
ஒருவருக்கு கஷ்டம் ஏற்படுவது என்பது சாதாரண விஷயம் தான். ஆனால் அந்த கஷ்டம் தொடர்ந்து கொண்டே வரும் பொழுது அதனால் பல மன வேதனைகளுக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அந்த சூழ்நிலைக்கு தள்ளப்பட்டவர்கள் நம் தலையெழுத்து மாறாதா என்று ஏங்கிக் கொண்டு இருப்பார்கள். அப்படி அவர்களின் தலையெழுத்தை மாற்றுவதற்கு வாராகி அம்மனுக்கு எந்த முறையில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
வாராகி அம்மன் வழிபாடு என்பது இன்றைய காலத்தில் பலரும் மேற்கொள்ளக்கூடிய வழிப்பாடாகவே திகழ்கிறது. நம்முடைய கஷ்டங்களையும் நமக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளையும் தீர்க்கக் கூடிய ஒரு அற்புதமான தெய்வமாக திகழ்பவள்தான் வாராகி அம்மன். அப்படிப்பட்ட வாராகி அம்மனுக்கு எந்த முறையில் தீபம் ஏற்றி நம் தலையெழுத்தை மாற்ற வேண்டும் என்று தான் பார்க்கப் போகிறோம்.
இந்த வழிபாட்டை நாளைய தினம் அதாவது ஆடி முதல் வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். பிரம்ம முகூர்த்த நேரத்திலோ அல்லது காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள்ளோ அல்லது 9 மணியிலிருந்து 10 மணிக்குள்ளோ அல்லது 10:30 மணியிலிருந்து 12 மணிக்குள்ளோ மாலை 6:30 மணியிலிருந்து 7:30 மணிக்குள்ளோ இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள்ளோ அல்லது 9:40 மணியிலிருந்து 10:50 மணிக்குள்ளோ உங்களுடைய வசதிக்கேற்றவாறு ஏதாவது ஒரு நேரத்தை தேர்வு செய்து இந்த வழிபாட்டை செய்ய வேண்டும்.
வீட்டில் இருக்கக் கூடிய வாராஹி அம்மனின் படத்திற்கோ, சிலைக்கோ அபிஷேகம் செய்து மஞ்சள் குங்குமம் வைத்து மலர்களால் அலங்கரித்து கொள்ளுங்கள். வாராகி அம்மனுக்கு நெய்வேத்தியமாக தேன், நெல்லிக்காய், பானகம் போன்றவற்றை வைக்க வேண்டும். பிறகு ஒரு தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வலது உள்ளங்கை முழுவதும் மஞ்சளை நன்றாக தடவி அந்த கையை அப்படியே அந்த தாம்பாள தட்டி மேல் வைத்து அழுத்தி விடுங்கள்.
கையின் அச்சு அப்படியே தாம்பாலத்தில் விழுகும். இப்பொழுது அந்த அச்சில் நடுவே குங்குமத்தை வைத்துவிட்டு அந்த குங்குமத்திற்கு மேலாக ஒரு அகல் விளக்கை வைத்து அதில் நல்லெண்ணெய் நெய் இரண்டும் சரிசமமாக கலந்து ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இவ்வாறு தீபம் ஏற்றி முடித்த பிறகு அந்த தீபத்தை பார்த்தவாறு “ஓம் ஸ்ரீ மஹா வாராகியே நமோ நமஹ” என்னும் மந்திரத்தை 111 முறை உச்சரிக்க வேண்டும்.
இப்படி நம்முடைய கைரேகையை வைத்து அதற்கு நடுவில் தீபத்தை ஏற்றி வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய தலையெழுத்தே மாறும் என்று கூறப்படுகிறது. இந்த மஞ்சளை மறுநாள் எடுத்து சேகரித்து வைத்து தினமும் நிலை வாசலில் தடவி வர நம்முடைய தலையெழுத்து மாறுவதோடு நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் படிப்படியாக விலக ஆரம்பிக்கும்.
இதையும் படிக்கலாமே கஷ்டம் விலக ஆடி வெள்ளி வழிபாடு
முழு நம்பிக்கையுடன் வாராகி அம்மனை நினைத்து இந்த முறையில் கைரேகை தீபம் ஏற்றி வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய தலையெழுத்து மாறும் நன்மைகள் உண்டாகும்.