “ஓம் நமசிவாய” சிவன் அடியார் பாதங்கள் பதிவோம் “சிவ சிவ” நாமத்தை சொல்லுவோம். செல்வாக்கோடு வாழ்வோம் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.