- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

தானம் செய்யும் முன்பு செய்ய வேண்டியது

- Advertisement -

தானம் என்பது நம்மை மட்டும் நல்ல முறையில் வாழ வைப்பதற்கான செயல் அன்று. நம்முடைய தலைமுறையிலிருந்து அடுத்த சந்ததியினர் வரை ஏழு ஏழு ஜென்மத்திற்கும் தொடரக் கூடிய அற்புதமான செயல். அத்தகைய தானத்தை மனிதனாகப் பிறந்த அனைவரும் கட்டாயமாக செய்ய வேண்டும் என்று அனைத்து சாஸ்திரங்களும் சொல்கிறது.

ஒரு சிலருக்கு தான தர்மங்கள் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கு ஏற்ற வசதி வாய்ப்புகள் அவர்களிடம் இருக்காது. இப்படியானவர்களும் நல்ல முறையில் தானம் செய்து தானும் தன்னுடைய சந்ததியினரையும் பலமாக வாழ வைத்துக் கொள்ள ஒரு அற்புதமான முறையைப் பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

தானம் செய்யும் முன் செய்ய வேண்டியது

தானம் செய்ய வேண்டும் என்ற சொன்னவுடனே பலரும் பல லட்சங்களை செலவு செய்ய வேண்டும் தங்கங்களை வாரி இறைக்க வேண்டும் என்று கருத வேண்டாம். உங்களால் என்ன முடியுமோ அதை செய்தாலே போதும். அது சிறந்த தானமாக கருதப்படும்.

பல லட்சங்களை வைத்திருப்பவர்கள் அதில் சில ஆயிரங்களை பிறருக்கு தானமாக செய்வது காட்டிலும் தன்னிடம் இருக்கும் ஒரு ரூபாயிலும் இன்னொருவருக்கு பகிர்ந்து தானமாக செய்வது தான் தானத்தில் மிகவும் சிறந்ததாகவே கருதப்படுகிறது. அந்த வகையில் தாகத்தால் தவிப்பவருக்கு பத்து ரூபாய்க்கு தண்ணீர் பாட்டில் வாங்கிக் கொடுத்தால் கூட அது பெரும் தானம் செய்த பாக்கியத்தை தரும்.

- Advertisement -

அதே போல் உங்கள் முன்னோர் வழிபாட்டு தினங்களிலும் நீங்கள் வீட்டில் விசேஷ பூஜைகள் செய்யும் நேரத்திலும் யாரேனும் ஒரு எளியவருக்கு வயிறார உணவு வாங்கிக் கொடுத்தாலும் அதை விட பெரிய பாக்கியம் ஏதும் இல்லை என்று சொல்லப்படுகிறது.

அதுமட்டுமின்றி இல்லாத எளியவருக்கு செருப்பு, குடை போன்ற இது எளிய பொருட்களை வாங்கிக் கொடுப்பதும் பெரும் தானத்தை சேர்ந்தே. ஆகையால் தியானம் செய்ய என்னிடம் வருமானம் இல்லையே என்ற கவலை இல்லாமல் உங்களிடம் இருப்பதில் சிறிதளவு செய்தாலே போதும். அது பல மடங்காக பெருகி உங்களிடம் திருப்பி வரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

- Advertisement -

மனிதர்களுக்கு செய்யும் தானத்தை விட சிறந்தது வாயில்லா ஜீவராசிகளுக்கு உணவளிப்பது, காக்கை குருவிகளுக்கு தானியங்கள்தண்ணீ ர் வைப்பதும், தெருவோரம் இருக்கும் நாய்களுக்கு உணவளிப்பது பசு மாட்டிற்கு தானம் கொடுப்பது எல்லாம் தானதிலே சிறந்த தானமாக கருதப்படுகிறது.

இவையெல்லாம் போதாது நான் இன்னும் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்றால் மகாலட்சுமி தாயாரும் குபேரரும் தான் நம்முடைய செல்வ வளத்திற்கு அதிபதியான தெய்வங்கள். அவர்களிடம் நீங்கள் ஒவ்வொரு தானம் செய்யும் போது நீ எனக்கு அருளியதை என்னால் முடிந்த அளவுக்கு நான் பிறருக்கு அருளுகிறேன் இன்னும் என்னால் தர எனக்கு அருள் செய்யுங்கள் என்ற இந்த வேண்டுதலை எப்போதும் வையுங்கள்.

அவர்களுடைய அருள் ஆசியால் உங்களுடைய செல்வ வளம் நீங்கள் நினைக்கும் தானத்தை செய்யும் அளவிற்கு பெருகும். இதை நீங்கள் தானம் செய்யும் போது மட்டும் தான் செய்ய வேண்டும் என்று இல்லை தினமும் கூட பூஜை அறையில் ஒரு ஐந்து நிமிடம் அவர்களை மனதார நினைத்து இப்படி வேண்டி பாருங்கள்.

உங்களுடைய செல்வ நிலை மாறுவதுடன் நீங்கள் நினைக்கும் படியான தர்ம பிரபுவான வாழ்க்கையை வாழக்கூடிய அளவுக்கு உங்களுடைய நிலை உயரும்.மனிதராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும் என்ற வாசகம் ஒரு நாளும் பொய் ஆகாது. மனிதராய் பிறந்தவர் பிறருக்கு செய்யும் இந்த தான தர்மங்கள் தான் இதற்கு சிறந்த எடுத்துக் காட்டு.

இதையும் படிக்கலாமே: நினைத்தது நிறைவேற மந்திரம்

அத்தகையான தர்மங்களை செய்து தான் வாழ்வதுடன் தன்னைச் சார்ந்தவர்களையும் வாழ வைப்பது சிறந்த வாழ்க்கை. அத்தகைய வாழ்க்கையை அருள இப்படி தெய்வங்களை வணங்கி நல்ல முறையில் வாழ வழி தேடலாம் என்ற இந்த கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்

- Advertisement -