
நாம் ஒவ்வொருவரும் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறோம். அப்படி சம்பாதித்த பணம் நம்மிடமே நிலையாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும் நமக்கு வரும். அதனால் தான் பணத்தை வைத்து சொத்து வாங்குவது போன்ற பல வழிகளில் முதலீடு செய்து பணத்தை பத்திரமாக வைத்துக் கொள்கிறோம். அப்படி பணத்தை பத்திரமாக வைத்துக் கொள்வதற்கு உதவக்கூடிய மற்றொரு பொருள் தான் தங்கம். யார் ஒருவர் வீட்டில் பணமும் தங்கமும் எந்தவித குறையும் இல்லாமல் இருக்கிறதோ அவர்கள் வாழ்க்கை சொர்க்கத்திற்கு சமமாகவே கருதப்படுகிறது. இந்த பணத்தையும் தங்கத்தையும் அதிக அளவில் சேர்ப்பதற்கு எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றியடைய வேண்டும் என்னும் பட்சத்தில் மார்கழி மாதத்தில் எந்த மந்திரத்தை கூற வேண்டும் என்று தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
தெய்வ வழிபாட்டை நாம் மேற்கொள்வதற்கு சிறந்த மாதமாக திகழக் கூடியது மார்கழி மாதம். மேலும் அந்த மார்கழி மாதத்தில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் திருப்பாவை திருவெண்பாவை போன்ற பெருமாள் மற்றும் சிவபெருமானுக்குரிய பாடல்களை பாடி வழிபாடு செய்வது நமக்கு நல்ல பலனை தரும் என்று கூறப்படுகிறது. நம்முடைய கர்ம வினைகளை தீர்ப்பதற்கும் இது உதவும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் பணமும் தங்கமும் நம்மிடம் அதிகமாக சேருவதற்கு நாம் சொல்ல வேண்டிய ஒரு மந்திரம் இருக்கிறது. அது எந்த மந்திரம் என்று தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
இந்த மந்திரத்தை நாம் கூறும்பொழுது நம்முடைய கையில் சோம்புத்தூளை நாம் வைத்திருக்க வேண்டும். சோம்பை வாங்கி பொடி செய்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். காலையில் எழுந்ததும் முகத்தை கழுவி விட்டு வீட்டு நிலை வாசலை திறப்போம் அல்லவா? அவ்வாறு திறந்த பிறகு கையில் மோதிர விரலையும் கட்டை விரலையும் சேர்த்து வைத்தார் போல் ஒரு சிட்டிகை அளவு சோம்புத்தூளை எடுத்துக் கொள்ளுங்கள். நிலைவாசலில் நின்று கொண்டு என்னுடைய வீட்டிற்கு அஷ்டலட்சுமிகளும் எழுந்தருள வேண்டும். அனைத்து செல்வங்களையும் தந்தருள வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.
இவ்வாறு வேண்டிய பிறகு பின்வரும் இந்த மந்திரத்தை தங்களால் இயலும் பட்சத்தில் எவ்வளவு வேண்டுமானாலும் கூறலாம். குறைந்தபட்சம் மூன்று முறையாவது கூற வேண்டும். அவ்வாறு கூறி முடித்த பிறகு அந்த சோம்புத்தூளை வீட்டு வாசலில் ஊதிவிட வேண்டும். இப்படி ஒவ்வொரு நாளும் நாம் இந்த மந்திரத்தை சொல்லி சோம்புத்தூளை வாசலில் ஊதி விடுவதன் மூலம் அஷ்டலட்சுமிகளின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கப்பெற்று அதன் மூலம் பணமும் தங்கமும் அதிக அளவில் சேர ஆரம்பிக்கும்.
“ஓம் ஸ்வர்ணவர்ணாய நமஹ”
இதையும் படிக்கலாமே: ஐஸ்வர்யம் பெருக மார்கழி மாதத்தில் சொல்ல வேண்டிய வார்த்தை
இந்த எளிமையான மந்திரத்தை முழுமனதோடு யார் ஒருவர் மார்கழி மாதத்தில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் கூறி வருகிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையில் பணமும் தங்கமும் அதிக அளவில் சேர ஆரம்பிக்கும் மகிழ்ச்சியுடனும் நிம்மதியுடனும் வாழ்வார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.