- Advertisement -
- Advertisement -

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கனவுகள் எதிர்பாராத சமயங்களில் திடீரென ஆழ்ந்த தூக்கத்தில் தோன்றும். இந்த கனவுகளுக்கு என்ன காரணம்? என்பது யாருக்கும் தெரிவதில்லை. சில சமயங்களில் நம் ஆழ்மன எண்ணங்களில் ஓடும் விஷயங்கள் கனவுகளாக வரும். சில சமயங்களில் சம்பந்தமில்லாமல் யார் யாரோ நம் கனவில் வந்து போவார்கள். இப்படி வித்தியாசமான கனவுகளில் தங்கம் எந்தெந்த முறையில்? எப்படிப்பட்ட சூழ்நிலையில் வந்தால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும்? என்னும் அரிய ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள போகிறோம்.

பொதுவாக தங்கம் கனவில் வருவது ரொம்பவே சுபசகுனமாக கருதப்படுகிறது. தங்கம் நகைகளாக வரும் பொழுது நகைக்கேற்ப பலன்களும் மாறுபடுகிறது. தங்கம் கட்டியாக உங்கள் கனவில் வந்தால் உங்களுடைய காதல் வாழ்க்கை சிறப்பாக அமையப்போகிறது என்று அர்த்தம். இதுவரை நீங்கள் காதலிக்கவில்லை என்றால் இனி காதலிக்க போகிறீர்கள் என்று அர்த்தம்.

- Advertisement -

தங்க மோதிரம் கனவில் வந்தால் வெற்றி உங்களைத் தேடி வரப்போகிறது என்று அர்த்தம். எந்த விஷயத்தில் உங்களுக்கு வெற்றி தேவைப்படுகிறதோ, அந்த விஷயத்தை நோக்கி பயணம் செய்யலாம் என்பதை அறிகுறியாக எடுத்துக் கொண்டு செயல்படலாம். தங்கம் செயின் அல்லது சங்கிலி போல உங்களுக்கு கனவில் வந்தால் தொலைதூரத்தில் இருக்கும் உறவுகளுக்குள் அன்பு அதிகரிக்கும். அந்த உறவு பலமாக அமையப்போகிறது என்பதை குறிக்கும்.

தங்கத்தை நெக்லஸ் அல்லது ஹாரம் போன்ற நகைகளாக கனவில் வந்தால் நிறைவேறாத ஏதோ ஒரு ஆசை உங்களுக்கு இருப்பதை அது குறிக்கிறது. சீக்கிரம் அது நிறைவேறும் என்பதையும் சொல்லுகிறது. ஒருவர் தங்க நகை வாங்க வேண்டும் என்றால் அதற்கு மகாலட்சுமியின் அனுக்கிரகம் கண்டிப்பாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அவர்களால் தங்க நகைகளை வாங்க முடியும். தங்கம், தெய்வ குறியீடுகளை கொண்டு கனவில் வந்தால், அதாவது ஸ்வஸ்திக், ஓம், சூலம், தேர் போன்ற குறியீடுகள் கொண்டு கனவில் வந்தால் கடவுளின் ஆசிர்வாதம் கிடைத்துள்ளது இனி நடப்பதெல்லாம் நன்மைக்கு என்று அர்த்தம்.

- Advertisement -

தங்கம் தொலைவது போல கனவில் கண்டால் இது அசுப சகுனமாக கருதப்படுகிறது. வீட்டில் எதிர்மறையான சில விஷயங்கள் நடக்க வாய்ப்புகள் உண்டு. தங்கம் மக்களின் சிறு முதலீடாகவும், ஆபத்துக் காலத்தில் காக்கும் கடவுளாகவும் இருக்கிறது. மக்களின் மகிழ்ச்சிக்கு அடையாளமாக இருக்கிறது. இந்த தங்கம் தொலைந்தது போல கனவு வந்தால் சொத்துக்களை பத்திரப்படுத்துங்கள். யாரையும் நம்பி பணம், நகை, பத்திரம் போன்றவற்றை ஒப்படைக்காதீர்கள்.

உங்கள் கனவில் வேறு யாராவது தங்க நகை அணிந்திருப்பது போல நீங்கள் கனவு கண்டால் நெருங்கிய உறவினர் ஒருவருக்கு ஆபத்து வரப்போகிறது என்பதை அது குறிக்கிறது. தங்க நாணயம் கனவில் வந்தால் வாழ்க்கையில் எல்லா வசந்தமும் கைக்கூடி வரப்போகிறது என்று அர்த்தம். தொழில், உத்தியோகம், வியாபாரம் சார்ந்த வளர்ச்சி உயர போகிறது என்று அர்த்தம். வெற்றி மேல் வெற்றி வாய்ப்புகள் பெற போகிறீர்கள்.

இதையும் படிக்கலாமே:
தை கிருத்திகை நாளன்று படிக்க வேண்டிய பாடல்

தங்க தோடு கனவில் வந்தால் புதிய உறவுகள் அல்லது நட்புகள் வளரப் போகிறது என்பதை அது குறிக்கிறது. சமூகத்தில் உங்களின் அந்தஸ்த்து உயரும். வீட்டில் உங்களுடைய கை ஓங்கும் வாய்ப்பு கிடைக்கும். உங்களை சுற்றிலும் தங்கம் நிறைந்து காணப்பட்டால், எல்லா பிரச்சனையும் தீர்ந்து, வாழ்க்கை தரம் உயர போகிறது என்பதை குறிக்கும். தங்க திருகாணி தொலைந்தது போல் கனவில் வந்தால் இழக்க கூடாத ஒன்றை இழக்க போகிறீர்கள். அதுவே திரும்ப கிடைப்பது போல கனவில் வந்தால் இழந்த ஒன்றை திரும்ப பெறுவீர்கள். தங்கம் கனவில் பொதுவாக வந்தாலே மகாலட்சுமியை கண்டதற்கு சமமாகும்.

- Advertisement -