
நாளை தை மாதம் 30ஆம் தேதி. தை கடைசி நாளும் கூட. இந்த நாளில் தை மாத பௌர்ணமி திதி வந்திருக்கிறது. இந்த பிரபஞ்ச சக்தி அதிகரிக்க கூடிய நாள். இந்த நாளில் அனைவரும் சந்திர பகவானை வணங்க வேண்டும் கோவிலுக்கு சென்று இறை வழிபாடு செய்வதில் தான் கஷ்டம். வீட்டில் இருந்தபடியே வானத்தைப் பார்த்து, உதிக்கும் நிலவைப் பார்த்து வழிபாடு செய்வதில் என்ன கஷ்டம்.
முழு நிலவைப் பார்த்து ஒரே ஒரு நிமிடம் நமஸ்காரம் செய்து, சந்திர பகவானே வாழ்க்கையில் எனக்கு எல்லா நன்மைகளும் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டாலே போதும். உங்களுக்கான முழு அருளும் கிடைத்துவிடும். அந்த சந்திரனின் ரூபத்தில் அம்பாள் ஈசன் முருகப்பெருமான் விநாயகர் பெருமாள் அனைவருடைய ஆசீர்வாதமும் உங்களுக்கு கிடைக்கும்.
இந்த பூமியில் சூரியனும் சந்திரனும் தான் நம்முடைய கண்ணுக்குத் தெரிந்த தெய்வங்கள். ஆகவே இவர்களை வழிபாடு செய்ய என்றுமே நாம் தவறக்கூடாது. இந்த சக்தி வாய்ந்த பௌர்ணமி நாளில் நம்முடைய வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்றால், செய்ய வேண்டிய ஒரு பிரியாணி இலை தாந்திரீக பரிகாரத்தை பற்றி தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
பௌர்ணமி திதியானது புதன்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கிறது. புதன்கிழமை நாள் முழுவதும் எந்த நேரத்தில் வேண்டும் என்றாலும் இந்த பிரியாணி இலையில் உங்கள் கோரிக்கையை எழுதலாம். கருப்பு நிற பேனாவை தவிர்த்து, மற்ற ஸ்கெட்ச் பேனா எது வேண்டும் என்றாலும் பயன்படுத்தி பிரியாணி இலையின் மேல் உங்களுடைய கோரிக்கையை ஒரு வரியில் எழுதுங்கள்.
உங்களுக்கு என்ன தேவை இருந்தாலும் அந்த தேவை பூர்த்தியாக வேண்டுதலை வைக்கலாம். உங்களை விட்டு என்ன விஷயம் விலகி செல்ல வேண்டுமோ அந்த விஷயத்தையும் ஒரு வரியில் எழுதலாம். உதாரணத்திற்கு எல்லோருக்கும் புரியும்படி சொல்லப் போனால் கடன் சுமை என்னை விட்டு விலக வேண்டும் என்று எழுதலாம். நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று எழுதலாம்.
சொந்த வீடு வாங்க வேண்டும், சொந்த நிலம் வாங்க வேண்டும், நல்ல வேலை கிடைக்க வேண்டும், ஆரோக்கியம் பெற வேண்டும், குழந்தை வரம் வேண்டும், திருமண பாக்கியம் வேண்டும், என்று என்ன வேண்டும் என்றாலும் எழுதலாம். எழுதக்கூடிய வேண்டுதல் உங்களுக்கு மட்டும் புரிந்தால் போதும். அதுபோல வார்த்தையில் அந்த பிரியாணியிலையில் உங்களுடைய வேண்டுதலை எழுதி வைத்து விடுங்கள்.
பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி புதன்கிழமை தை 30ஆம் தேதி மாலை 6:30 மணிக்கு பௌர்ணமி நிலவானது உதித்து பிரகாசமாக ஜொலிக்கும் அந்த சமயத்தில் மொட்டை மாடி கோ அல்லது வெட்ட வெளியான இடத்திற்கோ சென்று இந்த பிரியாணி இலையை உங்கள் கையில் வைத்துக்கொண்டு, நிலவிடம் தாய் சக்தி தேவியிடம் உங்களுடைய வேண்டுதலை சொல்லி பிரியாணி இலையை நெருப்பில் எரித்து விட வேண்டும். அகல் விளக்கில் தீபம் ஏற்றியும் எரிக்கலாம்.
இதையும் படிக்கலாமே: தைப்பூசம் சண்முக மந்திரம்
மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து எரிக்கலாம். எல்லாமே அந்த அக்னி பகவானின் சொரூபம் தான். இவ்வளவு தான் பரிகாரம். பௌர்ணமி திதியில் இந்த பரிகாரத்தை செய்தாலே உங்களுடைய வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. எவ்வளவு பணம் செலவு செய்து, எவ்வளவோ முயற்சிகளை, பரிகாரங்களை, பூஜை புனஸ்காரங்களை செய்கின்றோம். பைசா செலவில்லாமல் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பாருங்களேன். நீங்கள் நினைத்தது நிச்சயம் நடக்கும் எனற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.