- Advertisement -

எப்பேர்ப்பட்ட நோயில் இருந்தும் விடுபட இவரை ஒருமுறை தரிசித்து இப்படி வழிபாட்டால் போதும். நோய் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும்.

இந்த உலகில் மனிதனாய் பிறந்த எல்லோரும் நோயால் அவதிப்படுவது என்பது இயல்பான ஒன்று என்றாலும் சிலருக்கு மாத கணக்கில், வருட கணக்கில் நோயின் தன்மை அதிகரித்துக்கொண்டே இருக்கும். எந்த மருத்துவரிடம் சென்றாலும் குணமாகவில்லை எவ்வளவோ பணம் செலவழித்துவிட்டோம் ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை என்று நினைப்பவர்கள், யாரை எப்படி வணங்கினால் நோயில் இருந்து விடுபடலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

மகாவிஷ்ணுவின் தசாவதாரம் குறித்து நாம் அறிந்திருப்போம். ஆனால் இந்த தசாவதாரத்திற்குள் அடங்காத விஷ்ணுவின் வடிவங்களில் ஒன்றாக கருதப்படுபவர் தான் “ஸ்ரீ தன்வந்திரி”. பிரசித்தி பெற்ற பல விஷ்ணு கோவில்களில் மட்டுமே காணக்கூடிய இவர், ஆயுர் வேத மருத்துவத்தின் கடவுளாக அறியப்படுகிறார்.

- Advertisement -

தன்வந்திரி பகவானை முறையாக வழிபடுவதன் மூலம் சகல விதமான வியாதிகளும் குணமாகும் என்று நமது ஆகமங்கள் கூறுகின்றன. இவருடைய சிறு துளி அருள் நமக்கு கிடைத்தாலும் நமது உடலில் உள்ள அனைத்து நோய்களும் பரிபூரணமாக விலகும் என்று கூறப்படுகிறது.

ஒளஷத ராஜாவான தன்வந்திரி பெருமானை எப்படி வழிபடுவது என்று கேட்டால் அதற்கான விடையை இந்த ஒரு பதிவில் கூறி மாளாது. ஆனால் சுருக்கமாக கூற வேண்டுமானால் ஒரு சிறு துளசி மாலை கொண்டே அவரது அருளை நாம் பெற்றுவிட முடியும். துளசியில் மகாலட்சுமி குடியிருப்பதால் துளசி மாலை சார்த்துவது அவருக்கு மிகவும் விசேஷமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

தன்வந்திரி பகவானை மனதார வேண்டிக்கொண்டு, குறிப்பிட்ட நபரின் உடலில் உள்ள பிணி விலகவேண்டும் என்ற பிராத்தனையுடன் துளசி மாலையை நாமே நமது கையால் தொடுத்து பகவானுக்கு சார்த்துவது மேலும் விசேஷமாக பார்க்கப்படுகிறது.

புதன்கிழமை, வியாழக்கிழமை, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் இவரை வழிபடுவது விஷேஷம். பச்சை வஸ்திரம் சார்த்தி வழிபடுவதன் மூலம் நல்ல பலனை பெறலாம். நோயாளில்களின் ராசி, நட்சத்திரத்திற்கு ஏற்ப சுவாமிக்கு அர்ச்சனை, அபிஷேக செய்து வணங்கி வர நாள்பட்ட நோயும் தீர்ந்து போகும்.

- Advertisement -

மத்ஸ்ய புராணம், பத்ம புராணம், விஷ்ணு புராணம் போன்றவற்றில் ஸ்ரீ தன்வதிரி குறித்த குறிப்புகளையும், அவரே வைத்தியத்தின் அரசன் என்ற தகவல்களை நம்மால் பெறமுடிகிறது. தனது கையில் அமிர்த கலசத்தை கொண்டு காட்சி அளிக்கு இவர், தேவர்களின் பிணி நீக்கி, நிறைவாழ்வை அளித்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.

கோவிலுக்கு செல்ல இயலாதவர்கள் வீட்டில் இருந்தபடியே தன்வந்திரி பகவானை வழிபட்டு அவருக்கான தன்வந்திரி மந்திரம் கூறியும் பலன் பெறலாம்.

தன்வந்திரி மந்திரம்
தன்வந்திரி ஸ்லோகம்
சதுர்புஜம் பீத வஸ்திரம்
ஸர்வாலங்கார சோபிதம்
த்யோயேத் தன்வந்த்ரிம்
தேவம் ஸுராஸுர நமஸ்க்ருதம்.

- Advertisement -