முருகா என்ற வார்த்தையை சொன்னால் உருகாத உள்ளம் உண்டோ. முருகன் என்ற வார்த்தையை சொன்னால் உள்ளம் உருகும் என்று சொல்லுவார்கள். அழகான முருகன் பாடல்களை பாடினால், முருகனது உள்ளமே உருகும். வெறும் கையோடு சென்று முருகனுக்கு பிடித்த பாடலை பாடி வரங்களை கேட்டு பாருங்கள். நீங்கள் கேட்டவரம், கேட்காத வரத்தை கூட அந்த முருகப்பெருமான் உங்களுக்கு கை நிறைய வாரி வாரி வழங்குவான்.
அப்படி இருக்கும்போது ஒரு ரூபாயை காணிக்கையாக வைத்து இந்த ஒரு பாடலைப் பாடி உங்களுடைய வேண்டுதலை இறைவனின் பாதத்தில் வைத்தால், நம்பிக்கையோடு வேண்டுதல் வைத்தால், நிச்சயமாக நீங்கள் கேட்ட வரம் உடனே கிடைக்கும் என்பது நம்பிக்கை. செல்வ வளத்தை வாரி வழங்கக் கூடிய ஒரு எளிமையான முருகர் வழிபாட்டையும், ஒரு எளிமையான முருகன் பாடலையும் தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
செல்வ வளம் தரும் முருகன் வழிபாடு
ஒரே ஒரு வில்வ இலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து விடுங்கள். உங்கள் வீட்டில் முருகர் திரு உருவப்படம் இருக்கும் அல்லவா. அந்தப் படத்திற்கு முன்பாக அந்த இலையையும் ஒரு ரூபாயையும் வைத்துவிட்டு, முருகா என்னுடைய மனக்கஷ்டத்தை தீர்த்து வையப்பா, கடன் சுமையை குறைத்து வையப்பா, வட்டி கட்ட முடியவில்லை, புத்தி தடுமாறி கடன் வாங்கி விட்டேன். நஷ்டமும் ஆகிவிட்டது.
இப்போது இந்த கஷ்டத்திலிருந்து எப்படியாவது என்னை விடுவித்து விடு என்று நம்பிக்கையோடு உள்ளம் உருகி வேண்டிக் கொள்ளுங்கள். செய்த தவறுக்கு எல்லாம் மன்னிப்பு கேட்டுக் கொள்ளுங்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஏதாவது தவறு செய்திருந்தால், யாரையாவது ஏமாற்றி இருந்தால், தவறான பாதையில் சென்று பணம் சம்பாதித்து இருந்தால், அதற்கெல்லாம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு, அதற்கான பிராயசித்ததை தேடி கொள்ளுங்கள்.
இந்த வேண்டுதலை வைத்துவிட்டு முருகன் முன்பு ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு இந்த ஒரு பாடலை அப்படியே பாடுங்கள். முருகனின் மனம் இலகி உருகி நீங்கள் செய்த தவறை எல்லாம் மன்னித்து உங்களுக்கான பிராயசித்தத்தையும் தந்து விடுவான். அறிந்து தவறு செய்யக்கூடாது. அறிந்தே தவறு செய்துவிட்டு முருகனிடம் மன்னிப்பு கேட்கக்கூடாது. எல்லாம் அந்த முருகனுக்கு தெரியும் ஆகவே முருகனை ஏமாத்த மாட்டிங்க.
முருகன் உள்ளம் உருக, நம்முடைய உள்ளம் உருகி பாட வேண்டிய பாடல் வரிகள் இதோ.
அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சல் என வேல் தோன்றும் – நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இரு காலும் தோன்றும்
முருகா என்று ஓதுவார் முன்.
இதையும் படிக்கலாமே: பிள்ளைகள் நன்றாக படிக்க சியாமளா நவராத்திரி வழிபாடு
இவ்வளவு தாங்க. எளிமையான இந்த பாடல் வரிகளை படியுங்கள். அந்த முருகனது பாதங்கள் உங்கள் கண்களில் தெரியும். உங்களுடைய மனதில் அச்சம் என்று சொல்லப்படும் பயம் வரும்போது ஆறுமுகம் தோன்றும். தேவையில்லாத குழப்பங்கள் வரும்போது, வேல் வந்து உங்கள் கண் முன் நின்று அந்த குழப்பத்திற்கான தீர்வினை கொடுக்கும். வாழ்வில் வெளிச்சம் பிறக்கும். இருள் நீங்கும். இவ்வளவு தான் முருகன் வழிபாடு. முருகன் பாதத்தில் வைத்த ஒரு ரூபாயை பாக்கெட்டில் வைத்துக் கொண்டால் நிறைய பணம் சேரும். நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த ஆன்மீகம் பதிவு சமர்ப்பணம்.