- Advertisement -
- Advertisement -

குவியல் குவியலாய் வீட்டில் தங்கம் சேருவதற்கு சுக்கிர பகவானுடைய அருள் தேவை. சுக்கிர அருள் இருந்தால் சுகபோக வாழ்க்கை கிட்டும் என்பது சாஸ்திர உண்மை. ஒருவர் சுகபோகமாக செழிப்பாக எல்லாவிதமான வசதிகளோடு வாழ்வதற்கு சுக்கிர அருள் நிச்சயம் இருக்க வேண்டும். இவரின் அருளை பெற, தங்கம் அதிகம் சேர எப்படி வழிபட வேண்டும்? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தான் தொடர்ந்து காண இருக்கிறோம்.

தங்கம் நாளுக்கு நாள் விலை ஏறிக் கொண்டே செல்கிறது. வரலாறு காணாத வளர்ச்சியை அடைந்து கொண்டே இருக்கும், இந்த தங்கம் விலை இனி சரிவது என்பது சற்று கடினமானது தான். ஒன்று பூமியிலும், மற்றொன்று தங்கத்திலும் முதலீடு செய்தவர்கள், பிற்காலத்தில் பாக்கியவான்களாக இருப்பார்கள். பூமியில் முதலீடு செய்யும் அளவிற்கு நம்மிடம் வசதிகள் இல்லாவிட்டாலும், தங்கத்தில் கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்தால் பிற்காலத்தில் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.

- Advertisement -

தங்கம் விற்கும் விலைக்கு எப்படி தங்கம் வாங்குவது? என்று புலம்புபவர்கள் சுக்கிர பகவானுடைய அருளை பெறுவதற்கு இந்த வழிபாட்டை செய்யலாம். சுக்கிர பகவானுக்கு உரித்தானது வெள்ளி! வெள்ளி என்றாலே சுக்கிரனுக்கு மிகவும் பிடித்தமான ஒரு பொருள். வெள்ளியை அதிகம் பயன்படுத்துபவர்கள் இல்லத்தில், சுக்கிர அருள் நிறைந்திருக்கும். எவர் ஒருவருடைய வீட்டில் வெள்ளி பொருட்கள் அதிகமாக இருக்கிறதோ, அங்கு சுக்கிரன் ஆட்சி செய்கிறார்.

வெள்ளி பொருட்கள் அதிகம் வைத்திருப்பவர்கள், தங்கமும் குவியல் குவியலாக சேர்த்து வைத்திருப்பார்கள். வெள்ளி அதிகம் இருக்கும் இடத்தில் தான் தங்கமும் இருக்கும். முதலில் வெள்ளி விளக்கு இருந்தால் அதை பீரோவில் பூட்டி வைக்காமல் பூஜையறையில் கண்டிப்பாக வைத்து பூஜை செய்ய வேண்டும். வெள்ளி விளக்கில் பூஜை செய்பவர்கள், சுக்கிர அருள் பெறுகிறார்கள். லக்ஷ்மி தேவி அருளை பெறவும், வெள்ளி விளக்கில் தீபம் ஏற்றலாம்.

- Advertisement -

வெள்ளிக்கிழமையில், சுக்கிர ஹோரையில் சுக்கிர பகவானை வேண்டி மகாலட்சுமியின் முன்பு வெள்ளியால் ஆன தீபத்தை வெண்தாமரை தண்டு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். சுத்தமான பசுமையாக இருக்கக் கூடிய இரண்டு வெற்றிலைகளை வைத்து, அதன் மீது வெள்ளி நாணயம் ஒன்றை வைக்க வேண்டும். வெள்ளி நாணயம் இல்லாதவர்கள், உங்களிடம் இருக்கும் வெள்ளி பொருட்கள், வெள்ளி மோதிரம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை சுத்தம் செய்து வையுங்கள். பின்பு அதன் மீது வலது கையின் மோதிர விரல் மற்றும் கட்டை விரலை பயன்படுத்தி மங்களகரமான மஞ்சளை எடுத்து கீழ் வரும் இந்த மந்திரத்தை உச்சரித்து வெள்ளியின் மீது அர்சிக்க செய்ய வேண்டும். சுக்கிர பகவானுடைய இந்த மந்திரத்தை சொல்லி மஞ்சளால் அர்ச்சிக்கும் பொழுது தங்கமானது மென்மேலும் பெருகும் என்பது ஐதீகம்.

சுக்கிர பகவான் மந்திரம் :
ஓம் சுக்கிர தேவாய நமஹ!

இதையும் படிக்கலாமே:
பணக்கஷ்டம் தீர முருகன் 1 ரூபாய் பரிகாரம்

இந்த மந்திரத்தை மூன்று முறை உச்சரித்து வெள்ளியின் மீது அர்ச்சித்த பிறகு மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். நைவேத்தியமாக வெள்ளை சாதத்தில் மொச்சையை வேக வைத்து கலந்து படைக்க வேண்டும். பிரார்த்தனை முடிந்த பிறகு பிரசாதத்தை காக்கைக்கு வைக்க வேண்டும். அன்றைய நாளில் இரண்டு பேருக்காவது மொச்சையை தானம் செய்யுங்கள். இப்படி தொடர்ந்து செய்து வர சுக்கிர பகவான் அருளால் வெள்ளி மட்டுமல்லாமல் தங்கமும் குவியல் குவியலாக சேரும்.

- Advertisement -