- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதை கிருத்திகை நாளன்று படிக்க வேண்டிய பாடல்

தை கிருத்திகை நாளன்று படிக்க வேண்டிய பாடல்

- Advertisement -

தெய்வ வழிபாடு என்பது மிகவும் சிறப்புக்குரிய வழிபாடு. இந்த தெய்வ வழிபாட்டிலேயே பல வகைகள் இருக்கிறது. விரதம் இருந்து வழிபாடு செய்வது, விரதம் இருக்காமல் வழிபாடு செய்வது, அர்ச்சனை செய்து வழிபாடு செய்வது, தீபம் ஏற்றி வழிபாடு செய்வது, அமைதியாக இருந்து வழிபாடு செய்வது, ஆலயம் சென்று வழிபாடு செய்வது, இன்னும் சிலரோ அந்த தெய்வத்திற்குரிய பாடல்களை பாடி வழிபாடு செய்வார்கள்.

நமக்கு தெரிந்த முறையில் ராகத்துடன் பாடி எந்த ஒரு தெய்வத்தை வழிபாடு செய்தாலும் அந்த தெய்வத்தின் அருள் நமக்கு கிடைக்கும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறி இருக்கிறார்கள். அதனால் தான் எந்த ஒரு அடியார்களாக இருந்தாலும் அவர்கள் வணங்கக்கூடிய தெய்வத்தை நினைத்து பாடல்களை பாடி வழிபாடு செய்திருக்கிறார்கள் என்பதை புராணங்களின் மூலம் நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். அந்த வகையில் தை கிருத்திகை நாளன்று முருகப்பெருமானுக்கு பாட வேண்டிய ஒரு பாடலைப் பற்றி தான் இந்த ஆன்மிகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

தை கிருத்திகை பாடல்

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வேண்டுதல்கள், ஆசைகள், விருப்பங்கள் இருக்கும். அவை நிறைவேறுமோ நிறைவேறாதோ என்பதும் அவர்களுக்கு தெரியாது. இருப்பினும் தெய்வத்திடம் அந்த கோரிக்கை நிறைவேற வேண்டும் என்றுதான் வழிபாடு செய்வோம். விரதம் இருந்து, தீபம் ஏற்றி வைத்து, அபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்து வழிபாடு செய்வதோடு அந்த தெய்வத்திற்குரிய பாடலை நமக்குத் தெரிந்த அளவில் பாடி வழிபாடு செய்யும்பொழுது அந்தப் பாடலின் பலனால் அந்த தெய்வத்தின் அருள் நமக்கு கிடைக்கும். அதன் மூலம் நாம் வைத்த வேண்டுதலும் நிறைவேறும்.

பொதுவாகவே விசேஷம் மிகுந்த நாட்களில் ஆலயத்தில் பாடல்கள் ஒலிப்பதை நாம் கேட்டிருக்கிறோம். இறைவன் இசை ரூபத்தில் நம்மிடம் நெருங்கி வருவார் என்பதால் தான் அப்படி பாடல்களை ஒலிக்க செய்கிறார்கள். அதே போல் தேவாரம், திருவாசகம், கவசம், அகவல், சுப்ரபாதம், அஷ்டகம், அஷ்டோத்திரம் என்று பலவிதமான இறைவனை வழிபாடு செய்வதற்குரிய பாடல்களையும் நாம் கேட்டிருக்கிறோம். இப்படி நாம் பாடல்களை கேட்பதன் மூலமும் உச்சரிப்பதன் மூலம் நாமே நேரடியாக இறைவனடி சேர்வதற்குரிய வாய்ப்புகள் நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. எந்த ஒரு வீட்டில் இந்த தெய்வீக பாடல்கள் ஒலித்துக் கொண்டு இருக்கிறது அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் நிறைந்திருக்கும் என்றும் கூறப்படுகிறது. அந்த பாடல்களில் இருக்கக்கூடிய ஒவ்வொரு வார்த்தையும் தெய்வத்தின் அருளை நமக்கு பெறச் செய்யும்.

- Advertisement -

அந்த வகையில் முருகப்பெருமானுக்கு உகந்த பாடல்களாக பல இருக்கின்றன. கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், சண்முக கவசம், வேல்மாறல், திருப்புகழ் என்று நாம் கூறிக் கொண்டே செல்லலாம். இவை அனைத்தையுமே முருகப்பெருமானுக்கு உரிய இந்த தை கிருத்திகை நாளில் நாம் பாராயணம் செய்யலாம். மேலும் முருகப்பெருமானின் மந்திரமான “ஓம் சரவணபவ” என்னும் மந்திரத்தையும் மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே இருக்கலாம். இதோடு மாலை நேரத்தில் முருகப்பெருமானுக்கு பூஜை செய்து வழிபாடு செய்வோம் அல்லவா? அந்த நேரத்தில் பின்வரும் இந்த ஒரு பாடலை மட்டும் முழுமனதோடு ஆத்மார்த்தமாக முருகப்பெருமானை நினைத்து பாடினால் கண்டிப்பான முறையில் முருகப் பெருமானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

பாடல்

“துள்ளுமத வேள்கை கணையாலே
தொல்லைநெடு நீலக் கடலாலே
மெள்ளவரு சோலைக் குயிலாலே
மெய்யுருகு மானைத் தழுவாயே
தெள்ளுதமிழ் பாடத் தெளிவோனே
செய்யகும் ரேசத் திறலோனே
வள்ளல்தொழு ஞானக் கடலோனே
வள்ளிமண வாளப் பெருமாளே”

இதையும் படிக்கலாமே:சுபிட்சம் உண்டாக செய்ய வேண்டிய தானம்
தை கிருத்திகை நாள் அன்று வழிபாடு செய்பவர்கள் இந்த ஒரு பாடலை பாடி வழிபாடு செய்தாலே முருகப்பெருமானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். அதன் மூலம் வேண்டிய வரமும் கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்