- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதைப்பூசம் சண்முக மந்திரம்

தைப்பூசம் சண்முக மந்திரம்

- Advertisement -

இன்று தைப்பூசம். காலை முதல் முருக பக்தர்கள் எல்லாம் வீட்டின் அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்றோ, அல்லது பிரசித்தி பெற்ற முருகன் ஸ்தலங்களுக்கு சென்றோ வழிபாட்டை நிறைவு செய்திருப்பீர்கள். தைப்பூசம் என்றால் குறிப்பிட்ட இந்த முருகன் கோவிலுக்கு தான் செல்ல வேண்டும் என்ற எந்த கட்டாயமும் கிடையாது. எல்லோராலும் எல்லா இடத்திற்கும் சென்று, எல்லா முருகனையும் தரிசனம் செய்ய முடியாது.

உங்கள் வீட்டு பக்கத்தில் எந்த முருகன் கோவில் இருக்கிறதோ, அந்த முருகன் கோவிலுக்கு சென்று முருகனை வழிபாடு செய்யுங்கள். கூட்டமாக இருக்கும் கோவிலுக்கு தான் செல்ல வேண்டும் என்று, கூட்ட நெரிசலில் சிக்கி புதுசாக பிரச்சனையை இழுத்து விட்டுக் கொள்ள வேண்டாம். பிரச்சனைகள் சரியாக வேண்டும் என்பதற்காகத்தான் கோவிலுக்கு செல்கின்றோம். கூட்ட நெரிசலில் கோவிலுக்கு செல்வதால் எந்த பிரச்சனையும் வந்து விடக்கூடாது. இதை நினைவில் வைத்துக் கொண்டு இந்த பதிவை தொடருவோம்.

- Advertisement -

அவரவருக்கு என்ன சூழ்நிலையோ அதற்கு தகுந்த படி முருகன் வழிபாட்டை செய்து முடித்து விடுங்கள். உங்களுடைய வீட்டில் வேல் இருந்தாலும் அல்லது முருகனது சிலை இருந்தாலும், கட்டாயம் அதற்கு சின்னதாக ஒரு பால் அபிஷேகமாவது செய்து ஒரு பூ வைத்து, இரண்டு கற்கண்டு வாழைப்பழமும் வைத்து வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். வேலைக்கு செல்பவர்கள் இருக்கிறார்கள். வீட்டில் இருந்தும் வழிபாடு மேற்கொள்ள முடியாதவர்களும் இருக்கிறார்கள்.

எந்த சூழ்நிலையில் நீங்கள் இருந்தாலும் சரி, “முருகா முருகா முருகா” என்ற நாமத்தை உச்சரித்து “அரோகரா” என்ற மந்திரத்தை உச்சரித்து பின் சொல்லக் கூடிய இந்த மந்திரத்தை மட்டும் படித்து விடுங்கள். உங்கள் வாழ்வில் இருக்கும் கஷ்டங்கள் இன்றோடு முடிந்துவிடும். எதிரி தொல்லையோ, எதிர்மறை ஆற்றலால் உண்டாக்கப்படும் பிரச்சினைகளோ, கண் திருஷ்டியோ, நோய்நொடி பிரச்சனையோ உங்களை எதுவுமே செய்யாது. இன்றைய தினம் ஒவ்வொரு முருக பக்தர்களும் படிக்க வேண்டிய மந்திரம் இது.

- Advertisement -

சண்முக மந்திரம்

ஓம் நமோ பகவதே
சுப்ரமண்யாய ஷண்முகாய மகாத்மனே
ஸ்ர்வ சத்ரு ஸ்ம்ஹார
காரணாய குஹாய மஹா பல பராக்ரமாய

வீராய சூராய மக்தாய மஹா பலாய
பக்தாய பக்த பரிபாலனாயா
தனாய தனேஸ்வராய
மம ஸர்வா பீஷ்டம்

- Advertisement -

ப்ரயச்ச ஸ்வாஹா!
ஓம் சுப்ரமண்ய தேவதாய நமஹ!

இதையும் படிக்கலாமே: கடன் தீர்க்கும் தைப்பூச வழிபாடு

முடிந்தவர்கள் நேரம் இருப்பவர்கள் பூஜை செய்யும் போது, பூஜை அறையில் அமர்ந்து 11 முறை இந்த மந்திரத்தை சொல்லலாம். வெளியில் இருப்பவர்கள், வேலை செய்பவர்கள், பூஜை செய்ய முடியாத சூழ்நிலையில் இருப்பவர்கள் எல்லாம் இருந்த இடத்திலிருந்து ஒரே ஒரு முறை இந்த மந்திரத்தை படித்து விடுங்கள். முருகனின் அருள் ஒவ்வொருவருக்கும் போய் சேர வேண்டும் என்பதற்காக இந்த பதிவு, இந்த மந்திரம். முருக பக்தர்களுக்கு இந்த பதிவும், முருகனின் அருளை பெற்று தரும் என்ற நம்பிக்கையில், ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்